Headlines

முஸ்லிம் பாடசாலை நிர்மாணிக்க உள்ளூர் பௌத்த அமைப்புகள் எதிர்ப்பு

இலங்கையில் ஊவா மாகாணம் பதுளை மாவட்டத்திலுள்ள வெலிமடை பகுதியில் முஸ்லிம் ஆரம்ப பாடசாலை ஒன்றை நிர்மாணிப்பதற்கு உள்ளூர் பௌத்த அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. இந்த எதிர்ப்பு காரணமாக நேற்று வெள்ளிக்கிழமை நடைபெறவிருந்த புதிய பாடசாலைக் கட்டிடத்திற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு இறுதி நேரத்தில் கைவிடப்பட்டது. தற்போது வெலிமடை பிரதேச முஸ்லிம் மாணவர்கள் ஒன்று முதல் 12ம் வகுப்பு வரை வெலிமட முஸ்லிம் மகா வித்தியாலயத்தில் கல்வி கற்று வருகின்றனர். இப்பாடசாலையில் ஏற்பட்டுள்ள இட நெருக்கடி மற்றும் பாடசாலை…

Read More

ஊவா மாகாணத்தில் மற்றுமொரு விமான நிலையம்

ஊவா மாகாணத்தில் எளிமையான விமான நிலையம் ஒன்றை நிர்மாணிப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக போக்குவரத்து மற்றும் சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்துள்ளார். நேற்று (25) பதுளை மாவட்டத்தில் உரையாற்றும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். பண்டாரவளை நகரத்திற்கு அருகில் மகாஉல்பத்த மற்றும் தென் கெபில்லவெல கிராம சேவகர் பிரிவிற்கான மகாஉல்பத்த – நாயபெத்தவத்தை வரையிலான இடமொன்றிலே இந்த நிர்மாணிப்பு பணிகள் மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளது. இதற்கு முன்னர் விமான நிலையம் ஒன்றை நிர்மாணிப்பதற்காக ஹப்புத்தளை தொடலாகலவத்தை…

Read More

இன்றும் மழை பெய்யும்

இன்றைய தினமும் (29) நாட்டின் சில பகுதிகளில் 75 மில்லி மீற்றருக்கும் அதிகமான மழை வீழ்ச்சி நிலவும் என்று வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. வடக்கு, கிழக்கு, வடமத்திய, ஊவா மற்றம் தென் மாகாணங்களில் காலை வேளையிலும் அத்துடன் நாட்டின் ஏனைய பகுதிகளில் பிற்பகல் 2 மணிக்கு பின்னர் இடியுடன் கூடிய மழை பெய்யும் என்றும் எதிர்வு கூறப்பட்டுள்ளது.

Read More