காலி முகத்திடலில் அழிக்கப்பட்ட யானை தந்தங்கள்
359 ஆபிரிக்க காட்டு யானைகளின் தந்தங்கள் காலி முகத்திடலில் இன்று (26) அழிக்கப்பட்டன. காலி முகத்திடலில் நிகழ்வொன்று ஏற்பாடு செய்யப்பட்டு இந்த யானை தந்தங்கள் அழிக்கப்பட்டதாக தெரிய வருகிறது. சர்வதேச சுங்கத் தினத்தை முன்னிட்டு இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டதாக சுங்கப் பணிப்பாளரும் ஊடகப் பேச்சாளருமான லெஸ்லி காமினி குறிப்பிட்டார். வனஜீவராசிகள் அமைச்சர் காமினி ஜயவிக்ரம பெரேரா, நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்க உள்ளிட்ட மேலும் பலர் இதன்போது பிரசன்னமாகியிருந்தனர். குறித்த காட்டு யானை தந்தங்கள் சிதைக்கப்பட்டு அழிக்கப்பட்டதாக தெரிய வருகிறது….
