Headlines

ஜப்பானிய கடற்படை கப்பல்கள் கொழும்பு துறைமுகத்திற்கு!

நல்லெண்ண விஜயம் ஒன்றினை மேற்கொண்டு, “உரக” மற்றும் “தக்சிமயேயமா” எனும் இரு ஜப்பானிய கடற்படை கப்பல்கள் கொழும்பு துறைமுகத்தை நேற்று (11) வந்தடைந்துள்ளன. இதன் போது கடற்படை மரபுகளுக்கு இணங்க இலங்கை கடற்படையினர் அவற்றை வரவேற்றனர். அத்துடன் அவர்கள் இலங்கையில் தங்கியிருக்கும் காலப்பகுதியில் நல்லெண்ணம் மற்றும் நட்பின் வெளிப்பாடாக நட்புரீதியான தயூளக்கட்டுப் பந்தாட்டப் (பேஸ் போல்) போட்டியில் இலங்கை கடற்படையின் பேஸ்பால் அணியுடன் கலந்து கொள்ளவுள்ளனர். மேலும் அவர்கள் எதிர்வரும் பதினான்காம் திகதி இலங்கைக்கான விஜயத்தினைப் பூர்த்தி செய்து…

Read More

இலங்கைக்கு அவுஸ்திரேலியா பாராட்டு

இலங்கையில் இருந்து அவுஸ்திரேலியாவுக்கு ஆட்கடத்தலை தடுக்க இலங்கை முன்னெடுத்து வருகிற  முயற்சிகளுக்கு அவுஸ்திரேலியா பாராட்டுக்களை தெரிவித்துள்ளது. இலங்கை கடற்படை தளபதியை அவுஸ்திரேலியாவின் ஆட்கடத்தல் குறித்து ஆராயும் ஆணையாளர் சந்தித்த போதே இதனை குறிப்பிட்டதோடு, இரு நாடுகளுக்கும் இடையிலான ஒத்துழைப்புக்களை மேலும் வலுப்படுத்துவது குறித்தும் கலந்துரையாடல் இடம்பெற்றுள்ளது.

Read More

இலங்கை கடற்படையினருக்கு தொடர்ந்து பயிற்சியளிப்போம் : நவாஸ்

இலங்கை கடற்படையினருக்கு பயிற்சிகளையும் நாம் தொடர்ந்து வழங்குவோம்.   அத்தோடு இலங்கையுடன் சுதந்திர வர்த்தக உடன்படிக்கை செய்து கொள்வது தொடர்பிலும் பேச்சுவார்த்தைகளை நடத்தினோம். இது எமது முதலாவது சுதந்திர வர்த்தக உடன்படிக்கையாக அமையும்  என்று பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப் தெரிவித்தார். இலங்கைக்கு உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டுள்ள பாகிஸ்தான் ஜனாதிபதி நவாஸ் ஷெரிப்பிற்கு நேற்று செவ்வாய்க்கிழமை ஜனாதிபதி செயலகத்தில் வழங்கப்பட்ட வரவேற்பு அளிக்கப்பட்டது.  அதன் பின்னர் இடம்பெற்ற நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அவர்…

Read More