Headlines

ஜெனீவா செல்லும் கூட்டு எதிர்க்கட்சி

– லியோ நிரோஷ தர்ஷன் – நல்லாட்சி அரசாங்கத்திற்கு எதிராக அனைத்து பாராளுமன்ற ஒன்றியத்தில்  முறைப்பாடு செய்யவே கூட்டு எதிர்க்கட்சி ஜெனீவா செல்லவுள்ளது. இதில் பாராளுமன்ற உறுப்பினர்களான பந்துல குணவர்த்தன, டலஸ் அழகப்பெரும மற்றும் உதயகம்பில ஆகியோர் கூட்டு எதிர்க்கட்சி சார்பில் ஜெனீவா பயணமாகவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Read More

45 ஆயிரம் ஏக்கர் பெரும்போக நெற்செய்கை அழிவு

– ஜவ்பர்கான் – மட்டக்களப்பு மாவட்டத்தில் அறக்கொட்டித் தாக்கத்தால் 45 ஆயிரம் ஏக்கர் பெரும்போக நெற்செய்கை அழிந்து நாசமாகியுள்ளதாக மாவட்ட கமநல சேவைகள் திணைக்கள பிரதி ஆணையாளர் கே.சிவலிங்கம் தெரிவித்தார். இம்மாவட்டத்தில் வெல்லாவெளி, கொக்கட்டிச்சோலை, வவுணதீவு, கிரான், செங்கலடி உட்பட பல பிரதேச செயலகப்பிரிவுகளில் செய்கை பண்ணப்பட்ட பெரும்போக நெற்செய்கையே இவ்வாறு அழிவடைந்துள்ளன. இம்மாவட்டத்தில் இம்முறை ஒரு இலட்சத்து 60ஆயிரம் ஏக்கரில் பெரும்போகம் செய்கை பண்ணப்பட்டுள்ளது. மேலும், நல்லாட்சி அரசாங்கம் நஷ்டஈடு வழங்க வேண்டும் எனவும் விவசாயிகள்…

Read More

பயந்து ஓடிஒழிய இந்த, அரசாங்கம் தயாராக இல்லை – ராஜித

அப்பாவிகள் என்ற வேஷம் போடுவதனால் செய்த குற்றங்களை மறைக்க முடியாது. ராஜபக்சக்கள் செய்ததாக குற்றம் சாட்டப்பட்டுள்ள விடயங்கள் மட்டுமல்ல கடந்த ஆட்சியில் நடந்த அனைத்து மோசடிகளையும் கண்டறிவதுடன் குற்றவாளிகள் யாராக இருந்தாலும் தண்டிக்கப்படுவர் என அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்தார். நிதி மோசடி குற்றச்சாட்டில் கைதுசெய்யப்பட்டுள்ள முன்னாள் ஜனாதிபதியின் மகன் யோஷித ராஜபக்சவை விடுவிக்கக் கோரியும் அந்த விவகாரம் தொடர்பில் பல கருத்துக்களை மஹிந்த அதரவு அணியினர் முன்வைத்து வரும் நிலையிலும் இது தொடர்பில் அரசாங்கத்தின் கருத்தை…

Read More

ராஜபக்ஸகளின் கண்ணீர் தொடர்பில் அப்சரா பொன்சேகாவின் கருத்து

எங்கள் குடும்பம் எப்படி துயரடைந்தோம், தாஜூடீனின் பெற்றோர் எவ்வாறு துயரடைந்திருப்பர், பிரகீத் குடும்பம் எவ்வாறு துயரடைந்திருக்கும் என்பதை நாமல் உணரட்டும், இந்த கணமே அவரது குடும்பத்தினர் அவர்களிற்கு துணிச்சலிருந்தால் கடந்த காலங்கள் குறித்து உணரும் தருணமாக அமையட்டும் என்று முன்னாள் இராணுவ தளபதி பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகாவின் மகள் அப்சரா பொன்சேகா தனது முகப்புத்தகத்தில் தெரிவித்துள்ளார். அதில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது முன்னாள் ஜனாதிபதியின் மூத்த புதல்வர் நாமல் ராஜபக்ச தனது பெற்றோர்கள் கண்ணீர் விடுவதை…

Read More

இரவு நேரங்களில் நரித்தனமான செயற்படும் சிங்களே அமைப்பினர்

சிங்களே என்று சொல்லிக் கொண்டு இரவு நேரங்களில் நரித் தனமாக செயல்படும்  சிலரால் சிங்கள இனத்துக்கே அவமானமாகும் என நவ சமசமாஜ கட்சியின் தலைவர் விக்கிரமபாகு கருணாரத்ன தெரிவித்தார். அதிகாரத்தை பகிர்ந்து ஐக்கியப்படும் இயக்கம் நேற்று (6) கொழும்பில் நடத்திய செய்தியாளர் மாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் அங்கு தொடர்ந்தும் கூறுகையில், ‘சிங்களே என்ற ஓர் இனம் தெரியாத குழுவொன்று தற்பொது நாட்டுக்குள் இனவாதத்தை தூண்டும் வகையில் செயல்பட்டுக் கொண்டிருக்கின்றது. இது…

Read More