Headlines

எனக்கு ஞாபகமே இல்லை: துமிந்த

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பாரத லக்ஷ்மன் பிரேமசந்திர கொலையோ, 2011ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 08ஆம் திகதியன்று இடம்பெற்ற சம்பவம் தொடர்பிலோ, தனக்கு எதுவுமே ஞாபகத்தில் இல்லை என்று தெரிவித்த முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் துமிந்த சில்வா, இந்த வழக்கிலிருந்த தன்னை முழுமையாக விடுதலை செய்யுமாறும் கோரிநின்றார். பிரதிவாதிக் கூண்டிலிருந்து வாய்வழியான சமர்ப்புகளை முன்வைக்கும் போதே, அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

Read More

குற்றத்தை ஒப்புக்கொண்டார் துமிந்த

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் துமிந்த சில்வா, கடந்த 2011ஆம் ஆண்டு முதல் 2014ஆம் ஆண்டு வரையான சொத்துக்களை வெளிப்படுத்தவில்லை என்று, அவருக்கு எதிராக தொடுக்கப்பட்டிருந்த வழக்கில், குற்றங்களை ஒப்புக்கொண்டார். அத்துடன், இது தொடர்பாக தொடுக்கப்பட்டுள்ள மூன்று வழக்குகளை விரைவில் முடிவுக்கு கொண்டுவருவதற்கும் அவர் இன்று (11), கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றத்தில் இணக்கம் தெரிவித்தார்.

Read More

துமிந்த சில்வாவுக்கு பிணை

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் துமிந்த சில்வாவுக்கு கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றத்தினால் பிணை வழங்கப்பட்டுள்ளது. இலஞ்ச ஊழல் மற்றும் ஒழிப்பு ஆணைக்குழுவினால் அவருக்கு எதிராக மூன்று வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டிருந்தன. சொத்துக்கள் விவரங்களை பிரகடனம் செய்யாமையை எதிர்த்தே இந்த வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டிருந்தன

Read More