ஒற்றையாட்சி மாறாது; பிரதமர்
புதிய அரசியலமைப்பினை 21 ஆம் நூற்றாண்டுக்கு ஏற்றால் போல் தயாரிக்க உள்ளோம். இதன்போது மக்களின் கருத்துக்களுக்கே பெரும் முக்கியத்துவம் அளித்து செயற்படுவோம். நான் ஒரு இலங்கையன். இந்த நாட்டை பிளவுபடுத்துவதற்கு ஒரு போதும் இடமளிக்கமாட்டேன் என பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார். நாட்டில் வாழும் அனைத்து இனத்தவர்களையும் ஒன்றிணைத்து ஐக்கியத்தை ஏற்படுத்துவதற்கு எனக்கு இடமளியுங்கள். ஒற்றையாட்சிக்கு முரணான அரசியலமைப்பை உருவாக்கமாட்டோம். மக்களை குழப் பும் வகையில் வீணான எதிர்ப்புகளை உடனடியாக கைவிடுமாறு கோருகின்றேன். உலக வரலாற் றில் முதல்…
