துறைமுக அதிகார சபையில் பாரிய ஊழல் மோசடிகள் ஊழியர்கள் போராட்டம்
துறைமுக அதிகார சபையின் ஊழியர்கள் இன்று அதிகார சபையின் முன்றலில் பாரிய போராட்டமொன்றினை முன்னெடுத்துள்ளனர். குறித்த போராட்டத்தை துறைமுக அதிகார சபையும் அனைத்து ஊழியர்கள் சங்கமும் இணைந்து ஏற்பாடு செய்துள்ளது. போராட்டத்தில் ஈடுபட்ட ஊழியர்கள் வழமையாக கிடைக்கும் சித்திரை புத்தாண்டுக்கான போனஸ் பணத்தொகையில் 8200 ரூபாவை குறைத்துள்ளதாக குறிப்பிட்டுள்ளனர். இதன் காரணமாக பல பிரச்சினைகளுக்கு தாம் முகம் கொடுக்க வேண்டியுள்ளதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர். அத்துடன் துறைமுக அதிகார சபையில் பல மோசடிகள் நடைபெறுவதாகவும் அவற்றை உடனடியாக நிறுத்துமாறும்…
