Headlines

கப்பம் கோரியே வானுடன் எரிப்பு!

தங்கொட்டுவ பகுதியில் கடந்த 11ஆம் திகதி ஐந்து பேருடன் தீயில் எரிந்த நிலையில் கண்டுபிடிக்கப்பட்ட வான் தொடர்பாக 5 சந்தேக நபர்களை கைது செய்திருப்பதாக குற்றத்தடுப்பு பொலிஸார் தெரிவித்தனர். தங்கொட்டுவ – புத்கம்பொல பகுதியில் பாழடைந்த வீதியில் எரிந்த நிலையில் இருந்த வான் தொடர்பாக 119 இலக்கத்தின் ஊடாக பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டது. தகவலையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார் அந்த வானிற்குள் இருந்து 5 சடலங்களையும் மீட்டிருந்தன. குறித்த சம்பவத்திற்கு பணம் கப்பம் பெறுதலும் ஒரு…

Read More

மின்தடையால் ஏற்பட்ட வினை

மட்டக்களப்பு – காத்தான்குடிப் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மஞ்சந்தொடுவாய் பிரதேசத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் வீடொன்றின் ஒரு பகுதி சேதமடைந்துள்ளது. நேற்று (13) நாடுபூராகவும் ஏற்பட்ட மின்தடையின் காரணமாக வெளிச்சத்திற்காக ஏற்றி வைக்கப்பட்ட மெழுகுவர்த்தியால் இந்த தீப்பரவல் ஏற்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது. மஞ்சந்தொடுவாய் தொழிநுட்ப கல்லூரி வீதியில் வசிக்கும் கோமலன் சுதா என்பவரின் வீட்டிலேயே குறித்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக காத்தான்குடி பொலிஸார் தெரிவித்தனர். நேற்று இரவு சுமார் 9.00 மணியளவில் இடம்பெற்ற இச் சம்பவத்தில் வீட்டில் இருந்த கட்டில், அலுமாரி,…

Read More

கல்முனையில் வாகனங்கள் மீது தீ வைப்பு

கல்முனை – சாஹிப் வீதியில் உள்ள வீடு ஒன்றில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஒரு கார் மற்றும் மூன்று மோட்டார் சைக்கிள்கள் தீயிட்டு எரிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். குறித்த சம்பவம் இன்று அதிகாலை இடம்பெற்றுள்ளது. பொலிஸார் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Read More