புத்தெழுச்சி பெற்றுள்ள நோர்வே இலங்கைக்கிடையிலான உறவு
நோர்வே பிரதமர் எர்னா சோல்பெக் இலங்கைக்கு மேற்கொண்ட விஜயத்தினூடாக இரண்டு நாடுகளுக்கிடையிலான உறவு புத்தெழுச்சி பெற்றுள்ளதாக அரசாங்கம் தெரிவித்துள்ளது. இது தொடர்பில் வெளிவிவகார அமைச்சு விடுத்துள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, நோர்வே பிரதமர் இலங்கைக்கு வந்ததன் மூலம் இரண்டு நாடுகளும் தமது உறவை மேலும் வலுப்படுத்தவும் மீள்உருவாக்கம் செய்யவும் அர்ப்பணித்துக் கொண்டுள்ளன. விசேடமாக இரண்டு நாடுகளினதும் அர்ப்பணிப்பு புத்தொழுச்சி பெற்றுள்ளது. நோர்வே பிரதமர் எர்னா சொல்பெக் ஐ.நா. செயலாளர் பான்கீமூனினால் நிரந்தரமான அபிவிருத்தி இலக்கு குழுவின் இணைத்தலைவராகவும்…
