ஹபாயா விடையத்தில் தமிழ் அரசியல் தலைவர்கள் கரிசணை காட்ட வேண்டும்! பிரதி அமைச்சர் அமீர் அலி!
-முர்ஷித் கல்குடா- முஸ்லிம்களின் ஹபாயா விடையத்தில் தமிழ் அரசியல் தலைவர்கள் கரிசணை காட்டவில்லையாயின் , வேறு இடங்களில் ஏதாவதொரு சக்திகள் குழப்பி விடுவார்கள் என அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தவிசாளரும், கிராமிய பொருளாதார அபிவிருத்தி பிரதியமைச்சருமான எம்.எஸ்.எஸ்.அமீர் அலி தெரிவித்தார். ஏறாவூர் மிச்நகர் ஹிஸ்புல்லாஹ் கிராமத்தில் வறிய மக்களின் வாழ்வாதாரத்தை முன்னேற்றும் நோக்கில், கிராமிய பொருளாதார அபிவிருத்தி அமைச்சின் நிதி ஒதுக்கீட்டில் ஆரம்பிக்கப்பட்ட தையல் பயிற்சி நிலைய திறப்பு விழா நிகழ்வு (27) இடம் பெற்ற…
ஐ.தே.க.வுக்கு 70 ஆண்டுகள் பூர்த்தி!
ஐக்கிய தேசியக்கட்சி ஆரம்பிக்கப்பட்டு இன்றுடன் எழுபது ஆண்டுகள் பூர்த்தியாகின்றன. கடந்த 1946ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 6ஆம் திகதி ஐக்கிய தேசியக்கட்சி உதயமானது. இந்த நாட்டின் முதல் பிரதமரான டி.எஸ். சேனாநாயக்க தலைமையில் ஐக்கிய தேசியக் கட்சி உருவாக்கப்பட்டது. அன்று முதல் இன்று வரையில் ஐக்கிய தேசியக் கட்சியானது மிதவாத கொள்கைகளைப் பின் பற்றி பல தடவைகள் நாட்டின் ஆட்சியை முன்னெடுத்துள்ளது. தற்போதைய அரசாங்கத்திலும் பிரதான பங்காளிக்கட்சியாக ஐக்கிய தேசியக் கட்சி திகழ்கின்றது. ஐக்கிய தேசியக் கட்சிக்கு…
‘பயங்கரவாதத்தின் எந்தச் செயற்பாடுகளுடனும் எமக்கு தொடர்பில்லை’ – 10 மணிநேர விசாரணையின் பின்னர் முன்னாள் அமைச்சர் ரிஷாட் ஊடகவியலாளரிடம் எடுத்துரைப்பு!
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவத்துடனோ வேறு எந்த பயங்கரவாதச் செயற்பாடுகளுடனோ தனக்கும் தனது குடும்பத்துக்கும் துளியளவும் தொடர்பு கிடையாதென முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார். இன்று காலை (09) குற்றப்புலனாய்வு திணைக்களத்துக்கு அழைக்கப்பட்ட அவர், சுமார் 10 மணிநேர விசாரணையின் பின்னர், ஊடகவியலாளரிடம் கருத்து தெரிவித்த போதே இவ்வாறு கூறினார். மேலும் தெரிவித்ததாவது, “நேற்றுக் காலை (08) மன்னாரில் தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் நான் ஈடுபட்டுக்கொண்டிருந்த போது, குற்றப்புலனாய்வு பிரிவிலிருந்து எனக்கு தொலைபேசி அழைப்பொன்று கிடைக்கப்பெற்றது….
மறிச்சிக்கட்டி வர்த்தமானி பிரகடனம் ! ஜனாதிபதியுடனான முஸ்லிம் அமைப்புக்களின் சந்திப்பு ஒரு வெட்டு முகப் பார்வை
சுஐப் எம்.காசிம் மறிச்சிக்கட்டி வர்த்தமானி பிரகடனம் தொடர்பில் முஸ்லிம் அரசியல் தலைவர்களும் முஸ்லிம் சிவில் அமைப்புக்களும் ஜனாதிபதியுடன் சந்தித்து (2017.05.07) நடாத்திய பேச்சுவார்த்தையின் பிரதிபலனாக வர்த்தமானியை இரத்துச்செய்யக்கோரி, பாதிக்கப்பட்ட மக்கள் மறிச்சிக்கட்டி பிரதேசத்தில் தொடர்ச்சியாக 44 நாட்கள் மேற்கொண்டு வந்த கவனயீர்ப்புப் போராட்டம் நேற்று மாலை (2017.05.08) தற்காலிகமாக முடிவுக்கு வந்திருப்பது ஓர் ஆரோக்கியமான வெற்றியின் முதற்படிக்கல்லாகும். ஜனாதிபதியுடன் அவரது உத்தியோகபூர்வ வாசஸ்தலத்தில் இடம்பெற்ற இந்த சந்திப்பின் போது வர்த்தமானி பிரகடனத்தால் முசலி பிரதேச முஸ்லிம்களுக்கு ஏற்பட்டுள்ள…
இன்டிபென்டன் ஆர்கேட் கட்டடத்தில் உள்ள மீன்களைப் பராமரிக்க 300 இலட்சம் ரூபா தேவை
சுதந்திர சதுக்கத்திற்கு அருகாமையிலுள்ள இன்டி பென்டன் ஆர்கேட் கட்டடத்தில் நிர்மாணிக்கப்பட்டுள்ள மீன் தொட்டியில் உள்ள மீன்களை பராம ரிப்பதற்கு வருடாந்தம் 300 இலட்சம் ரூபா தேவைப் படுகின்றது. ஒரு மீன் 65 ஆயிரம் ரூபா பெறுமதியானது. குறித்த மீன்களை பராமரிப்பதில் பாரிய சிக்கல் ஏற்பட்டுள்ளதாக மேல் மாகாண மற்றும் மாநகர அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்க தெரிவித்தார். இவ்வாறான நகர அபிவிருத்திகளையே முன்னைய அரசாங்கம் முன்னெடுத்தது. எனினும் எமது அர சாங்கத்தில் மேல் மாகாணத்தை பாரிய நகரமாக…
குளியாப்பிட்டிய பிரதேச சபையை மொட்டும், மயிலும் இணைந்து கைப்பற்றியது! பிரதித் தவிசாளராக மக்கள் காங்கிரஸ் இர்பான்!
-ரிம்சி- குருநாகல் மாவட்ட குளியாப்பிட்டிய பிரதேச சபையின் ஆட்சியை ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவும் (மொட்டு), அகில இலங்கை மக்கள் காங்கிரஸும் இணைந்து கைப்பற்றிக்கொண்டது. ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவைச் சேர்ந்த (மொட்டு) விஜயசிறி ஏக்கநாயக்க 21 வக்குகளைப் பெற்று தவிசாளராகவும், அகில இலங்கை மக்கள் காங்கிரஸைச் சேர்ந்த எம்.சி.இர்பான் எதுவித போட்டியுமின்றி, ஏகமனதாகப் பிரதித் தவிசாளராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டனர். தவிசாளரை எதிர்த்துப் போட்டியிட்ட ஐக்கிய தேசியக் கட்சியைச் சேர்ந்த மஹிந்த புஷ்ப குமார 16 வாக்குகளை மாத்திரமே பெற்றுக்கொண்டார்….
மத்திய மாகாண சபையில் அமளி
மத்திய மாகாண சபை உறுப்பினர்களில் ஒரு உறுப்பினருக்கு மாத்திரம் முக்கிய பிரமுகர்களுக்கு வழங்கும் பாதுகாப்பு எப்படி வழங்கப்படுகிறது எனக் கேள்வி எழுப்பிய ஏனைய உறுப்பினர்கள் கடும் எதிர்ப்பை வெளியிட்டனர். மத்திய மாகாண சபையின் அமர்வுகள் நேற்று பேரவை தலைவர் எல்.டி. நிமலசிறி தலைமையில் பல்லேகலவில் உள்ள மாகாண சபை அவையில் நடைபெற்றது. மத்திய மாகாண சபை உறுப்பினரான அசாத் சாலிக்கு மாத்திரம் முக்கிய பிரமுகர்களுக்கு வழங்கப்படும் பாதுகாப்பு வழங்கப்படுவதாகவும் ஏனைய உறுப்பினர்களுக்கு அந்த பாதுகாப்பு வழங்கப்பட வேண்டும்…
ரஷ்ய உலக பொருளாதார பேரவையில் (டாவோஸ்) பங்கேற்க இலங்கைக்கு மீண்டும் அழைப்பு!
-ஊடகப்பிரிவு- 2018 ஆம் ஆண்டுக்கான புனித பீட்டர்ஸ்பர்க் சர்வதேச பொருளாதார பேரவைக்கு (St.Petersburg International Economic Forum (SPIEF)) இலங்கையை உத்தியோகபூர்வமாக அழைக்கின்றோம். எமது இந்த அழைப்பு ரஷ்ய குடியரசின் பிரதி பிரதமர் வால்டிமிரோவிச் ட்வோர்கோவிச் (Vladimirovich Dvorkovich) இனால் நேரடியாக விடுக்கப்பட்டுள்ளது என கைத்தொழில், வர்த்தக அமைச்சர் ரிஷாட் பதியுதீனிடம், இலங்கைக்கான ரஷ்ய குடியரசின் தூதுவர் யூரிமேட்டரைய் (Yuri Materiy) தெரிவித்தார். அமைச்சர் ரிஷாட் பதியுதீனின் விசேட அழைப்பின் பேரில், கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சின்…
‘பிரதேச அபிவிருத்தி மையங்களாக சனசமூக நிலையங்கள் மாறவேண்டும்’ தவிசாளர் எம்.ஏ.எம். தாஹிர்!
-முர்ஷித்- சனசமூக நிலையங்கள் பொழுது போக்கிற்கு பத்திரிகை வாசிக்கும் நிலையங்களாக மட்டுப்படாமல், சமூக, பிரதேச அபிவிருத்தி மையங்களாக மாறவேண்டும் என அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் நிந்தவூர் பிரதேச சபையின் தவிசாளர் எம்.ஏ.எம்.தாஹிர் தெரிவித்தார். அண்மையில் நிந்தவூர் பிரதேச சபையின் கேட்போர் கூடத்தில் இடம்பெற்ற, நிந்தவூர் பிரதேச அபிவிருத்தி தொடர்பான, நிந்தவூர் சனசமுக நிலையங்களுக்கிடையிலான கலந்துரையாடலில் கலந்துகொண்டு பேசும்போதே மேற்கண்டவாரு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், நிந்தவூரை பொறுத்தவரையில் 25 சனசமூக நிலையங்கள் பதியப்பட வேண்டும். ஆனால்…
இணைத்தலைவர் பிரதியமைச்சர் அமீர் அலி தலைமையில் பிரதேச ஒருங்கிணைப்பு கூட்டம்…
கோறளைப்பற்று வடக்கு பிரதேச ஒருங்கிணைப்பு கூட்டம் இன்று 15.05.2017ஆம் திகதி பிரதேச செயலக மண்டபத்தில் இணைத்தலைவர்களான பிரதி அமைச்சர் அமீர் அலி, பாராளுமன்ற உறுப்பினர் யோகேஷ்வரன் ஆகியோரின் தலைமையில் இடம்பெற்றது. பிரதேச அபிவிருத்தி தொடர்பாகவும் கலந்துரையாடப்பட்டது சமுர்த்தி , பாடசாலை ஆசிரியர் பற்றாக்குறை , நட்டு வளர்ப்பு போன்ற விடயங்கள் பற்றி கலந்துரையாடப்பட்டது. பாராளுமன்ற உறுப்பினர்கள் ஶ்ரீநேசன்,மாகாண விவசாய அமைச்சர் துரைராஜசிங்கம், மாகாண சபை உறுப்பினர்களும் கலந்து கொண்டனர்.
கா.பொ.த. சாதாரண தர பரீட்சைக்கான விண்ணப் திகதி முடிவு மே 31
இவ் வருடத்திற்கான கா.பொ.த. சாதாரண தர பரீட்சை டிசம்பர் மாதம் 6 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. 2016 ஆம் ஆண்டுக்கான கா.பொ.த. சாதாரண தர பரீட்சை டிசம்பர் மாதம் 6 ஆம் திகதி முதல் டிசம்பர் 17 ஆம் திகதி வரை நடைபெறவுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது. இதேவேளை, இம்முறை பரீட்சைக்கு தோற்றவுள்ள அனைத்து பாடசாலை மற்றும் தனியார் பரீட்சாத்திகளினதும் விண்ணப்பங்களை ஏற்கும் இறுதித் திகதி இம் மாதம் 28…
