விபத்துக்குள்ளான விமானத்தில் ஜெர்மன் பள்ளி சேர்ந்த 16 மாணவர்கள் உட்பட 150பேரும் உயிரிழப்பு – கருப்பு பெட்டி கிடைத்தது
ஜெர்மன்விங்ஸ் விமான நிறுவனத்தின் 4யூ 9525 என்ற பயணிகள் விமானம் நேற்று ஸ்பெயின் நாட்டின் கடலோர நகரமான பார்சிலோனாவில் இருந்து ஜெர்மனின் டஸ்சல்டிராப் நகருக்கு புறப்பட்டுச் சென்றது. இதில், 16 பள்ளிக்குழந்தைகள் உட்பட 144 பயணிகளும், விமானிகள் உள்ளிட்ட 6 விமான ஊழியர்களும் பயணம் செய்தனர். பிரான்சின் ஆல்ப்ஸ் மலைத்தொடரில் உள்ள பனிச்சறுக்கு பகுதி அருகே பறந்துகொண்டிருந்தபோது, கட்டுப்பாட்டை இழந்து விமானம் விபத்துக்குள்ளானது. 5000 அடி உயரத்தில் பறந்தபோது அபாய எச்சரிக்கை கிடைத்ததாகவும், அதன்பின்னர் தரைக்கட்டுப்பாட்டு மையத்துடனான…
