Headlines

கட்டுநாயக்க விமான நிலையத்தில் ஸிகா வைரஸ் பரிசோதனை

இலங்கைக்கு வரும் பயணிகள்   ஸிகா வைரஸ் தொற்றுக்கு இலக்காகியுள்ளார்களா என்பது தொடர்பில் கண்டறிவதற்கான பரிசோதனைகளை மேற்கொள்ள, கட்டுநாயக்க விமான நிலையத்தில் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளது. நாட்டுக்குள் வருபவர்களை பரிசோதிக்க  கண்காணிப்பு அமைப்பு நிறுவப்பட்டுள்ளதாகவும், குறிப்பாக அமெரிக்க மற்றும் ஆபிரிக்க நாடுகளில் இருந்து வருபவர்களை கூடுதல் பரிசோதனைக்கு உட்படுத்த உத்தேசித்துள்ளதாகவும் மேலும் ,இதுவரை நாட்டுக்கு அது தொடர்பில் எந்த அச்சுறுத்தலும் ஏற்படவில்லை எனவும் அமைச்சர் ராஜித்த சேனாரத்ன தெரிவித்துள்ளார். ஸிகா என்ற வைரஸ் தற்போது வெளிநாடுகளில் பரவி வருகிறன்றமை…

Read More

சிங்களவர்களிடமே மத்திய அரசின் பலம்: வாசு

இலங்கையில் “மத்திய அரசின்” பலம் சிங்களவர்களான பெரும்பான்மை இனத்திடம் உள்ளது என்பதை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஏற்றுக் கொள்ள வேண்டும். அதனை நிராகரிக்க முடியாது என  மஹிந்த அணி ஆதரவு எம்.பி.யான வாசுதேவ நாணயக்கார தெரிவித்தார்.  ஒற்றையாட்சிக்குள் நாடு பிளவுபடும் என்ற கூட்டமைப்பின் “வாதத்தை” ஏற்றுக் கொள்ள முடியாது என்றும் அவர்  குறிப்பிட்டுள்ளார்.

Read More

இலங்கை விமானப்படைக்கு விரைவில் புதிய ரக போர்விமானங்கள்

இலங்கை விமானப்படைக்காக போர்விமானங்களை கொள்வனவு செய்வதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படு வருவதாக பாதுகாப்பு செயலாளர் கருணாசேன ஹெட்டியாராச்சி தெரிவி்த்துள்ளார். இலங்கை விமானப்படையில் காணப்படும் போர் விமானம் 30 வருடங்கள் பழைமையானது எனவும் அதன் பாவனைக்காலம் முடிவடைந்துள்ளதாகவும் விமானப்படை ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார். இதனால் விமானப்படைக்கு புதிய ரக போர் விமானங்கள் தேவைப்படுவதாகவும் தெரிவித்தார். இதற்காகவே போர்விமானங்கள் கொள்வனவு செய்யப்படவுள்ளன. ஆனால் எந்த நாட்டிலிருந்து போர் விமானங்கள் கொள்வனவு செய்வது என்பது பற்றி இதுவரை தீர்மானிக்கப்படவில்லை என பாதுகாப்பு செயலாளர்…

Read More

பாலியல் வன்முறைகளை ஒழிக்கும் பிரகடனத்தில் இலங்கை கைச்சாத்து

போரின் போது பாலியல் வன்முறைகளை முடிவுக்கு கொண்டு வரும் பிரகடனத்தை இலங்கை நேற்று(12) கைச்சாத்திட்டுள்ளது. 2013ஆம் ஆண்டு செப்டெம்பர் 25ஆம் திகதி ஐக்கிய நாடுகளின் நியூயோர்க் தலைமையகத்தில் 122 நாடுகள் இந்த பிரகடனத்தை ஏற்றுக்கொண்டன. இந்த நிலையில் குறித்த பிரகடனத்தை நேற்று 155 நாடுகள் ஏற்றுக்கொண்டுள்ளன. இந்த விடயம் தொடர்பில் கருத்து தெரிவித்த இலங்கையின் வெளிவிவகார அமைச்சு, இலங்கையில் மனித உரிமைகளை பாதுகாத்தல், பாலியல் வன்முறைகளை தடுத்தல் போன்ற விடயங்களில் இலங்கை அரசாங்கம் அர்ப்பணிப்புடன் செயற்படும் என்று…

Read More

வெளிவிவகார செயலர் நாளை இலங்கை வருகை

இந்திய வெளிவிவகார அமைச்சின் செயலர் ஜெயசங்கர் நாளை இரண்டு நாள் உத்தியோகப்பூர்வ விஜயம் மேற்கொண்டு இலங்கை வரவுள்ளார். அவர் இலங்கை வெளிவிவகார அமைச்சின் செயலாளர் சித்திராங்கனி வாகீஸ்வரன், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர உட்பட பல முக்கிய அதிகாரிகளை சந்திக்கவுள்ளார்.

Read More

இலங்கை வர முற்பட்ட அகதி கைது

சட்டவிரோதமான முறையில் இலங்கைக்கு கடல் மார்க்கமாக தனது உறவினர்களை பார்ப்பதற்காக இலங்கை வர முற்பட்ட நபர் ஒருவரை தமிழக பொலிஸார் கைதுசெய்துள்ளனர். குறித்த நபர் மட்டக்களப்பு பகுதியை சேர்ந்த நடராஜன் (55) ஆவார். குறித்த நபர் கடந்த 2011 ஆம் ஆண்டில் தமிழகம் சென்று, வெளிப்பதிவு அகதியாக விருதுநகர் மாவட்டம், சிவகாசியில் தங்கியிருந்ததோடு, கூலித் தொழில் செய்து வந்தார் என தமிழன ஊடகச் செய்திகள் குறிப்பிட்டுள்ளன. மீனவர்களின் தகவலின்படி தனுஷ்கோடி பொலிஸார், நடராஜனை பிடித்து மேலதிக விசாரனை…

Read More

இலங்கை கடற்படையினருக்கு தொடர்ந்து பயிற்சியளிப்போம் : நவாஸ்

இலங்கை கடற்படையினருக்கு பயிற்சிகளையும் நாம் தொடர்ந்து வழங்குவோம்.   அத்தோடு இலங்கையுடன் சுதந்திர வர்த்தக உடன்படிக்கை செய்து கொள்வது தொடர்பிலும் பேச்சுவார்த்தைகளை நடத்தினோம். இது எமது முதலாவது சுதந்திர வர்த்தக உடன்படிக்கையாக அமையும்  என்று பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப் தெரிவித்தார். இலங்கைக்கு உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டுள்ள பாகிஸ்தான் ஜனாதிபதி நவாஸ் ஷெரிப்பிற்கு நேற்று செவ்வாய்க்கிழமை ஜனாதிபதி செயலகத்தில் வழங்கப்பட்ட வரவேற்பு அளிக்கப்பட்டது.  அதன் பின்னர் இடம்பெற்ற நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அவர்…

Read More

இலங்கை மனித உரிமை ஆணைக்குழு ஜனாதிபதிக்கு கடிதம்

இலங்கையில் அமுல்படுத்த திட்டமிட்டுள்ள மரண தண்டனையை நீக்குமாறு பல யோசனைகளை முன்வைத்து கடிதம் ஒன்றினை ஜனாதிபதி மைத்திரிபால சிரிசேனவிடம் இலங்கை மனித உரிமை ஆணைக்குழு நேற்று (4) சமர்ப்பித்துள்ளது. மனித உரிமையின் அடிப்படையில் மரணத்தண்டனை கொடூரமானதாகும் மனிதாபிமானமற்றதாகும். ஆகவே மனித சமூதாயத்திற்கு மதிப்பளிக்கும் வகையில் இலங்கை செயல்பட வேண்டும் என அந்த கடிதத்தில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. ஜனாதிபதிக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ள கடிதத்தின் பிரதிகள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க சபாநாயகர் கரு ஜயசூரிய எதிர்கட்சித் தலைவர் சம்பந்தன் மற்றும் நீதி…

Read More