“முச்சக்கர வண்டிகளின் சாரதிகள் சமூகத்தின் மீதும் தங்கள் பணிகளின் மீதும் பொறுப்புணர்வோடு நடந்துகொள்ள வேண்டும்”- தவிசாளர் தாஹிர்!
அதிகமாக முச்சக்கர வண்டிகளை பயணத்திற்காக நமது பெண்களே பயன்படுத்துகின்றனர் அந்தவகையில் நமது பெண் பிள்ளைகளை பாடசாலைகளைக்கும் மாலை நேர வகுப்புக்களுக்கும் முச்சக்கர வண்டிகளில் உங்கள் மீதான நம்பிக்கையின் அடிப்படையில் அவர்களின் பெற்றோர்கள் அனுப்புகின்றனர், அந்தவகையில் அவர்களின் பாதுகாப்பு தொடர்பில் பொறுப்பு கூற வேண்டியவர்களாக தங்களின் பிள்ளைகள் போல பொறுப்புணர்வுடன் நடாத்துவது ஒவ்வொரு சாரதியின் மீதும் கட்டாயமாகும் என நிந்தவூர் பிரதேச சபையின் தவிசாளர் எம்.ஏ.எம் தாஹிர் தெரிவித்தார். எம்.எம். தாஜூடீன் அவர்களின் தலைமையில் இன்று(7) நடைபெற்ற நிந்தவூர்…
