Headlines

லண்டனுக்கு பயணமானார் ஜனாதிபதி

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்று (11) காலை 10.20 மணியளவில் கட்டுநாயக்க விமான நிலையத்திலிருந்து லண்டன் நோக்கி பயணமானார். லண்டனில் நாளை ஆரம்பமாக உள்ள ஊழல் ஒழிப்பு மாநாட்டில் பங்கேற்பதற்காக 15 பேர் கொண்ட குழுவினருடன் ஜனாதிபதி, எமிரேட்ஸ் விமானச் சேவைக்கு சொந்தமான நுமு651 என்ற விமானத்தில் பயணமானார். இந்த விஜயத்தின் போது ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பிரித்தானிய பிரதமர் டேவிட் கமரூனை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்த உள்ளமை குறிப்பிடத்தக்கது.

Read More

தேசிய இராணுவ மாத கொடி ஜனாதிபதிக்கு அணிவிப்பு

தேசிய இராணுவ வீரர்கள் மாதம் 2016 அறிவிக்கப்பட்டு அதன் முதலாவது கொடி ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கு அணிவிக்கும் நிகழ்வு நேற்று (05) ஜனாதிபதியின் உத்தியோகப்பூர்வ இல்லத்தில் நடைபெற்றது. இராணுவ சேவை அதிகாரசபையின் தலைவர் அனோமா பொன்சேக்கா கொடியை ஜனாதிபதிக்கு அணிவித்தார். மூன்று தசாப்தகால கொடிய யுத்தத்தில் தமது இன்னுயிரை தியாகம் செய்த மற்றும் அங்கவீனமுற்ற இராணுவ வீரர்களை நினைவுகூறும் வகையில் தேசிய இராணு வீரர்கள் மாதத்தை அரசாங்கம் பிரகடனப்படுத்தியுள்ளது. கடந்த வருடம் கொடி விற்பனையினூடாக பெறப்பட்ட நிதியும்…

Read More

போதையற்ற குடும்பம் உருவாக வேண்டும் – ஜனாதிபதி

போதைபொருள் தடுப்பு மற்றும் கட்டுப்படுத்தல் தொடர்பாக பொலிஸார் தினமும் தனியாக பல மணித்தியாலங்களை ஒதுக்கி நேரடிப் பங்களிப்பை வழங்க வேண்டுமென தெரிவித்துள்ள ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன,போதையிலிருந்து மீட்டு சுதந்திரமான நாட்டை உருவாக்கி போதையற்ற குடும்பம் உருவாக வேண்டுமென்றும் ஜனாதிபதி தெரிவித்துள்ளார். போதையிலிருந்து சுதந்திரம் பெற்ற நாடு என்ற தொனிப் பொருளிலான தேசிய போதைபொருள் தடுப்பு வேலைத்திட்டத்தின் 5 ஆம் கட்டம் குருநாகலையை மையப்படுத்தி மாளிகாபிட்டிய மைதானத்தில் ஜனாதிபதியால் நேற்று முன்தினம் செவ்வாய்க்கிழமை ஆரம்பித்து வைக்கப்பட்டது. இதன்போது உரையாற்றுகையிலேயே…

Read More

மனுச நாணயக்கார பிரதியமைச்சரானார்

ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் மனுச நாணயக்கார வெளிநாட்டு வேலைவாய்ப்பு பிரதியமைச்சராக ஜனாதிபதி முன்னிலையில் சற்றுமுன்னர் சத்தியபிரமாணம் செய்துகொண்டுள்ளார்.

Read More

மின்சாரக்கதிரை என்ற சொல் இன்று அகராதியிலிருந்து நீங்கிச் சென்றுள்ளது

மக்களின் ஜனநாயகம், மனித உரிமைகள் மற்றும் சுதந்திரத்தைப் பாதுகாப்பதற்கு அர்ப்பணித்த ஒரு அரசாங்கம் என்ற வகையில் இன்று இலங்கை ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் ஆணைக்குழு உட்பட உலகின் சகல நாடுகளினதும் அங்கீகாரத்தைப் பெற்றுள்ளதுடன், அந்த அங்கீகாரத்தின் மூலம் பல வருடங்களாக இந்த நாட்டு மக்களும் அரசியல்வாதிகளும் ஊடகவியலாளர்களும் பேசிவந்த மின்சாரக்கதிரை என்ற சொல் அகராதியிலிருந்து நீங்கிச் சென்றுள்ளதாக ஜனாதிபதி தெரிவித்துள்ளார். நேற்று பிற்பகல் (28) நாரம்மலை மயுரபாத மத்திய கல்லூரியின் பரிசளிப்பு விழாவில் பிரதம…

Read More

பழிவாங்கலாலேயே ஜனாதிபதியானேன்

‘அரசியல் பழிவாங்கல்களுக்கு உள்ளானமையின் பயனாகவே, இறுதியில் இந்த நாட்டின் ஜனாதிபதியாக வரவேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது’ என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கூறினார். ‘இதேவேளை, அரசியல் பழிவாங்கல்களுக்கு உள்ளாகும் அரச உத்தியோகஸ்தர்களுக்கு தேவையான சலுகைகளை வழங்குவதற்காக குழுவொன்று நியமிக்கப்படும்’ என்றும் அவர் குறிப்பிட்டார். கொழும்பு தாமரைத் தடாக மண்டபத்தில் இன்று (29) இடம்பெற்ற அரச நிர்வாகச் சேவையின் 33ஆவது வருட மாநாட்டில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு கூறினார். இந்நிகழ்வில், பிரதமர் ரணில் விக்கிரமசிங்க உள்ளிட்ட அமைச்சர்கள்…

Read More

G7 மாநாடு: இலங்கை ஜனாதிபதிக்கு முதன்முறையாக அழைப்பு

G7 மாநாட்டில் பங்கேற்பதற்கு இலங்கை ஜனாதிபதி ஒருவருக்கு முதன்முறையாக அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் ஜேர்மனியில் எதிர்வரும் ஜுன் மாதம் நடைபெறவுள்ள இந்த மாநாட்டில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பங்கேற்கவுள்ளதாக பிரதி அமைச்சர் சுஜீவ சேனசிங்க தெரிவித்துள்ளார். அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் வாராந்த ஊடகவியலாளர் சந்திப்பு இன்று (17) கொழும்பு அரச தகவல் திணைக்களத்தில் இடம்பெற்றது. இதில் கலந்துகொண்டு கருத்து வெளியிடுகையிலேயே G7 மாநாட்டில் பங்கேற்குமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக பிரதியமைச்சர் சஜீவ சேனசிங்க தெரிவித்துள்ளார்.

Read More

கொலை செய்ய வந்தவரை விடுவியுங்கள்

‘என்னைக் கொலை செய்ய வந்தவருக்கு பொதுமன்னிப்பளித்து விடுவிக்க வேண்டும்’ என பிராந்திய அபிவிருத்தி அமைச்சர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

Read More

மத்திய மாகாண ஆளுநராக நிலுக்கா நியமனம்

மத்திய மாகாண சபையின் புதிய ஆளுனராக நிலுக்கா ஏக்கநாயக்க, சற்றுமுன்னர் ஜனாதிபதி முன்னிலையில் சத்தியப்பிரமாணம் செய்து கொண்டுள்ளார். கடந்த 14 ஆம் திகதி மத்திய மாகாண ஆளுனராக இருந்த சுராங்கனி எல்லாவல சுகயீனம் காரணமாக உயிரிழந்ததையடுத்து, காணப்பட்ட வெற்றிடத்துக்கு நிலுக்கா ஏக்கநாயக்க நியமிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Read More

போக்குவரத்துத் துறை மோசடிகளுக்கு கடுமையான நடவடிக்கை!

போக்குவரத்துத் துறையில் இடம்பெறும் ஊழல் மோசடிகளைத் தடுப்பதற்குக் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்ற கலந்துரையாடலொன்றின் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். இது குறித்து ஜனாதிபதி மேலும்  தெரிவிக்கையில், மாகாண போக்குவரத்து அதிகார சபையின் தனியார் பிரிவு மற்றும் இலங்கை போக்குவரத்து சபை ஆகியவற்றின் பேருந்துகள் ஒரே தரிப்பிடங்களில் நிறுத்தப்படுகின்றன.அங்கு இடம்பெறும் ஊழல்கள் தொடர்பில் என்னைவிட உங்களுக்கு நன்கு தெரியும்.பேருந்து உரிமையாளர்கள் மற்றும் சாரதிகளிடம் அடாவடித்தனமாக நடந்துகொள்ளும்…

Read More

ஜனாதிபதி பெயரளவிலேயே பௌத்தர் – ஞானசாரர்

இலங்கையின் ஜனாதிபதி பெயரளவிலேயே பௌத்தராக காணப்படுவதாக பொதுபல சேனா இயக்கத்தின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் தெரிவித்துள்ளார். பௌத்த பீடங்களுக்கு தலைவர்கள் இருக்கின்றாகள் என்ற போதிலும் பௌத்த மதத்தை வழிநடத்த தலைவர்கள் கிடையாது. மாறாக பௌத்த மத விவகாரங்களுக்கு பொறுப்பானவர்கள் அமைதி காத்து வருகின்றனர்.குறிப்பாக இலங்கையின் ஜனாதிபதி பெயரளவிலேயே பௌத்தராக காணப்படுவதாக கருதும்  நிலை உருவாகியுள்ளதாக அவர் குற்றம் சுமத்தியுள்ளார். இதேவேளை,ஏனைய மதங்களுடன் ஒப்பீடு செய்யும் போது பௌத்த மதத்தில் வலுவான தலைவர்கள் எவரும் இல்லாத…

Read More

நோன்பு மாத­த்தில், தேர்­தலை நடாத்­த­வேண்­டாம் – ஜனாதிபதி உத்தரவு

– A.R.A. பரீல் – தேர்தலுக்காக முஸ்லிம்களின் சமய கடமைகள் பாதிக்­கப்­படக் கூடா­தெ­னவும் எதிர்­வரும் உள்­ளூ­ராட்சி மன்றத் தேர்­தலை முஸ்­லிம்­களின் புனித மாத­மான ரம­ழானில் நடாத்த வேண்டாம் எனவும் ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன உத்­த­ர­விட்­டுள்ளார். மாகாண சபைகள் மற்றும் உள்­ளூ­ராட்சி அமைச்சர் பைசர் முஸ்­த­பா­வுக்கே ஜனா­தி­பதி இந்த உத்­த­ரவைப் பிறப்­பித்­துள்ளார். எதிர்­வரும் ஜூன் மாதம் முஸ்­லிம்­களின் புனித கட­மை­களில் ஒன்­றான நோன்பு நோற்கும் ரமழான் மாத­மா­கையால் அம்­மா­தத்தில் உள்­ளூ­ராட்சி மன்றத் தேர்­தலை நடாத்த வேண்டாம் எனவும் தேர்­தலை எதிர்­வரும் ஆகஸ்ட்…

Read More