சந்தேகங்களை ஏற்படுத்தியுள்ள சம்பூர் பாலகனின் மரணம்
சம்பூர் பகுதியையே சோகத்துக்குள்ளாக்கியுள்ள ஆறு வயதுப் பாலகனான குகதாஸ் தருஷனின் மரணத்தின் மர்மத்தை மருத்துவ அறிக்கைகள் மூலமோ அல்லது விசாரணை அறிக்கைகள் மூலமோ முழுமைக் கண்டு பிடிக்கப்பட முடியாத நிலையில் பல்வேறு சந்தேகங்கள், ஊகங்கள் எழுந்துள்ளன. இதேவேளை சிறுவனின் மரணம் தொடர்பில் உடனடியான முடிவுக்கு வரமுடியவில்லை. அத்துடன் தேவையான ஆதாரங்களை திரட்டியதன் பேரிலும் பல்வேறு பரிசோதனைகளையும் ஆய்வுகளை மேற்கொண்டதன் பேரிலுமே மரணத்துக்கான காரணத்தைக் கூற முடியும் என திருகோணமலை பொது வைத்தியசாலையின் இரசாயனப் பகுப்பாய்வு மற்றும் மருத்துவ…
