Headlines

புத்தாண்டு போக்குவரத்துச் சேவையில் 6,000 பஸ்கள்!

தமிழ் – சிங்கள புத்தாண்டை முன்னிட்டு, இன்று முதல் எதிர்வரும் 25ஆம் திகதி வரை, விசேட பஸ் போக்குவரத்துச் சேவையொன்றை நடத்த, தேசிய போக்குவரத்து ஆணைக்குழு நடவடிக்கை எடுத்துள்ளது. இதற்கமைய, கொழும்பிலிருந்து பிற மாவட்டங்களுக்கான போக்குவரத்துக்காக 6 ஆயிரம் பஸ்களை சேவையில் ஈடுபடுத்தியுள்ளதாக ஆணைக்குழு தெரிவித்தது. இதற்கு மேலதிகமாக, அதிவேக நெடுஞ்சாலைகளில் பயணிப்பதற்காகவும் மேலதிக பஸ்களை சேவையில் ஈடுபடுத்தியுள்ளதாக ஆணைக்குழு மேலும் கூறியது.

Read More

இன்று முதல் விசேட பஸ் சேவைகள்!

தமிழ் – சிங்கள சித்திரைப் புத்தாண்டை முன்னிட்டு இன்று முதல் எதிர்வரும 25 ஆம் திகதி வரை பயணிகளுக்கான விசேட பஸ் சேவைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக தேசிய போக்குவரத்து ஆணைக்குழு தெரிவித்துள்ளது. கொழும்பிலிருந்து வெளி மாவட்டங்களுக்கு 6000 பஸ்களை சேவையில் ஈடுபடுத்துவதற்கு திட்டமிட்டுள்ளதாகவும், அதிவேக வீதிகளிலும் மேலதிக பஸ்கள் சேவையில் ஈடுபடுத்தப்படவுள்ளதாகவும் ஆணைக்குழுவின் தலைவர் எம்.ஏ.பி. ஹேமசந்திர குறிப்பிட்டுள்ளார்.

Read More

பஸ் முறைப்பாடுகளை 1955க்கு சொல்லுங்கள்

தமிழ், சிங்கள புத்தாண்டுக் காலத்தில் நடைமுறைப்படுத்தப்படும் விசேட பஸ் சேவையின் போது, பயணிகள் எதிர்நோக்கும் இடையூறுகள் தொடர்பில் 1955 என்ற அவசர அழைப்பிலக்கத்துக்கோ அல்லது 011-2333222 என்ற தொலைபேசி இலக்கத்துக்கோ தொடர்பினை ஏற்படுத்தி அறிவிக்க முடியும் என்று தேசிய போக்குவரத்து ஆணைக்குழு அறிவித்துள்ளது. உரிய கட்டணத்தை விட அதிகக் கட்டணம் அறவிடல், பற்றுச்சீட்டு பெற்றுக்கொடுக்காமை, உரிய பாதையில் பயணிக்காது குறுக்கு வீதிகளினூடாகப் பயணித்தல் போன்ற குற்றங்களை, பஸ் நடத்துனர்கள் மேற்கொள்வார்களாயின், அவை தொடர்பில் பயணிகள் முறைப்பாடு செய்யலாம்….

Read More