Headlines

3 கிலோ கஞ்சா போதைப் பொருட்களுடன் இருவர் கைது

கஞ்சா போதைப் பொருட்களுடன் நேற்று இரவு கிளிநொச்சியில் இரண்டு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கிளிநொச்சி பொலிஸ் போதைப் பொருள் ஒழிப்பு பிரிவுக்கு கிடைத்த இரகசியத் தகவலை அடுத்து பொலிஸார் மேற்கொண்ட சுற்றிவளைப்பிலே குறித்த இருவரும்  கைது செய்யப்பட்டுள்ளனர். உருத்திரபுரம் எள்ளுக்காடு பகுதியில் முச்சக்கரவண்டி ஒன்றில் அவர்கள் 3 கிலோ வரையிலான போதைப் பொருட்களை இரண்டு பொதிகளில் கடத்திச் செல்ல முயன்றுள்ளனர். கைதானவர்கள் கிளிநொச்சி மற்றும் யாழ்ப்பாணம் ஆகிய பகுதிகளைச் சேர்ந்தவர்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளதோடு அதேநேரம் கிளிநொச்சி நேற்று…

Read More

எல்லை நிர்ணய வர்த்தமானி அறிவித்தலை எதிர்த்து அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் வழக்குத்தாக்கல்

-சுஐப் எம். காசிம் உள்ளூராட்சி மன்ற தேர்தல் முறைத் திருத்தச்சட்ட எல்லை நிர்ணயம் தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் சிறுபான்மை மக்களுக்கு, குறிப்பாக முஸ்லிம், மலையக சமூகத்தவருக்கு  பாதிப்பை ஏற்படுத்துவதால் அதற்கெதிராக நீதிமன்றத்தில் வழக்குத் தொடர அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தீர்மானித்துள்ளதாக அக்கட்சியின் தலைவரும் அமைச்சருமான றிசாட் பதியுதீன் தெரிவித்தார். இது தொடர்பில் வெகு விரைவில் மக்கள் காங்கிரசின் அரசியல் அதியுயர் பீடம் கூடி அடுத்தகட்ட நடவடிக்கையை ஆராய்ந்து தீர்க்கமான  முடிவை மேற்கொண்ட பின்னர் வழக்குத் தாக்கல்…

Read More

முத்து முஹம்மட் எம்.பியின் நத்தார் தின வாழ்த்து செய்தி!

சமத்துவம், சகோதரத்துவம், ஈகை ஆகிய மனிதநேய பண்புகளின் விழாவாக, அன்பைப் பரிமாறி, ஏழை எளியோர்களுக்கு உதவும் திருநாள் தினமான இன்று அனைவருக்கும் இனிய கிறிஸ்துமஸ் நல்வாழ்த்துகள்.

Read More

4 கோடி ரூபாய்கள் பணம் கேட்ட விவகாரம் – போட்டுடைத்தார் றிஷாத்

குடும்பச் சண்டையினை வைத்து தழிருக்கு சொந்தமான தொலைக்காட்சி ஒன்று எமக்கெதிராக கடும் பிரச்சாரங்களை செய்துவருவதாக தெரிவித்துள்ள அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தேசிய தலைவரும்,அமைச்சருமான றிசாத் பதியுதீன் என்னையும், எமது அரசியல் பயணத்தையும் அழிக்கும் கொன்தாராத்து காரர் ஒருவர் என்னிடம் 4 கோடி ரூபாய்கள் பணம் கேட்டது தொடர்பில் இரகசிய பொலீஸார் மற்றும் தேர்தல் ஆணையாளரிடத்தில் முறைப்பாடு ஒன்றினை செய்துள்ளதாகவும் கூறினார். இன்று கொழும்பில் இடம் பெற்ற செய்தியாளர் மாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்றும் போது அவர்…

Read More

மூழ்கும் அபாயத்தை எதிர்கொண்டுள்ள இலங்கை நாடாளுமன்றம்

நாட்டில் நிலவும் சீரற்ற கால நிலை காரணமாக நாடாளுமன்றத்தை அண்மித்து அமைந்திருக்கும் தியவன்னா வாவியின் நீர்மட்டம் கடுமையாக அதிகரித்துள்ளது. கடல் மட்டத்திலிருந்து 1.3 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ள தியவன்னா வாவியின் நீர்மட்டம் தற்போதைக்கு 1.8 மீட்டரை அண்மித்துள்ளது. இன்னும் ஓரிரு அடிகள் நீர்மட்டம் உயரும் பட்சத்தில் நாடாளுமன்றத்தினுள் முற்றாக வெள்ளம் புகுந்துவிடும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் கடற்படை மற்றும் இராணுவத்தினர் நாடாளுமன்றத்தை வெள்ளத்திலிருந்து பாதுகாக்கும் முன்னேற்பாடுகளில் தீவிரமாக ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். எனினும் நாடாளுமன்ற மைதானம் அதனை அண்மித்த பாதைகள்…

Read More

அனர்த்தமா உடன் அறிவிக்கவும்

நாட்டில் தற்போது நிலவுகின்ற மோசடியான காலநிலை காரணமாக ஏற்படும், அவசர அனர்த்த நிலைமைகளை, கட்டுப்படுத்துவதற்கு முப்படையினரும் தயார் நிலையில் இருக்கின்றனர் என்று பாதுகாப்பு அமைச்சு அறிவித்துள்ளது. அனர்த்தம் தொடர்பில் கீழ் கண்ட தொலைபேசி இலக்கங்களுடன் தொடர்பு கொண்டு அறிவிக்கலாம். இராணுவம்: 011 2 434 251, 011 3 818 578 கடற்படை: 011 2 212 230, 011 2 445 368, 011 2 212 231 விமானப்படை:  011 2 343 970,…

Read More

அமைச்சர் ரிஷாட்டின் நிதியொதுக்கீட்டில் மாந்தை மேற்கில் இடம்பெற்ற அபிவிருத்தித் திட்டங்களின் ஆரம்ப நிகழ்வு!

அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும், கைத்தொழில்  மற்றும்  வர்த்தக அமைச்சருமான  ரிஷாட் பதியுதீனின் நிதி ஒதுக்கீட்டில், மாந்தை பிரதேச சபை பிரிவிற்குட்பட்ட பிரதேசங்களுக்கான அபிவிருத்தி வேலைத்திட்டங்கள் நேற்று (10) ஆரம்பிக்கப்பட்டது.  ஆண்டான்குளம் ஆயிசா மஸ்ஜித், சொர்ணபுரி முகைதீன் ஜும்மா பள்ளி, மினுக்கன் அன்னூர் ஜும்மா மஸ்ஜித், வட்டக்கண்டல் முகைதீன் ஜும்மா பள்ளி, கட்டைக்காடு முஹைதீன் ஜும்மா பள்ளி  மற்றும் பள்ளிவாசல்பிட்டி  பாடசாலைக்கான சுற்று மதில் அமைப்பதற்கான வேலைத்திட்டங்கள் ஆரம்பித்து வைக்கப்பட்டன. மாந்தை பிரதேச இணைப்பாளர் சனூஸின்…

Read More

முஸ்லிம் பாடசாலைகளுக்கும் 8 ஆம் திகதி விடுமுறை

இவ்வாண்டின் முதலாம் தவணை பாடசாலை விடுமுறைக்காக சகல முஸ்லிம் பாடசாலைகளையும் இம் மாதம் 8ஆம் திகதி மூடுவதற்கு கல்வி அமைச்சு தீர்மானித்துள்ளதாக கல்வி அமைச்சின் முஸ்லிம் பாடசாலைகள் அபிவிருத்திப் பிரிவின் பணிப்பாளர் இஸட் தாஜுடீன் தெரிவித்தார். இது குறித்து அவர் மேலும் தெரிவித்ததாவது, நாட்டிலுள்ள சகல பாடசாலைகளுக்கும் ஒரே தினத்தில் விடு முறை வழங்க வேண்டும் என்ற முஸ்லிம் சமய கலாசார மற்றும் தபால் துறை அமைச்சர் எம்.எச்.ஏ. ஹலீம் விடுத்த விஷேட வேண்டு கோளின் பிரகாரம்,…

Read More

முச்சக்கர வண்டிக்கு பதிலாக சிறிய ரக கார்கள்

முச்சக்கர வண்டிக்கு பதிலாக சிறிய ரக கார்கள் விரைவில் அறிமுகப்படுத்தவுள்ளதாக நிதியமைச்சர் ரவி கருணாநாயக்க தெரிவித்துள்ளார். அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று (31)இடம்பெற்ற ஊடக சந்திப்பின்போது இதனை தெரிவித்தார். மேலும் அவர் கூறுகையில், நாட்டில் முச்சக்கர வண்டியினால் ஏற்படும் வாகன விபத்துக்கள் அதிகரித்துள்ளது. எனவே அதனை கட்டுப்படுத்தவேண்டிய அவசியம் தற்போது ஏற்பட்டுள்ளது. எனவே இனிவரும் காலங்களில் சிறிய ரக கார்களை அறிமுகப்படுத்த ஆலோசித்து வருகின்றோம். இந்நிலையில் பெற்றோலினால் இயங்கும் முச்சக்கர வண்டி 35,000 ரூபாவாலும், டீசலினால் இயங்கும்…

Read More

ஒரே மாதத்தில் 200 மில்லியன் டாலர்களை வருவாய் ஈட்டி சாதனை படைத்த போக்கிமோன் கோ

கடந்த மாதம் ஜப்பானில் தொடங்கப்பட்ட போக்கிமோன் கோ விளையாட்டுக்கு உலகம் முழுவதும் ஏராளமான பேர் அடிமையாகி வருகின்றனர். இதனால் 15 நாடுகளில் இந்த விளையாட்டைத் தடை செய்துள்ளனர். உலகளவில் அதிக மக்கள் தொகை கொண்ட இந்தியா, சீனா மற்றும் கொரியா போன்ற நாடுகளில் போக்கிமோன் கோவுக்கு இன்னும் அனுமதி வழங்கப்படவில்லை. இந்நிலையில் ஒரு மாத முடிவில் போக்கிமோன் கோ சுமார் 200 மில்லியன் டாலர்களை உலகம் முழுவதும் சம்பாதித்து இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கின்றன. இது கேண்டி…

Read More

அணு ஆயுத போருக்கும் தயாராகவே இருந்தோம்: ரஷ்ய அதிபர் புதின் அதிர்ச்சி தகவல்

கிரிமியாவை ரஷ்யாவுடன் இணைப்பதில் சிக்கல் ஏற்பட்டால், அணு ஆயுதங்களை பயன்படுத்தவும் தயாராக இருந்ததாக புதின் தெரிவித்துள்ளார். கடந்த ஆண்டு உக்ரைனின் கிரிமியா பகுதியை ரஷ்யா தன்னுடன் இணைத்து கொண்டது. இந்த இணைப்பிற்கு அமெரிக்கா உட்பட பல உலக நாடுகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன. ரஷ்யாவுக்கும், உக்ரைனுக்கும் நேரடியாக போர் மூளும் சூழ்நிலையும் ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் நேற்று புதின் பேசும் ஆவணப்படம் வெளியாகியுள்ளது. இதில் அவர், “கிரிமியாவை ரஷ்யாவுடன் இணைப்பதால் என்ன மாதிரி விளைவுகள் ஏற்படும் சரியாக…

Read More