Headlines

கிழக்கை வடக்குடன் இணைக்கக்கூடாது; கிழக்கு முஸ்லிம் சிவில் அமைப்புக்களின் சம்மேளம்

கிழக்கு முஸ்லிம் சிவில் அமைப்புக்களின் சம்மேளனத்தின் மாநாடு, சம்மேளனத்தின் தலைவர் மௌலவி இசட்.எம்.நதீர் தலைமையில் அம்பாறை மாவட்டத்தின் கல்முனை அஸாத்பிளாசா மண்டபத்தில் நேற்று (7) நடைபெற்றது. இதன்போது,  உத்தேச அரசியல் யாப்பு சீர்திருத்தத்தில் முஸ்லிம்களின் அபிலாஷைகளை உறுதிப்படுத்தல். நிலைமாறு கால புனரமைப்பு செயற்பாட்டில் முஸ்லிம்களின் நிலை தொடர்பான விடயம், எதிர்கால தேசிய வேலைத்திட்டங்களில் முஸ்லிம்கள் இணைந்து ஒற்றுமையுடன் செயற்பட வேண்டிய அவசியம் போன்றவை ஆராயப்பட்டு வலியுறுத்தப்பட்டன. இதேவேளை, எக்காரணத்துக்காகவும் கிழக்கு மாகாணத்தை வடக்கு மாகாணத்துடன் இணைக்கக்கூடாது என்ற…

Read More

பஸ் சேவை விஸ்தரிப்பு; பொதுமக்கள் நன்றி தெரிவிப்பு

– எம்.எம்.ஜபீர் – கல்முனை மண்டூர் பிரயாணிகள் போக்குவரத்து சேவையில் ஈடுபடும் இலங்கை போக்குவரத்து சபைக்கு செந்தமான பஸ் சேவைகள் இன்று(8)தொடக்கம் சவளக்கடை பொலிஸ் சந்தியூடாக இடம்பெற்று வருகின்றது. கடந்த காலங்களில் இச்சேவையானது சவளக்கடை உப தபால் அலுவலக சந்தியூடாகவே இடம்பெற்று வந்தது. அதன் காரணமாக 15ஆம் கிராமம், அன்னமலை உள்ளிட்ட பல கிராமங்களை சேர்ந்த மக்கள் பிரயாணிகள் போக்குவரத்து சேவையை பெறுவதில் பல்வேறு அசௌகரியங்களை எதிர்கொண்டு வந்தனர். கடந்த 1990ஆம் ஆண்டு இடம்பெற்ற பாரிய யுத்தத்தின் காரணமாக…

Read More

வெள்ளத்தினால் நிரம்பியுள்ள கல்முனை ஸாஹிறா தேசிய பாடசாலை

பெய்துவரும் அடைமழை காரணமாக கல்முனை ஸாஹிறா தேசிய பாடசாலை வெள்ளத்தினால் நிரம்பி காணப்படுகின்றது. மிக நீண்டகாலமாக மழை காலங்களில் இப்பாடசாலையில் வெள்ளம் தேங்கி நிற்பதனால் பாடசாலை மாணவர்களின் கல்வி நடவடிக்கைகள் பெரிதும் பாதிப்படைவது குறிப்பிடத்தக்கது.

Read More

1,500 இற்கு மேல் நிலுவை இருந்தால் நீர் வெட்டு

குடிநீர் இணைப்புக்களைப் பெற்று 1500 ரூபாவிற்கு மேல் நிலுவைக் கட்டணத்தினைச் செலுத்தாமல் உள்ள நீர்ப்பாவனையாளர்களின் இணைப்புக்கள் எதிர்வரும் திங்கட்கிழமை(25) முதல் துண்டிக்கப்படவுள்ளதாக கல்முனை நிலையப் பொறுப்பதிகாரி எம்.எம். முனவ்வர் தெரிவித்தார். தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்புச் சபையின் கல்முனை நிலையப் பொறுப்பதிகாரி காரியாலயத்திற்குட்பட்ட பகுதிகளான கல்முனை, கல்முனைக்குடி, இஸ்லாமபாத், நற்பிட்டிமுனை, சேனைக்குடியிருப்பு மற்றும் மணல்சேனை ஆகிய பிரதேசங்களிலேயே இந்நீர் துண்டிப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவுள்ளன. 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடிநீர் இணைப்புக்களைக் கொண்ட தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்புச்…

Read More

“கல்முனை மாநகரம்” அறிமுக விழா 18ம்திகதி

– எம்.வை.அமீர் – கல்முனை மாநகர சபை உறுப்பினரும் வரலாற்று ஆய்வாளருமான ஏ.எம்.பறக்கத்துல்லாஹ் எழுதிய “கல்முனை மாநகரம், உள்ளுராட்சியும் சிவில் நிருவாகமும்” நூல் அறிமுக விழா எதிர்வரும் 2016.03.18ம்திகதி வெள்ளிக்கிழமை கட்டாரில் இடம்பெறவுள்ளது. கட்டார் டோஹா நகரிலுள்ள பிரண்ட்ஸ் கல்சரல் சென்டர் – அல் ஹிலால் என்னும் இடத்தில் மாலை 5.00 மணிக்கு இவ்வறிமுகவிழா இடம்பெறவுள்ளது. கல்முனைக்கான மத்திய கிழக்கு அமையம் (GFK- கட்டார்) இந்நூல் அறிமுக விழாவை ஏற்பாடு செய்துள்ளது. நூல் அறிமுகவிழாவில் கலந்துகொள்ளும் பொருட்டு நூலாசிரியரான…

Read More

வாகன விபத்து : ஒருவர் பலி

– பழுலுல்லாஹ் பர்ஹான் – மட்டக்களப்பு – கல்முனை பிரதான வீதியில் காத்தான்குடி கபுறடிச்சந்தியில் இன்று (26) காலை 10.30 மணியளவில் இடம்பெற்ற வீதி விபத்துச் சம்பவத்தில் முஸ்லிம் மதத்தலைவரான மௌலவி ஒருவர் பரிதாபகரமாக உயிரிழந்துள்ளார். கல்முனை திசையை நோக்கி வேகமாக வந்த டிப்பர் வாகனம் துவிச்சக்கரவண்டியில் வந்த மௌவியை மோதியுள்ளது. படுகாயமடைந்த மௌலவி மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு கொண்டு சென்றபின் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். குறித்த வாகன சாரதி கைது செய்யப்பட்டுள்ளதுடன் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.

Read More

விபத்தில் இளைஞர் பலி : இருவர் படுகாயம்

– ஜவ்பர்கான் – மட்டக்களப்பு – கல்முனை பிரதான வீதியில் மண்முனை சந்தியில் இடம்பெற்ற வீதி விபத்துச் சம்பவத்தில் 27 வயது ஒரு குழந்தையின் தந்தையான இளைஞர் ஒருவர் ஸ்தலத்திலேயே பலியானதுடன் மேலும் இருவர் படுகாயமடைந்த நிலையில் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இச்சம்பவம் நேற்றிரவு (15) 8.00 மணியளவில் இடம்பெற்றுள்ளது. கொக்கடிச்சோலை பக்கமிருந்து வந்த துவிச்சக்கர வண்டி கல்முனை பக்கமிருந்து வந்த மோட்டார் சைக்கிளுடன் நேருக்கு நேர் மோதியதில் மோட்டார் சைக்கிளை செலுத்தி வந்த 27…

Read More

சிராஸ் மீராசாஹிப் நிபுணத்துவ ஆலோசகராக நியமனம்

– அகமட் எஸ். முகைடீன் – கல்முனை மாநகர சபையின் முன்னாள் முதல்வர் சிராஸ் மீராசாஹிப் கைத்தொழில் மற்றும் வணிக அமைச்சின் நிபுணத்துவ ஆலோசகராக அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும் கைத்தொழில் மற்றும் வணிக அமைச்சருமான றிசாத் பதியுதீனால் நேற்று (11) நியமிக்கப்பட்டுள்ளார். மேற்படி நியமனம் வழங்கும் நிகழ்வு அமைச்சு அலுவலகத்தில் நடைபெற்றது. அத்தோடு அமைச்சில் அமைந்துள்ள அமைச்சின் நிபுணத்துவ ஆலோசகருக்கான அலுவலகத்தில் தனது கடமைகளை சிராஸ் மீராசாஹிப் பொறுப்பேற்றுக் கொண்டார். குறித்த பதவியானது கைத்தொழில் மற்றும் வணிக…

Read More

மட்டக்களப்பில் பாரிய ஆர்ப்பாட்டம்

– ஜவ்பர்கான் – மண் ஏற்றுவதற்கான அனுமதி பத்திரத்தை வழங்குமாறு கோரி இன்று மட்டக்களப்பு நகரில் பாரிய ஆர்ப்பாட்டம் மற்றும் மறியல் போராட்டங்கள் இடம்பெற்றன. மட்டக்களப்பு – கல்முனை பிரதான வீதியில் அரசடியில் இப்போராட்டம் இடம்பெற்றது. மாவட்ட எம்.பீ.வியாழேந்திரனிடம் மகஜர் ஒன்றும் கையளிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Read More

கல்முனையில் வாகனங்கள் மீது தீ வைப்பு

கல்முனை – சாஹிப் வீதியில் உள்ள வீடு ஒன்றில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஒரு கார் மற்றும் மூன்று மோட்டார் சைக்கிள்கள் தீயிட்டு எரிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். குறித்த சம்பவம் இன்று அதிகாலை இடம்பெற்றுள்ளது. பொலிஸார் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Read More

வீதிகளில் தனிமையில் செல்லும் பொதுமக்கள் மிக அவதானம்

கல்முனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பிரதேசங்களில் அண்மைக்காலங்களாக வீதியோரத் திருட்டுச் சம்பவங்கள் அதிகரித்துள்ளமையினால் வீதிகளில் தனிமையாகச் செல்லும் பொதுமக்கள் மிகவும் அவதானமாக நடந்துகொள்ளுமாறு பொலிசார் வேண்டுகோள் விடுத்துள்ளனர். இது தொடர்பாக பொலிசார் தெரிவிக்கையில். கல்முனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பல கிராமங்களில் உள்ள சன நடமாட்டம் குறைவாக உள்ள உள்வீதிகளினால் பொதுமக்கள் தங்க ஆபரணங்களை அணிந்து செல்லும்போது மோட்டார் சைக்கிளில் தலைக்கவசம் அணிந்து வருபவர்கள் தங்க ஆபரணங்களை அபகரித்துச்செல்லும் நடவடிக்கைகள் அதிகரித்துக்  காணப்படுகின்றது. இதனை தவிர்த்துக்கொள்வதற்காக வேண்டி குறிப்பாக பெண்கள்…

Read More