இலங்கையின் நல்லிணக்க நடவடிக்கைகள் துரிதமடையும்: மோடி
இலங்கையின் அமைதி, நல்லிணக்க நடவடிக்கைகளை, அந்நாட்டில் பொறுப்பேற்றுள்ள புதிய அரசு துரிதப்படுத்தும் என்று பிரதமர் நரேந்திர மோடி நம்பிக்கை தெரிவித்தார். பிரதமர் நரேந்திர மோடியை இலங்கை வெளியுறவு அமைச்சர் மங்கள சமரவீரா இன்று டெல்லியில் சந்தித்து பேசினார். அப்போது, உலகம் முழுவதும் ஆர்வத்தோடு எதிர்பார்த்து காத்திருந்த தேர்தலை வெற்றிகரமாக முடித்ததற்காக இலங்கை மக்களுக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்தார். இலங்கை அதிபர் தேர்தலில் வெற்றி பெற்ற மைத்ரிபால சிறிசேனா மற்றும் அந்நாட்டு பிரதமர் விக்கிரமசிங்கேவுக்கு அவர் பாராட்டுகளை…
