Headlines

தொலைபேசிக் கட்டணங்கள், திடீரென உயர்வு

சில தொலைபேசி இணைப்பு நிறுவனங்கள் செக்கனுக்கு 0.03 சத அதிகரிப்புடன் நிமிடத்துக்கு 1 ரூபா 80 சதமாக கட்டணத்தை அதிகரித்துள்ளது. சில தொலைபேசி இணைப்பு நிறுவனங்கள் 1 ரூபா 50 சதமாக ஒரு நிமிடத்துக்கான கட்டணத்தை அதிகரித்துள்ளது. இந்த அதிகரிப்புடன் ஒரு தொலைபேசி பாவனையாளன் பல்வேறு வரிகளுடன் சேர்த்து 1 ரூபா 94 சதத்தை கட்டணமாக செலுத்த வேண்டும். இருப்பினும், ஏற்கனவே காணப்பட்ட பக்கேஜ் இணைப்புக்கான கட்டணம் இதுவரை அதிகரிக்கப்படவில்லையெனவும் தெரிவிக்கப்படுகின்றது. அத்துடன், ஒரே தொலைபேசி இணைப்பு…

Read More

வரையறுக்கப்பட்டுள்ள மருத்துவர் கட்டணம்

தனியார் மருத்துவமனைகளில் மருத்துவ சோதனைகளை (செனலிங்) மேற்கொள்ளும் வைத்திய நிபுணர்களின் கட்டணத்தை ரூபா 2000 ஆக வரையறுப்பதற்கு சுகாதார அமைச்சு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. நோயாளர்கள் மற்றும் பல்வேறு தரப்பினரிடமிருந்து கிடைத்த முறைப்பாடுகளை அடுத்தே இந் நடவடிக்கை மேற்கொள்ளப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இத்தற்கமைய விசேட வைத்திய நிபுணர்களின் சேவையை பெற்றுக் கொள்ளும்  நோயாளர்களிடமிருந்து வைத்தியர்  கட்டணமாக 250 ரூபா தொடக்கம் ரூபா 2000 வரை அறவிடப்படலாம். விசேட வைத்திய நிபுணர் கட்டணம் உட்பட அதற்குரிய வைத்தியசாலை கட்டணமாக ரூபா 100…

Read More