Headlines

இணக்கசபை வெற்றிடங்களை நிரப்ப நடவடிக்கை!

இணக்க சபைகளில் நிலவும் வெற்றிடங்களை விரைவில் நிரப்புவதற்கு நீதி அமைச்சு திட்டமிட்டுள்ளது. அதற்கமைய, 13 மாவட்டங்களில் இணக்க சபைகளில் நிலவும் வெற்றிடங்களை நிரப்பப்படவுள்ளன. இதன்படி  கிளிநொச்சி, முல்லைத்தீவு, திருகோணமலை, மன்னார், பதுளை, கண்டி, கம்பஹா, குருநாகல், ஹம்பாந்தோட்டை, காலி, மொனராகலை, கேகாலை மற்றும் புத்தளம் ஆகிய மாவட்டங்களில் குறித்த நடவடிக்கை முன்னெடுக்கப்படவுள்ளது. இதற்கான விண்ணப்பங்கள் கோரப்படவுள்ளதுடன் இணக்க சபைகளை வலுவூட்டுவதன் ஊடாக பிரதேச மட்டத்தில் நிலவும் சில பிரச்சினைகளுக்கு தீர்வைப் பெற்றுக் கொள்ள முடியும் என நீதி…

Read More

நான்கு வகையான அனர்த்தங்கள் தொடர்பில் எச்சரிக்கை

நாட்டில் தற்போது நிலவிக்கொண்டிருக்கின்ற மோசமான வானிலை தொடர்ந்து நீடிக்குமாயின், ஐந்து மாவட்டங்களில் உள்ள 26 பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட பிரதேசங்களில், நான்கு வகையான அனர்த்தங்கள் ஏற்படுவதற்கான சாத்தியக்கூறுகள் இருப்பதாக, தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவனம் எதிர்வு கூறியுள்ளது. கண்டி, இரத்தினபுரி, நுவரெலியா, கேகாலை, களுத்துறை ஆகிய மாவட்டங்களிலேயே, இவ்வாறான அனர்த்தங்கள் ஏற்படுவதற்கான சாத்தியகூறுகள் தென்படுகின்றன. மண்சரிவு, பாறை விழுகை, நில தாழிறக்கம், நிலவெட்டு சாய்வுகள் இடிந்து விழும் சாத்தியங்கள் தொடர்பிலேயே அவதானமாக இருக்குமாறு அந்நிலையம் தெரிவித்துள்ளது.

Read More

நிவாரணங்களில் ஈடுபடுவோருக்கு பொதுநலவாய அமைப்பு நன்றி

இலங்கையில் பெய்த கடும் மழைக்காரணமாக ஏற்பட்ட உயிரிழப்புக்களுக்காக பொதுநலவாயநாடுகள் அமைப்பு தமது இரங்கலை வெளியிட்டுள்ளது. குறிப்பாக கேகாலையில் இடம்பெற்ற அனர்த்தங்கள் தமது கவலையை அளிப்பதாக பொதுநலவாய நாடுகளின் பொதுச்செயலாளர் பெற்றீசியா ஸ்கொட்லேன்ட் தெரிவித்துள்ளார். இந்தநிலையில் மீட்பு நடவடிக்கைகளும் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவும் நடவடிக்கைகளுமேமுன்னிலை பெறுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார். இதற்காக பொதுநலவாய நாடுகளின் குடும்பம், மீட்புப் பணியாளர்களுக்கு தமது நன்றியைதெரிவிப்பதாகவும் பெற்றீசியா ஸ்கொட்லேன்ட் தெரிவித்துள்ளார்

Read More

3 மாவட்டங்களுக்கு கடும் ஆபத்து

மண்சரிவு அபாயமுள்ள மாவட்டங்களாக 7 மாவட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், அவற்றில் கேகாலை, இரத்தினபுரி, பதுளை ஆகிய மாவட்டங்களின் பல பகுதிகள், கடும் ஆபத்தான நிலைமையில் உள்ளன என்று தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது. மலைகள் கொண்ட பிரதேசங்களில் வசிக்கும் பொதுமக்கள், இயற்கைக்கு மாறாக நிலத்தில் வெடிப்புகள் மற்றும் நீரோட்டங்கள் ஏற்படுவதைக் கண்டால், அவை தொடர்பில் மிகவும் அவதானமாகச் செயற்பட வேண்டிய அதேவேளை, அது தொடர்பில் உடனடியாக அறிவிக்குமாறு, மேற்படி நிறுவனத்தின் மண்சரிவு தொடர்பான ஆராய்ச்சிக்குழுவின் பணிப்பாளர்…

Read More