Headlines

அரசியலமைப்பு சபையின் முதலாவது அமர்வு நாளை

சபாநாயகர் கரு ஜயசூரியவின் தலைமையில் நாளை (05) பிற்பகல் 2 மணிக்கு அரசியலமைப்பு சபையின் முதலாவது அமர்வு இடம்பெறவுள்ளது. புதிய அரசியலமைப்பைத் தயாரிப்பதற்காக முழு பாராளுமன்றத்தையும் அரசியலமைப்பு சபையாக மாற்றும் பிரேரணை ஏற்கனவே நிறைவேற்றப்பட்டது. இதற்கமைய நாளை(05) முதலாவது அமர்வு நடைபெறுகிறது. 2017ஆம் ஆண்டு இறுதிக்கு முன்னர் அரசியலமைப்பு மறுசீரமைப்பொன்றை உருவாக்கி அதனை  சர்வஜன வாக்கெடுப்புக்கு விடுவதற்கு தீர்மானிக்கப்பட்டிருந்தது. விருப்பு வாக்கை அடிப்படையாகக் கொண்ட தேர்தல் முறையை மாற்றுதல், தேசிய பிரச்சினைக்கு ஏற்றுக்கொள்ளக் கூடிய தீர்வை முன்வைக்கத்தக்க…

Read More

சபாநாயகர் தலைமையில் அரசியலமைப்பு சபை இன்று கூடுகின்றது

அரசியலமைப்பு சபை இன்று (10) பிற்பகல் 4 மணிக்கு, சபாநாயகர் கரு ஜயசூரிய தலைமையில் கூடவுள்ளது. புதிய சட்டமா அதிபரை நியமிப்பதற்காக ஜனாதிபதியினால் அரசியலமைப்பு சபைக்கு பிரேரிக்கப்பட்ட மூன்று பெயர்கள் தொடர்பிலலேயே இன்று கலந்தாலோசிக்கப்பட உள்ளதாக பாராளுமன்ற செயலாளர் நாயகம் தம்மிக தசநாயக்க குறிப்பிட்டார். அதன் பின்னர் அரசியலமைப்பு சபை அங்கத்தவர்களின் இணக்கத்துடன் சட்டமா அதிபர் நியமனம் குறித்து தீர்மானம் எட்டப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

Read More