Headlines

சபாநாயகர் பாக்கிஸ்தான் பயணம்

சபாநாயகர் கரு ஜயசூரிய பௌத்த பிக்குகள் மற்றும் புத்திஜீவிகள் அடங்கிய குழுவொன்றுடன் பாக்கிஸ்தானுக்கு ஒருவார சுற்றுப் பயணமொன்றை மேற்கொண்டுள்ளார். இந்தக் குழுவில் முக்கிய விகாரைகளின் அதிபதிகள் மற்றும் பௌத்த புத்திஜீவிகளை கொண்ட 40 பேர் உள்ளடங்கியுள்ளனர். கோட்டே ஸ்ரீகல்யாணி தர்ம சபையின் பிரதம சங்க நாயக்கர் கலாநிதி இத்தேபான தம்மாலங்கார தேரர், வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களின் பிரதான சங்கநாயக்கர் திருகோணமலை ஆனந்த தேரர், அஸ்கிரி பீடத்தின் பிரதி பதிவாளர் நாரம்பனாவே ஆனந்த தேரர், மல்வத்து பீடத்தின்…

Read More

உலக சமாதானப் பேரவையினால் சபாநாயகருக்கு இரண்டு விருதுகள்!

உலக சமாதானப் பேரவையினால் சபாநாயகர் கரு ஜயசூரியவிற்கு இரண்டு விருதுகள் வழங்கப்பட உள்ளன. எதிர்வரும் 13ம் திகதி இந்தியாவின் கொல்கொட்டா சைனா பார்க் மாநாட்டு மண்டபத்தில் நடைபெறவுள்ள நிகழ்வில் இந்த விருதுகள் வழங்கப்பட உள்ளன. 1995ம் ஆண்டு முதல் இந்த விருது வழங்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது. குற்றங்களை தடுத்தல், இன சகோதரத்துவத்தை ஏற்படுத்தல், சமூக அபிவிருத்தி, மனிதநேய செயற்பாடுகள், சமாதானம் மற்றும் ஜனநாயகத்தை மேம்படுத்தல், மதங்களுக்கு இடையிலான நல்லிணக்கத்தை அதிகரித்தல், தன்னார்வ சமூக சேவைகளில் ஈடுபடுதல் போன்ற…

Read More

பாராளுமன்றத்தில் அதிக வலிகளை சந்திக்கிறேன் – சபாநாயகர்

இரத்தம் எடுக்கும்போது ஏற்படும் வலியை விட பாராளுமன்றத்தில் அதிக வலிகளை சந்திப்பதாக சபாநாயகர் தெரிவித்துள்ளார். பாராளுமன்ற ஊழியர்களுக்காக ஏற்பாடு செய்யப்பட்டுள்ள மருத்துவ முகாம் ஒன்று இன்று பாராளுமன்றத்தில் இடம்பெற்றுவரும் நிலையில் சபாநாயகரான கரு ஜயசூரியவும் இதன்போது மருத்துவ பரிசோதனைக்கு உள்ளாக்கப்பட்டுள்ளார். இதன்போது சபாநாயகரின் இரத்தமாதிரி பரிசோதனைக்காக அவரிடம் இரத்தம் எடுக்கும் போது “சற்று வலி இருக்கும்” என தாதி ஒருவர் சபாநாயகரிடம் கூறியுள்ளார். எனக்கு இந்த வலி பெரிதாக தோன்றவில்லை காரணம் இதை விட அதிக வலிகளை…

Read More

மரண அச்சுறுத்தல் குறித்து நான் அஞ்சப் போவதில்லை : சபாநாயகர்

– ப.பன்னீர்செல்வம்  – ஆர்.ராம் –  எனது  அரசியல் வாழ்க்கையில் எத்தனையோ  அச்சுறுத்தல்களை சந்தித்துள்ளேன்.  எனவே  எனக்கெதிராக மரண அச்சுறுத்தல் தொடர்பில்  நான் அஞ்சப் போவதில்லையென  சபாநாயகர் கரு ஜயசூரிய இன்று சபையில் தெரிவித்தார். ஜே.வி.பி. தலைவர் மற்றும் எதிர்க்கட்சியின் பிரதம கொறடாவும் எம்.பியுமான அநுர திஸாநாயக்க இன்று வியாழக்கிழமை பாராளுமன்றத்தில் ஒழுங்குப் பிரச்சினையொன்றைக்  கிளப்பினார். இதில் சபாநாயகருக்கு (உங்களுக்கு) தொலை பேசி மூலம் மரண அச்சுறுத்தல் விடுக்கப்பட்டது என்று நீங்கள் நேற்று புதன்கிழமை சபையில் வெளிப்படுத்திய…

Read More

சர்வாதிகாரி போன்று செயற்படத் தயாரில்லை

ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பை அழிக்கும் பாவச்செயலில் பங்குகொள்ளமுடியாது என சபாநாயகர் கரு ஜயசூரிய தெரிவித்துள்ளார். நேற்றைய தினம் (09) நாடாளுமன்றில் உரையாற்றிய போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார். 51 நாடாளுமன்ற உறுப்பினர்கள் தனியான குழுவாக செயற்பட அனுமதி கோரி நிற்கின்றனர்.எனினும், இந்த விடயம் குறித்து தனித்து தீர்மானிக்க முடியாது எனவும், சர்வாதிகாரியைப் போன்று செயற்படத் தயாரில்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். கட்சிக்குள் குழுக்கள் இருக்க முடியும் என்ற போதிலும் குழுக்களுக்குள் கட்சிகள் இருக்க முடியாது என…

Read More

நாடாளுமன்ற நடவடிக்கைகளை அறிந்து கொள்ள புதிய மொபைல் அப்ளிகேசன்

நாடாளுமன்ற நடவடிக்கைகளை அறிந்து கொள்வதற்காக மொபைல் அப்ளிகேசன் ஒன்று அறிமுகம் செய்யப்படவுள்ளது. இலங்கை நாடாளுமன்றின் நடவடிக்கைகள் பற்றி இந்த மொபைல் அப்ளிகேசன் ஊடாக அறிந்து கொள்ள முடியும் என தெரிவிக்கப்படுகிறது. நாடாளுமன்ற நடவடிக்கைகள் குறித்த உத்தியோகபூர்வ அப்ளிகேசனை ஆரம்பிக்கும் நிகழ்வு இன்று (7) நடைபெறவுள்ளது. சபாநாயகர் கரு ஜயசூரிய தலைமையில் இந்த நிகழ்வு நடைபெறவுள்ளது. அரசாங்கத்தின் நடவடிக்கைகளை இலகுவில் மேற்கொள்ள நவீன தொழில்நுட்பத்தை பயன்படுத்தும் திட்டத்தின் அடிப்படையில் இந்த மொபைல் அப்ளிகேசன் அறிமுகம் செய்யப்படவுள்ளது.

Read More

இலங்கை மனித உரிமை ஆணைக்குழு ஜனாதிபதிக்கு கடிதம்

இலங்கையில் அமுல்படுத்த திட்டமிட்டுள்ள மரண தண்டனையை நீக்குமாறு பல யோசனைகளை முன்வைத்து கடிதம் ஒன்றினை ஜனாதிபதி மைத்திரிபால சிரிசேனவிடம் இலங்கை மனித உரிமை ஆணைக்குழு நேற்று (4) சமர்ப்பித்துள்ளது. மனித உரிமையின் அடிப்படையில் மரணத்தண்டனை கொடூரமானதாகும் மனிதாபிமானமற்றதாகும். ஆகவே மனித சமூதாயத்திற்கு மதிப்பளிக்கும் வகையில் இலங்கை செயல்பட வேண்டும் என அந்த கடிதத்தில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. ஜனாதிபதிக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ள கடிதத்தின் பிரதிகள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க சபாநாயகர் கரு ஜயசூரிய எதிர்கட்சித் தலைவர் சம்பந்தன் மற்றும் நீதி…

Read More

ஹிருணிகாவை குறித்து பொலிஸார் அறிவிக்கவில்லை: சபாநாயகர்

நாடாளுமன்ற உறுப்பினர் ஹிருணிகா பிரேமசந்திரவை கைது செய்ய வேண்டிய தேவை இருப்பதாக பொலிஸார் இதுவரையில் தமக்கு அறிவிக்கவில்லை என சபாநாயகர் கரு ஜயசூரிய தெரிவித்துள்ளார். ஹிருணிகா பிரேமசந்திர தொடர்பில் விசாரணை நடத்தப்பட்டு வருவதாக பொலிஸார் எனக்கு அறிவித்துள்ளனர். அண்மையில் தெமட்டகொட பிரதேசத்தில் இடம்பெற்ற கடத்தல் சம்பவம் தொடர்பில் ஹிருணிகாவிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகின்றது. எனினும் ஹிருணிகாவை கைது செய்ய வேண்டிய தேவை குறித்து இதுவரையில் அறிவிக்கவில்லை. பொலிஸார் முழு அளவிலான சுயாதீனத்தன்மையுடன் சம்பவம் தொடர்பில் விசாரணை நடத்துவார்கள்…

Read More