கட்சி ஒழுக்க விதிகளை மீறுவோருக்கு கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்!- ஜனாதிபதி
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் ஒழுக்க விதிகளை மீறிச் செயற்படுவோருக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். தராதரம் பாராது ஒழுக்க விதிகளை மீறுவோர் தண்டிக்கப்படுவர் என அவர் தெரிவித்துள்ளார். ஜனாதிபதியின் இல்லத்தில் நேற்றிரவு (8) நடைபெற்ற ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி அமைச்சர்களுடனான சந்திப்பில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். கட்சியின் அனைவரையும் ஒன்றிணைத்து கட்சியை வெற்றிப் பாதையில் இட்டுச் செல்ல வேண்டுமென அமைச்சர்கள் ஜனாதிபதியிடம் கோரியுள்ளனர். சில தரப்பினர் கட்சியின் ஒழுக்க விதிகளுக்கு…
