650,000 குற்றவாளிகளின் கைவிரல் ரேகைகள்
நாடளாவிய ரீதியில் நீதிமன்றங்களால் குற்றவாளிகளாக தீர்ப்பளிக்கப்பட்ட 6 இலட்சத்து 50 ஆயிரம் குற்றவாளிகளின் கை விரல் ரேகை அடையாளங்கள் குற்றப் பதிவுப் பிரிவில் (சி.ஆர்.டி) சேமிக்கப்பட்டுள்ளதாகவும் அவை குற்ற விசாரணைக்கு பயன்படுத்தவென நாடளாவிய ரீதியில் விரிவு படுத்தப்பட்டுள்ளதாகவும் குற்றப் பதிவுப் பிரிவு பணிப்பாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சர் பிரியந்த ஜயகொடி தெரிவித்தார். கைவிரல் ரேகை ஒத்துப் பார்க்கும் சேவையை நாடளாவிய ரீதியில் விஸ்தரிக்கும், குற்ற விசாரணையின் போது கைது நடவடிக்கைகளை இலகுபடுத்தும் விதமாகவும் இரு வேறு நடவடிக்கைகளின்…
