Headlines

நான்கு வகையான அனர்த்தங்கள் தொடர்பில் எச்சரிக்கை

நாட்டில் தற்போது நிலவிக்கொண்டிருக்கின்ற மோசமான வானிலை தொடர்ந்து நீடிக்குமாயின், ஐந்து மாவட்டங்களில் உள்ள 26 பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட பிரதேசங்களில், நான்கு வகையான அனர்த்தங்கள் ஏற்படுவதற்கான சாத்தியக்கூறுகள் இருப்பதாக, தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவனம் எதிர்வு கூறியுள்ளது. கண்டி, இரத்தினபுரி, நுவரெலியா, கேகாலை, களுத்துறை ஆகிய மாவட்டங்களிலேயே, இவ்வாறான அனர்த்தங்கள் ஏற்படுவதற்கான சாத்தியகூறுகள் தென்படுகின்றன. மண்சரிவு, பாறை விழுகை, நில தாழிறக்கம், நிலவெட்டு சாய்வுகள் இடிந்து விழும் சாத்தியங்கள் தொடர்பிலேயே அவதானமாக இருக்குமாறு அந்நிலையம் தெரிவித்துள்ளது.

Read More

3 மாவட்டங்களுக்கு கடும் ஆபத்து

மண்சரிவு அபாயமுள்ள மாவட்டங்களாக 7 மாவட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், அவற்றில் கேகாலை, இரத்தினபுரி, பதுளை ஆகிய மாவட்டங்களின் பல பகுதிகள், கடும் ஆபத்தான நிலைமையில் உள்ளன என்று தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது. மலைகள் கொண்ட பிரதேசங்களில் வசிக்கும் பொதுமக்கள், இயற்கைக்கு மாறாக நிலத்தில் வெடிப்புகள் மற்றும் நீரோட்டங்கள் ஏற்படுவதைக் கண்டால், அவை தொடர்பில் மிகவும் அவதானமாகச் செயற்பட வேண்டிய அதேவேளை, அது தொடர்பில் உடனடியாக அறிவிக்குமாறு, மேற்படி நிறுவனத்தின் மண்சரிவு தொடர்பான ஆராய்ச்சிக்குழுவின் பணிப்பாளர்…

Read More

எம்பிலிபிட்டிய இளைஞனின் மரண அறிக்கை வெளியீடு

எம்பிலிபிட்டிய தாக்குதல் சம்பவத்தில் உயிரிழந்த இளைஞனின் மரண அறிக்கை இன்று வெள்ளிக்கிழமை வெளியாகியுள்ளது. இரத்தினபுரி வைத்தியசாலையின் மருத்துவ உத்தியோகத்தர் டி.பி.குணதிலகவால் தயாரிக்கப்பட்ட சட்ட மருத்துவ அறிக்கையை எம்பிலிபிட்டிய மேலதிக் நீதவான் பிரசன்ன பெர்ணான்டோ இன்று வெள்ளிக்கிழமை வெளியிட்டார். பொலிஸாருடன் இடம்பெற்ற மோதல் சம்பவத்தில் உயிரிழந்த இளைஞனின் மரணம் தொடர்பான சட்ட வைத்திய அதிகாரியின் அறிக்கையில் வெட்டு காயத்திலிருந்து அதிகளவு இரத்தம் வெயியேறியதால் மரணம் ஏற்பட்டதென கூறப்பட்டுள்ளது.

Read More

இரண்டு பேருக்கு மரண தண்டனை விதிப்பு

கொலை செய்த சம்பவத்துடன் தொடர்புடைய குற்றவாளிகள் இரண்டு பேருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. 1999 ஆம் ஆண்டு இரத்தினபுரி, மன்ததெனிய பிரதேச நபர் ஒருவரை துப்பாக்கியால் சுட்டு கொலை செய்த சம்பவம் தொடர்பான வழக்கு 17 வருடமாக  இடம்பெற்று வந்த நிலையில் இரத்தினபுரி மேல் நீதிமன்றம் நேற்று இந்த தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. ஹோமாகம மற்றும் அநுராதபுரம் பகுதிகளை சேர்ந்த இருவருக்கே இத்தண்டனை வழங்கப்பட்டுள்ளது.

Read More

குடிசையிலிருந்து சிறுவனின் சடலம் மீட்பு

இரத்தினபுரி பகுதியிலுள்ள குடிசையொன்றில் இருந்து 15 வயதுடைய சிறுவனொருவரின் சடலத்தை மீட்டதாக பொலிஸார் தெரிவித்தனர். இவ்வாறு சடலமாக மீட்கப்பட்ட சிறுவன், துஷ்பிரயோகத்துக்குட்படுத்தப்பட்டு கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்று பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.

Read More