Headlines

சில ஆய்வக பரிசோதனைகளுக்கு நியாயமான விலை

தனியார் வைத்தியசாலைகளில் மேற்கொள்ளப்படும் சில ஆய்வக பரிசோதனைகளுக்கு நியாயமான விலையை நிர்ணயிக்க சுகாதார அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது. சீ.டி ஸ்கேன், எக்ஸ்ரே ஆகிய பரிசோதனைகள் இதில் அடங்குவதாக சுகாதார அமைச்சின் பணிப்பாளர் நாயகம் பாலித மஹிபால தெரிவித்துள்ளார். தற்போது 33 ஆய்வக பரிசோதனைகளுக்கு நியாயமாக விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

Read More

பாடசாலை மாணவர்களைக் குறிவைக்கும் பாபுல்கள் : சுகாதார அமைச்சு

பாடசாலை மாணவர்களுக்கு விற்பனை செய்வதற்காக கொண்டுவரப்பட்ட பெருந்தொகை பாபுல்கள், கடந்த இரண்டு மாதங்களில் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து, கைப்பற்றப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு குறிப்பிட்டுள்ளது. மாலைதீவு, இந்தியா, பாகிஸ்தான் மற்றும் குவைத் ஆகிய நாடுகளில் இருந்து இவை இலங்கைக்கு கொண்டுவரப்பட்டுள்ளதாக, தெரிவிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு கொண்டுவரப்பட்ட சுமார் ஒரு கோடி ரூபாய் பெறுமதியான பாபுல் தொகை சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் பாலித்த மஹிபாலவால் நேற்று பரிசீலனைக்குட்படுத்தப்பட்டது. குறித்த போதைப் பொருள் அடங்கிய பாபுல் பாடசாலை மாணவர்களை இலக்கு வைத்து…

Read More

டெங்கு அபாயம் அதிகரிப்பு!

நாடு முழுவதும் டெங்கு நுளம்பு பெருகும் அபாயம் அதிகரித்துள்ளதாக சுகாதார அமைச்சு எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்த வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் நாடு முழுவதும் 837 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதாக தேசிய டெங்கு ஒழிப்பு பிரிவின் விசேட வைத்திய நிபுணர் ப்ரஷீலா சமரவீர குறிப்பிட்டுள்ளார். இதில் அநேகமான நோயாளர்கள் கொழும்பு, யாழ்ப்பாணம், கண்டி மற்றும் கேகாலை மாவட்டங்களிலேயே பதிவாகியுள்ளனர். கடந்த வருடத்தின் இறுதி மூன்று மாதங்களுக்குள் வட பகுதியில் டெங்கு நோயாளர்கள் அதிகமாக பதிவு செய்யப்பட்டுள்ளதாக தேசிய டெங்கு…

Read More