பரஸ்பர வர்த்தக உறவுகள் மேம்படும் – சீனத் தூதுக்குழுவினரிடம் அமைச்சர் றிஷாத் தெரிவிப்பு
சீனாவுக்கும், இலங்கைக்கும் இடையே விரைவில் கைச்சாத்தாகவிருக்கும் சுதந்திர வர்த்தக உடன்படிக்கையின் பின்னர், இரண்டு நாடுகளுக்குமிடையிலான பொருளாதார வர்த்தக உறவுகள், மேலும் மேம்படுமென அமைச்சர் றிசாத் தெரிவித்தார். சீனாவின் கனியவள நிறுவனத்தின் பிரதிநிதிகள், அமைச்சர் றிசாத் பதியுதீனை அவரது அமைச்சின் அலுவலகத்தில் இன்று (12/05/2016) சந்தித்து, இலங்கையின் கனியவளத் துறையில் சீன நிறுவனங்களின் முதலீடு தொடர்பாக பேச்சு நடத்தினர். இந்த சந்திப்பில் கலந்துகொண்ட சீனப் பிரதிநிதிகள், இந்தத் துறையில் தாங்கள் கொண்டுள்ள ஆர்வத்தையும், இலங்கையின் பூகோள நிலைமை கனிய…
