‘இலங்கைக்கு ஆதரவளித்தமை சரியே’
இலங்கையின் சிவில் யுத்தத்தில் இடம்பெற்றதாகக் கூறப்படும் சம்பவங்கள் தொடர்பில், இலங்கைக்கு ஆதரவான போக்கை போக்கை வெளிப்படுத்தியமையை, அவுஸ்திரேலியாவின் முன்னாள் பிரதமர் டொனி அபொட் நியாயப்படுத்தியுள்ளார். இலங்கைக்கெதிராக உலக வல்லரசு நாடுகள் பல ஒன்றாகக் கூடியபோது, அந்தக் கூட்டணியில் இணைவதிலிருந்து அவுஸ்திரேலியா தள்ளியிருந்ததோடு, இலங்கையோடு நெருங்கிச் செயற்பட்டிருந்தது. அப்போது, அவுஸ்திரேலியாவின் பிரதமராக டொனி அபொட்டே செயற்பட்டிருந்தார். இந்நிலையில், அவுஸ்திரேலிய ஊடகமொன்றில் பத்தியொன்றை எழுதியுள்ள டொனி அபொட், ‘இலங்கையில் இடம்பெற்ற சிவில் யுத்தத்தில் எடுக்கப்பட்ட கடுமையான, ஆனால் அனேகமாகத் தவிர்க்க…
