Headlines

நாளை நீர் வெட்டு

மன்னார் மற்றும் முருங்கன் நகரங்களும் அவை அருகில் உள்ள பிரதேசங்களிலும் நாளை காலை 8.00 மணி முதல் 12 மணி நேரம் வரை நீர் விநியோகம் தடைப்படுத்தப்படும் என தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது. மன்னார் நீர் வழங்கல் திட்டத்தின் கீழ் மன்னார் மற்றும் முருங்கன், நீர் தாங்கிகளில் புனரமைப்பு பணிகள் இடம்பெறுவதன் காரணமாகவே இந்த நீர் விநியோக தடை விதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Read More

1,500 இற்கு மேல் நிலுவை இருந்தால் நீர் வெட்டு

குடிநீர் இணைப்புக்களைப் பெற்று 1500 ரூபாவிற்கு மேல் நிலுவைக் கட்டணத்தினைச் செலுத்தாமல் உள்ள நீர்ப்பாவனையாளர்களின் இணைப்புக்கள் எதிர்வரும் திங்கட்கிழமை(25) முதல் துண்டிக்கப்படவுள்ளதாக கல்முனை நிலையப் பொறுப்பதிகாரி எம்.எம். முனவ்வர் தெரிவித்தார். தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்புச் சபையின் கல்முனை நிலையப் பொறுப்பதிகாரி காரியாலயத்திற்குட்பட்ட பகுதிகளான கல்முனை, கல்முனைக்குடி, இஸ்லாமபாத், நற்பிட்டிமுனை, சேனைக்குடியிருப்பு மற்றும் மணல்சேனை ஆகிய பிரதேசங்களிலேயே இந்நீர் துண்டிப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவுள்ளன. 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடிநீர் இணைப்புக்களைக் கொண்ட தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்புச்…

Read More