Headlines

அனைவருக்கும் மூன்று மாதத்திற்குள் மின்சாரம்! அஜித் பெரேரா

மின்சாரம் வழங்கப்படாத அனைவருக்கும் மூன்று மாத காலத்திற்குள் மின்சாரம் வழங்கப்படும் என பவர் மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி பிரதி அமைச்சர் அஜித் பி பெரேரா தெரிவித்துள்ளார். நேற்று (12) மாலை 5.00 மணியாளவில் கிளிநொச்சியில் அமைக்கப்பட்டுள்ள மின்சார விநியோக அமைப்பு நிலையத்திற்கு விஜயம் செய்த பவர் மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி பிரதி அமைச்சர் அஜித் பி பெரேரா விஜயத்தின் பின் ஊடகவியலாளர்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் அவ்வாறு தெரிவித்தார்.

Read More

புத்தாண்டு காலத்தில் தடையின்றி மின்சார விநியோகம்!

தமிழ் சிங்கள புத்தாண்டு காலப் பகுதியில் இடையறாது மின்சாரம் விநியோகம்செய்யப்படும் என பிரதி மின்வலு அமைச்சர் அஜித் பெரேரா தெரிவித்துள்ளார். கொழும்பில் இன்று (12) நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனைத்தெரிவித்துள்ளார். அவர் மேலும் குறிப்பிடுகையில், புத்தாண்டு காலத்தில் மின்சார விநியோகத்தை துண்டிக்க எவ்வித அவசியமும்கிடையாது. மின்சார விநியோகம் செய்யும் பகுதியில் தொழில் நுட்ப கோளாறு ஏற்படாது எனநம்புகின்றோம். புத்தாண்டு காலத்தில் பாரியளவிலான கைத்தொழிற்சாலைகள் மூடப்பட்டிருப்பதனால்மின் தேவை வீழ்ச்சியடையும் என அவர் தெரிவித்துள்ளார்.

Read More

மின்சாரத் தடையில் நாச வேலை!

நாச வேலை காரணமாக நாட்டில் மின்சாரத் தடை ஏற்பட்டதா என்ற சந்தேகம் எழுந்துள்ளது என மீள் சுழற்சி சக்தி மற்றும் மின்வலு பிரதி அமைச்சர் அஜித் பெரேரா தெரிவித்துள்ளார். மின்சாரம் தடைப்பட்டது தொடர்பில் வெளிப்படையாக தெரியும் காரணிகள் மிகவும் அசாதாரணமானவை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். தொழில்நுட்பக்  கோளாறுகளுக்கு அப்பாலான காரணிகளின் அடிப்படையில் மின்சாரம் தடைப்பட்டதா என்பதனை தெரிந்து கொள்ள வேண்டும் எனவும்,இரண்டு வாரங்களுக்கு முன்னதாகவும்  இவ்வாறு மின்சாரம் தடைபட்டிருந்தமை, நாச வேலையாக இருக்குமோ என சந்தேகிக்க போதியளவு…

Read More