Headlines

இலங்கை மற்றும் தென்கொரியாவுக்கிடையில் புரிந்துணர்வு ஒப்பந்தம்

இலங்கை மற்றும் தென்கொரியாவுக்கிடையில் புரிந்துணர்வு ஒப்பந்தம் ஒன்று கைச்சாத்திடப்பட்டுள்ளது. குறித்த ஒப்பந்தத்தினை தென்கொரிய தேசிய பாதுகாப்பு பல்கலைக்கழகத்தின் தலைவர் லெப்டினன் ஜெனரல் வீ சேங்கோ மற்றும் இலங்கை பாதுகாப்பு இராஜாங்க செயலாளர் ருவான் விஜேவர்தன மற்றும் பாதுகாப்பு செயலாளர் கருணாசேன ஹெட்டியாராச்சி ஆகியோர் கைச்சாத்திட்டுள்ளனர்.

Read More

இலங்கைக்கு கல்வித்திட்டத்துக்கு தென்கொரியா உதவி

இலங்கையின் கல்வித்திட்டத்துக்குள், ஸ்மாட் வகுப்பறைகள், இலத்திரனியல் பாடநூல் மற்றும் இலத்திரனியல் கற்றல் போன்ற நவீன கல்வித்திட்டத்தை அறிமுகப்படுத்துவதற்கு நடவடிக்கைகளை முன்னெடுக்கவுள்ளதாக தெரிவித்துள்ள தென் கொரிய அரசாங்கம், இலங்கையிலுள்ள ஆசிரியர்களுக்கான வருடாந்த ஆசிரியர் பயிற்சி திட்டத்தை தொடர்ந்தும் நடத்தும் என்றும் உறுதியளித்துள்ளது. உத்தியோகப்பூர்வ விஜயத்தை மேற்கொண்டு தென்கொரியாவுக்குச் சென்றிருந்த கல்வியமைச்சர் அகில விராஜ் காரியவசம், குவாங்ஜூ நகரிலுள்ள கல்வித்திணைக்களத்தின் கண்காணிப்பாளரை சந்தித்த போதே, இவ்வாறு உறுதியளிக்கப்பட்டுள்ளது. மேலும், ‘இலங்கையின் தகவல் தொடர்பாடல் தொழில்நுட்பத்தை அபிவிருத்தியடையச் செய்வதற்கு, தென்கொரியா உதவும்’ …

Read More

 ஸ்மார்ட் சிட்டிக்கு தென்கொரியா முதலீடு!

இலங்கையில் ஸ்மார்ட் சிற்றியை உருவாக்க 63.2 பில்லியன் அமெரிக்க டொலர்களை (ரூ. 9,346.6 பில்லியன்) முதலீடு செய்ய தென்கொரியா முன்வந்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. ஸ்மார்ட் சிற்றியை நிர்மாணிப்பதற்கு முதலீடு செய்வது தொடர்பான ஒப்பந்தத்தில் தென்கொரிய காணி, தென்கொரியாவின் உட்கட்டமைப்பு மற்றும் போக்குவரத்து அமைச்சரான காங் ஹோ இன் மற்றும் இலங்கையின் மேல் மாகாண அபிவிருத்தி அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்க ஆகியோர் கையெழுத்திட்டுள்ளதாக அந்நாட்டுச் செய்தி தெரிவித்தது. தென்கொரியாவின் சியோல் நகரிலுள்ள ஹோட்டலில் வைத்து…

Read More