Headlines

அவுஸ்திரேலியா நீதிமன்றத்திற்கு இலங்கையைச் சேர்ந்த முஸ்லிம் பெண் நீதிபதியாக நியமனம்

அவுஸ்திரேலியா நீதிமன்றத்திற்கு கல்ஹின்னயைச் சேர்ந்த முஸ்லிம் பெண் நீதிபதியாக நியமனம் அவுஸ்திரேலிய விக்டோரியா மஜிஸ்திரேட் நீதிமன்றத்தின் நீதிபதியாக இலங்கையைச் சேர்ந்த முஸ்லிம் பெண் நியமிக்கப்பட்டுள்ளார். அவுஸ்திரேலிய சட்டமா அதிபர் மார்ட்டீன் பகுலா இவர் நீதிபதியாக நியமிக்கப்பட்டுள்ளதை அறிவித்துள்ளார். உர்பா மசூத் என்னும் இலங்கைப் பெண்ணே இவ்வாறு நீதிபதியாக நியமிக்கப்பட்டுள்ளார். இவர் கண்டி மாவட்டம் கல்ஹின்ன, பாடசாலை வீதியைச் சேர்ந்த மசூத் – சித்தி சாஹிரா தம்பதியின் புதல்வி ஆவார். இலங்கையிலிருந்து புலம் பெயர்ந்து ஐக்கிய இராச்சியத்தில் வாழ்ந்த…

Read More

நாடு கடத்தப்பட்ட இரண்டு இலங்கையர்கள் கைது

நாடு கடத்தப்பட்ட இரண்டு இலங்கையர்கள் கொழும்பு கட்டுநாயக்க விமான நிலைய புலனாய்வுப் பிரிவினர் செய்துள்ளனர். இன்று (10) காலை அவுஸ்திரேலியாவிலிருந்து நாடு கடத்தப்பட்ட இரண்டு இலங்கையர்களை புலனாய்வு பிரிவினர் கைது செய்துள்ளனர். யாழ்ப்பாணத்தைச் சேர்ந்தவர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர். சட்டவிரோதமான முறையில் அவுஸ்திரேலியாவிற்கு சென்றவர்களே இவ்வாறு நாடு கடத்தப்பட்டுள்ளனர். குறித்த இருவரும் இன்று நீர்கொழும்பு நீதிமன்றில் முன்னிலை செய்யப்பட உள்ளனர். கட்டுநாயக்க புலனாய்வுப் பிரிவினர் விசாரணகைளை ஆரம்பித்துள்ளனர்.

Read More