Headlines

யாழ் நகரில் நுண்கடனால் பாதிப்படைந்தவர்களுக்கு விமோசனம்!!!

நுண் கடன் மூலம் பாதிப்படைந்த குடும்பங்களை அக்கடன் சுமையிலிருந்து விடுவிப்பதற்கான சான்றிதழ்களை வழங்கும் நிகழ்வு யாழ் வீரசிங்கம் மண்டபத்தில் இடம்பெற்றது. இந்த நிகழ்வில் பிரதம அதிதியாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க மற்றும் அதிதிகளாக அமைச்சர்களான மங்கள சமரவீர ரிஷாட் பதியுதீன், அகில விராஜ், அர்ஜுண ரணதுங்க, பிரதியமைச்சர் விஜயகலா மகேஸ்வரன். மற்றும் அரச உயர் அதிகாரிகள் பங்கேற்றனர்… -ஊடகப்பிரிவு-

Read More

இது சிங்களவரின் நாடு ஏனையோர் வந்தேறு குடிகள் – ஞானசார தேரர்

வரலாற்று ரீதியாக இந்த நாட்டின் மக்கள் சிங்களவர்களே. பாதைகள் அமைப்பதற்கும், வர்த்தக நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கும், தோட்டங்களில் பணியாற்றுவதற்காகவுமே ஏனைய இனத்தவர் இந்த நாட்டுக்கு வந்தனர். இந்த நாடு சிங்களவர்களின் நாடு. நாட்டில் தோன்றியுள்ள பிரச்சினைகளைத் தீர்ப்பதற்குத் தமிழ் மக்கள் சிங்கள மொழியைக் கற்க வேண்டும். இவ்வாறு பொதுபலசேனா அமைப்பின் பொதுச் செயலாளர் ஞானசார தேரர் தெரிவித்துள்ளார். அந்த அமைப்பின் தலைமையகத்தில் நேற்று முன்தினம் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே  அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். மேலும் அவர் தெரிவிக்கையில், இது சிங்களவர்களின்…

Read More

உப தபாலக கட்டிடம் என பெயர் பெறிக்கப்பட்டு நிர்மாணிக்கப்பட்ட கட்டிடம் இதுவரை எந்தவித செயற்பாடுகளுமின்றி பாழடைந்து கிடைக்கின்றது.

எம்.எம்.ஜபீர்: ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் முன்னாள் ஸ்தாபக தலைவர் மறைந்த மனிதர் மர்ஹூம் எம்.எம்.எச்.அஷ்ரப் அவர்களினால் 1996 ஆம் ஆண்டு புதிய நகர வேலைத்திட்டதின் கீழ் வளத்தாப்பிட்டி பிரதேசத்தில் அமைக்கப்பட்ட உப தபாலக கட்டிடம் என பெயர் பெறிக்கப்பட்டு நிர்மாணிக்கப்பட்ட கட்டிடம் இதுவரை எந்தவித செயற்பாடுகளுமின்றி பாழடைந்து கிடைக்கின்றது. இதன் காரணமாக பிரதேசத்திலுள்ள மக்கள் பல்வேறு அசௌகரியங்களை எதிர்நோக்கி வருவதாக பிரதேச மக்கள் சுட்டிக்காட்டுகின்றனர். புதிய நகர வேலைத்திட்டதின் கீழ் அமைக்கப்பட்டு செயற்படுத்தப்படாமலுள்ள தபாலக கட்டிடத்தில் உப தபாலகம்…

Read More

தர்கா நகர் பதட்ட நிலை.. தற்போதைய நிலைமையின் அப்டேட்.

தர்கா நகர் பகுதியில் இன்று மாலை இடம்பெற்ற சம்பவம் ஒன்றினால் சிறு பதட்டமான சூழ்நிலை உருவாகியுள்ளதாக அங்கிருந்து கிடைக்கும் செய்திகள் தெரிவித்தன. தர்கா நகர் பத்திராஜாகொட பகுதியின் ஊடாக உதைபந்தாட்டம் விளையாடி விட்டு சென்றுகொண்டிருந்த முஸ்லிம் வாலிபர்களுக்கும் சிங்கள வாலிபர்களுக்கும் இடையில் ஏற்பட்ட முறுகல் நிலை கைகலப்பில் முடிந்துள்ளது. அப்பிரதேசத்தில் இருந்த முஸ்லிம் வீடு ஒன்றில் இருந்த முஸ்லிம் பெண் ஒருவரும் தாக்கப்பட்டுள்ளார் அதுதவிர அப்பிரதேச விகாரை மணி தொடர்ச்சியாக அடிக்கப்பட்டதாகவும் அப்பகுதி மின்சாரம் தடைப்படதாகவும் அங்கிருந்து…

Read More

‘போதைப் பொருளுக்கு எதிரான யுத்தத்தில் 176 பள்ளிவாயல்கள் இணைகிறது’. சிங்கள மொழி ஊடகங்களும் வரவேற்பு.

தேசிய போதை கட்டுபாட்டு சபை மற்றும் கொழும்பு மாவட்ட மஸ்ஜிதுகள் சங்கம் மற்றும் அகில இலங்கை வை எம் எம் ஏ பேரவை  ஆகிய அமைப்புகள் இணைந்து போதை பொருள் தொடர்பான விழிப்புணர்வு ஆர்பாட்டம் ஒன்றை நாளை கொழுப்பு புறக்கோட்டை புகையிரத நிலையத்தின் முன்னாள் மலை நான்கு மணி தொடக்கம் ஆறு மணிவரை  நடத்தவுள்ளது அறிந்ததே.. இது தொடர்பில் இந்த நடவடிக்கையை வரவேற்று சிங்கள மொழிப் பத்திரிகைகளும் செய்தி வெளியிட்டு வருவது குறிப்பிடத்தக்கது. இன்றைய லங்காதீப பத்திரிகளில், போதைப்…

Read More

முஸ்லிம்காங்கிரஸ் தனது மௌனத்தை கலைக்க வேண்டும் – அமைச்சர் றிஷாத்

வடக்குக் கிழக்கு பிரச்சினை உக்கிரமடைந்திருந்த காலப்பகுதியில் அப்போதைய கால சூழ்நிலைக்கேற்ப, முஸ்லிம்களை பாரிய நெருக்கடியிலிருந்து பாதுகாக்க, அதிகாரப்பகிர்வு தொடர்பில் அமைச்சர் அஷ்ரப் மேற்கொண்ட நிலைப்பாட்டை வைத்துக்கொண்டு, அவரின் மறைவின் பின்னரும் முஸ்லிம் காங்கிரஸ் வடக்கு – கிழக்கு இணைப்பு தொடர்பில் மௌனமான அரசியல் ஒன்றை செய்வதாக அமைச்சர் ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார். சாய்ந்தமருதுவில் மக்கள் காங்கிரஸ் முக்கியஸ்தர் கலாநிதி ஜமீல் தலைமையில் இடம்பெற்ற பொதுக்கூட்டத்தில் உரையாற்றிய போது அவர் கூறியதாவது, மர்ஹூம் அஷ்ரப் முஸ்லிம்களின் நலனுக்காக எத்தனையோ…

Read More

இலங்கையில் நடைபெறும் சர்வதேச பொலிஸ் மாநாடு

சர்வதேச பொலிஸ் மாநாடு எதிர்வரும் மாதம் இலங்கையில் நடைபெறவுள்ளது. எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 4ம் 5ம் மற்றும் 6ம் திகதிகளில் இலங்கையில் இந்த மாநாடு நடத்தப்பட உள்ளது. கொழும்பு கிங்ஸ்பெரி ஹோட்டலில் இந்த மாநாடு நடத்தப்பட உள்ளது. ஆசிய மற்றும் ஐரோப்பிய நாடுகளின் 40 உயர் பொலிஸ் அதிகாரிகள் இந்த மாநாட்டில் பங்கேற்க உள்ளனர். சர்வதேச போதைப்பொருள் வர்த்தகம், ஊழல் மோசடி தவிர்ப்பு, குற்றச் செயல்களை தடுத்தல் உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் தொடர்பில் இந்த மாநாட்டில் அவதானம் செலுத்தப்பட உள்ளது.

Read More

“சிங்களவர் மெளனம்! தேசிய கீதம் அழிப்பு!” பாணந்துறை நகரில் சுவரொட்டிகள்.

தேசிய கீதத்தை தமிழில் பாடுவதற்கு எதிராக பாணந்துறை நகர்ப் பகுதியில் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன. ‘ஹெலவிரு பலமுழுவ’ என்ற பெயரில் ஒட்டப்பட்டுள்ள இச் சுவரொட்டிகளில் சிங்களவர் மெளனம்! தேசிய கீதம் அழிப்பு! தேசிய கீதத்தை தமிழில் பாடுவதற்கு எதிராக அணிதிரள்வோம்! என்ற வாசகங்கள் இச்சுவரொட்டிகளில் காணப்படுகின்றன. கடந்த சனிக்கிழமை (21) வாதுவையில் இடம்பெற்ற மஹிந்த இல்லாத தேசம்? என்ற தலைப்பிலான “ஜாதிக பலய’ என்ற அமமைப்பினால் ஏற்பாடு செய்யப்பட்ட சுவரொட்டிகளும் ஒரே இடத்தில் காணப்படுகின்றன. இதேவேளை கடந்த சனிக்கிழமை…

Read More

கடலரிப்பினால் பாதிக்கப்பட்ட பிரதேசத்தை அமைச்சர் றிஷாத் பார்வையிடவுள்ளார்

அட்டாளைச்சேனை பிரதேச செயலகத்திற்குட்பட்ட ஒலுவில் பிரதேசம் நீண்டகாலமாக கடலரிப்பினால் பாதிக்கப்பட்டு வருகின்றது இதனால் அப்பிரதேச மக்கள் பல இன்னல்களை எதிர்நோக்கி வருகின்றனர். ஒலுவில் துறைமுக கட்டுமான பணிகளின் பின்னர் கடற்கரையை அன்டிய பிரதேசம் நாளாந்தம் கடலரிப்பினால் பாதிக்கப்பட்டு வருவதுடன் ஆயிரக்கணக்கான தென்னை மரங்களும், நிலங்களும் காவு கொள்ளப்படுகின்றது இதனால் அப்பிரதேச வாழும் ஆழ்கடல், கரைவலை மற்றும் நன்னீர் மீனவர்களின் தொழில்களும் பாதிக்கப்படுள்ளதுடன் கடற்கரையை அன்டிய துறைமுக அதிகார சபைக்குச் சொந்தமான கட்டிடங்களும் சேதமடையும் நிலையும் காணப்படுகின்றது. இதுதொடர்பாக…

Read More

அத்தியாவசியப் பொருட்களுக்கு வெற் கிடையாது -அமைச்சர் றிஷாத்

சுஐப் எம் காசிம் அத்தியாவசியப் பொருட்களுக்கு வெற்(vat)கிடையாது. அமைச்சரவை எதிர்வரும் செவ்வாய்க்கிழமை கூடி முக்கிய முடிவுகளை எடுக்கும். -அமைச்சர் றிஷாத் பாராளுமன்றத்தில் அறிவிப்பு அத்தியாவசியப் பொருட்களின் விலைகள் தொடர்பான தீர்மானத்தை எதிர்வரும் செவ்வாய்க்கிழமை 12ம் திகதி அமைச்சரவையில் அமைச்சர்கள் கூடி முடிவு எடுக்கவுள்ளதாகவும் இந்தப் பொருட்களுக்கு வெற்(VAT) பெறுமதி சேர்வரி சேர்க்கப்படமாட்டாதெனவும் கைத்தொழில் மற்றும் வாணிப அமைச்சர் றிஷாத் பதியூதீன் பாராளுமன்றத்தில் அறிவித்தார். “ஆயினும் வெற் பெறுமதி சேர்க்கை குறிப்பிட்ட சில பண்டங்களுக்கே அமுல்படுத்தப்படும் எனவும் அவர்…

Read More

ssp மஜீத் திறந்த மடல்!

பிறந்து வளர்ந்த மண்ணில் நிற்கிறேன் SSP Majeed 2015 பொதுத் தேர்தல் – திகாமடுல்ல மாவட்டம் வாக்காளப் பெரு மக்களுக்கான திறந்த மடல்! சில உண்மைகள்! நான் செல்லுவது எல்லாம் உண்மை! உண்மையைத் தவிர வேறில்லை. சாட்சிக் கூட்டில் சாட்சியம், கூறுகின்றேன். நீதிபதிகள் நீங்கள், தீர்ப்பு எழுதுங்கள்! யாருக்கு நான் தீங்கு செய்தேன் இறைவா! யார் குடியை நான் கெடுத்தேன் இறைவா! எழில் மிகு அறுகம் குடாவும், வனப்பு மிகு மணல் மேடும், கடல் சூழ்ந்து அலை…

Read More

கோத்தபாயவிடம் விசாரணை ஆரம்பம்

முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷவிடம் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. பாரியளவிலான ஊழல் மோசடி தொடர்பில் விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழுவினால் முன்னெடுக்கப்படும் இவ்விசாரணையானது தற்போது கொழும்பு பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்று வருகின்றது. குறித்த விசாரணைகளின் நிமித்தம் கோட்டா காலை 10 மணியளவில் அங்கு சென்றதாக அங்கிருக்கும் எமது செய்தியாளர் தெரிவித்தார். ரக்ன லங்கா நிறுவனம் தொடர்பில் முன்னெடுக்கப்படும் விசாரணைகளுக்கு தேவையான வாக்குமூலத்தை பெறுவதற்காகவே அவர் அழைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

Read More