Headlines

பாகிஸ்தானில் ஜனாதிபதி மைத்திரி, முஸ்லிம் அமைச்சர்களும் இணைவு

இரண்டு நாள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்று பாகிஸ்தான் சென்றடைந்தார். கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் இருந்து (05) பிற்பகல் 1.30 இற்கு  யூ எல் 183 பயணிகள் விமானத்தில் ஜனாதிபதி உள்ளிட்ட குழுவினர் புறப்பட்டுச் சென்றதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. பாகிஸ்தானுக்கு விஜயம் மேற்கொள்ளும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அந்நாட்டு ஜனாதிபதி மற்றும் பிரதமரை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தவுள்ளார்.

Read More

யோசித்தவின் பயிற்சிக்கு 210 இலட்சம் ரூபாய் செலவு

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் புதல்வாரன இலங்கை கடற்படையின் லெப்டினன் யோசித்த ராஜபக்ஷ, வெளிநாட்டில் பயிற்சி பெற்றதற்காக 210 இலட்சம் ரூபாய், கடந்த அரசாங்கத்தினால் செலவிடப்பட்டுள்ளதாக அரசாங்கம் தெரிவித்துள்ளது. அவர், முன்னாள் ஜனாதிபதியின் பாதுகாப்பு பிரிவில் இணைக்கப்பட்டதன் பின்னர் நீக்கப்பட்டார். ஜனாதிபதி பாதுகாப்பாளராக அவருக்கு அந்தளவுக்கு பயிற்சியளிக்கப்படவில்லை என்றும் யோசித்த ராஜபக்ஷ, கடற்படையில் இணைந்துகொள்வதற்கான நடைமுறைகள் பின்பற்றவில்லை என்றும் அவர் பயிற்சி பெற்றமை தொடர்பில் விசாரணை நடத்திய குழுவின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.பாதுகாப்பு அமைச்சினால் கடற்படை தலைமையகத்துக்கு கிடைத்த…

Read More

காத்தான்குடி பிரதேசத்தில் ஊடகத்துறையில் கடமையாற்றுபவர்களிடமிருந்து அங்கத்துவ விண்ணப்பங்கள் கோரல்

எம்.எச்.எம்.அன்வர் காத்தான்குடி மீடியா போரத்தின் 16 வது வருடாந்த மாநாட்டினை முன்னிட்டு பல்வேறு நிகழ்வுகளை நடத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதுடன் காத்தான்குடி பிரதேசத்தில் ஊடகத்துறையில் கடமையாற்றுபவர்களிடமிருந்து அங்கத்துவ விண்ணப்பங்களும் கோரப்படுகின்றன. ஊடகத்துறையில் ஆர்வம் உள்ளவர்களும் அங்கத்தவர்களாக சேர விரும்புபவர்களும் விண்ணப்ப படிவங்களை பெற்று எதிர்வரும் 19.04.2015 ம் திகதிக்கு முன்னர் நேரடியாகவோ அல்லது தபால் மூலமாவோ ஒப்படைக்குமாறு வேண்டப்படுகின்றீர்கள். தகுதியான விண்ணப்பங்கள் பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டு ஏற்றுக்கொள்ளப்படும். விண்ணப்பங்களை பெற வேண்டிய முகவரி எம்.எச்.எம்.அன்வர் (உப செயலாளர்) 16 ஹிஜ்றா…

Read More

பெண்களுக்கான ஜனாஷா குளிப்பாட்டுவதற்கான பயிற்சிப் பட்டறை

பழுலுல்லாஹ் பர்ஹான் காத்தான்குடி இஸ்லாமிய இளைஞர் முன்னணியின் ஏற்பாட்டில் பெண்களுக்கான ஜனாஷா குளிப்பாட்டுவதற்கான பயிற்சிப்பட்டறை ஒன்று அன்மையில் காத்தான்குடி இஸ்லாமிய இளைஞர் முன்னணியின் வளாகத்தில் நடைபெற்றது. இந்நிகழ்வில் சுமார் 50க்கும் மேற்பட்ட பெண்கள் மிக ஆர்வத்தோடு கலந்து கொண்டனர். இப்பயிற்சி நெறியின் வளவாளர்களாக மஃஹதுஸ்ஸுன்னா மகளீர் அரபிக்கல்லூரி விரிவுரையாளர் மௌலவியா சில்மியா தாரிக் தலைமையிலான குழுவினர் கலந்து கொண்டனர்

Read More

முஹமது நபியின் காலத்தில் எழுதப்பட்ட அல் குர்ஆன் பாகங்கள் விஞ்ஞான ரீதியில் உண்மை – ஜேர்மனி பத்திரிகை

இறைத்தூதர் முஹமது நபியின் காலத்தில் எழுதப்பட்ட அல் குர்ஆன் பாகங்கள் விஞ்ஞான ரீதியில் உண்மை என நிரூபிக்கப்பட்டுள்ளதாக ஜேர்மனி பத்திரிகை ஒன்று செய்தி வெளியிட் டுள்ளது. பெர்லின் அரச நூலகத்தில் பல ஆண்டுகள் மறைத்து வைக்கப்பட்டிருக்கும் இந்த குர்ஆன் பாகங்கள் சூரிச்சில் இருக்கும் ஆய்வுகூடத்தில் சோதனை யிடப்பட்டுள்ளது. மிருகத் தோலினாலான ஏழு பக்கங்கள் கொண்ட இந்த அல் குர்ஆன் பாகம் கி.பி. 606 இல் இருந்து 652 ஆம் ஆண்டுகளுக்குள் எழுதப்பட்டவை என்று அந்த ஆய்வின் மூலம்…

Read More

கஹவத்தையில் மீண்டும் குழப்ப நிலை.. தூங்கிக்கொண்டிருந்த பெண்ணை காணவில்லை.. வீட்டில் இரத்தக் கறை

கஹவத்தை, கொட்டஹேதன பிரதேசத்தில் வீட்டிலிருந்து 39வயதான பெண்ணை, இன்று ஞாயிற்றுக்கிழமை அதிகாலையிலிருந்து காணவில்லை என்று தெரிவித்துள்ள பொலிஸார், அவரை தேடும் பணிகளை துரிதப்படுத்தியுள்ளதாக தெரிவித்தனர். இந்த சம்பவத்தினால் கொட்டஹேதன கிராமவாசிகள் மீண்டும் குழப்பமடைந்துள்ளனர். சந்தேகநபரோ அல்லது காணாமல் போன பெண் தொடர்பிலோ இதுவரையிலும் எவ்விதமான தகவல்களும் கிடைக்கவில்லை என்றும் பொலிஸார் தெரிவித்தனர். தனது மனைவியை இன்று ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 1.45 மணியிலிருந்து காணவில்லை என்று வர்த்தகரான அவருடைய கணவன் பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளார். கொட்டஹேதன பிரதேசத்தில் கடந்த…

Read More

புற்றுநோய்க்கு வழிவகுக்கும் எரித்ரோசின் “பி” தர்பூசணி எச்சரிக்கையுடன் ஓர் விழிப்புணர்வு பதிவு! வெளிச்சத்திற்கு வந்த அதிர்ச்சித்தகவல்!

புற்றுநோய்க்கு வழிவகுக்கும் எரித்ரோசின் “பி” தர்பூசணி எச்சரிக்கையுடன் ஓர் விழிப்புணர்வு பதிவு! வெளிச்சத்திற்கு வந்த அதிர்ச்சித்தகவல்! விழிப்புணர்வு தர உதவுங்கள் அதிகம் பகிருங்கள் கோடை வந்தாலே கூடவே அனல் தணிக்க வந்துவிடும் தர்ப்பூசணி. இனிக்கும் இந்தப் பழத்தைக் கடித்துச் சாப்பிட்டால், எவ்வளவு வெயிலையும் சமாளிக்கும் உத்வேகம் வந்துவிடும். அவ்வளவு நீர்ச்சத்து இந்தப் பழத்தில். வீதிக்கு வீதி இளநீர்க் கடைகளைவிட தர்ப்பூசணி கடைகள் கோடையில் முளைப்பது இதனால்தான்.ஆனால் வாட்ஸ் அப்பில் வைரஸாகப் பரவிய அந்த வீடியோ காட்சி நிச்சயம்…

Read More

அரபுலீக்கின் கூட்டு இராணுவம் என்பதை இஸ்லாமிய கூட்டமைப்பின் இராணுவமாக மாற்ற வேண்டும் மோரிதானியாவின் வெளியுறவு அமைச்சர் பாத்திம்மா கோரிக்கை

அரபு நாடுகளிடையே கூட்டு இராணுவத்தை உருவாக்குவது என்ற அரபு லீக்கின் முடிவை அகம் மகிழ வரவேர்கிறேன் என்று கூறியுள்ள மோரிதானியாவின் வெளியுறவு துறை அமைச்சர் பாதிம்மா மேலும் கூறும் போது அரபு லீக் என்பதை மேலும் விரிவாக்கி அதை .இஸ்லாமிய நடுகளின் கூட்டமைப்பு இராணுவமாக மாற்றினால் நான் மேலும் மகிழ்ச்சி கொள்வேன் அந்த கூட்டமைப்போடு இணைந்து மோரிதானியாவும் தனது பணிகளை செய்ய தயாராக இருப்பதாக கூறிய பாத்திமா இது தொடர்ப்பாக அரபு லீக்கிர்கு கடிதம் எழுதியுள்ளதாகவும் தெரிவித்தார்…

Read More

இதுதான் இஸ்லாம்! முஸ்லிம் பெண்மணியின் நேர்மை : 2 செல்போன்,25 சவரன் தங்க நகைகளை காவல்துறை’யில் ஒப்படைத்தார் !

முஸ்லிம் பெண்மணியின் நேர்மை : 2 செல்போன்,25 சவரன் தங்க நகைகளை காவல்துறை’யில் ஒப்படைத்தார் ! ஹைதராபாதில், நேற்றுமுன்தினம் (02-04-2015), கீழே கண்டெடுத்த 25 சவரன் நகை, உள்ளிட்ட விலை உயர்ந்த பொருட்களை, ஒரு முஸ்லிம் பெண்மணி காவல்துறையில் ஒப்படைத்துள்ளார். மேற்படி பெண், ஆசிப் நகரிலிருந்து ‘ஹகீம் பேட்டை’க்கு சென்றுக் கொண்டிருக்கையில், அனாதையாக கீழே கிடந்த ஒரு பையை திறந்து பார்த்தபோது, அதில் தங்க நகைகள், 2 செல்போன்கள் உள்ளிட்ட விலை உயர்ந்த பொருட்கள் இருந்ததைக் கண்டார்….

Read More

நாட்டில் அனைவருக்கும் மத சுதந்திரமுண்டு -ஜனாதிபதி

இந்த நாட்டில் அனைவருக்கும் மத சுதந்திரமுண்டு என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, சனிக்கிழமை (04) தெரிவித்தார். மட்டக்களப்பு இந்துக் கல்லூரி மைதானத்தில் நடைபெற்ற கிறிஸ்;தவ போதகர்கள் ஒன்றியத்தின் பாஸ்கா பண்டிகை வைபவத்தில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் தொடர்ந்து உரையாற்றுகையில், இந்த நாட்டில் அனைத்து மக்களுக்கும் அவர்கள் சார்ந்த மத உரிமை மத சுதந்திரமுண்டு. அவர்கள் தமது மதத்தை பின் பற்றுவதற்கான அனைத்து உரிமைகளும் உண்டு. ஒரு நாட்டை கட்டியெழுப்புவதற்கு மதக்கோட்பாடும் முக்கியமாகும்….

Read More

துபாயில் 140 நாடுகளின் பிரதிநிதிகள் கலந்து கொண்ட கூட்டத்தில் அமைச்சர் றிஷாத்

இர்ஷாத் றஹ்மத்துல்லா ஜக்கிய அரபு இராஜ்சியத்தின் பொருளாதார அமைச்சு ஏற்பாடு செய்திருந்த வருடாந்த முதலீட்டாளர்களுக்கான கூட்டமும்,மற்றும் கண்காட்சியும் அண்மையில் துபாயில் அமைந்துள்ள சர்வதேச கூட்ட அரங்கில் இடம் பெற்றது. ஜக்கிய அரபு இராஜ்சியத்தின் பிரதி ஜனாதிபதியும், பிரதமருமான ஷேய்க் முஹம்மத் பின் ராசிட் அல் மக்தும் தலைமையில் இடம் பெற்ற இந்த அமர்வில் 140 நாடுகளைச் சேர்ந்த பிரதி நிதிகள் இதில் கலந்து கொண்டனர். இலங்கை சார்பில் கைத்தொழில்,வணிகத் துறை அமைச்சர் றிஷாத் பதியுதீன் இதில் கலந்து…

Read More

அரச அதிகாரிகள் நேர முகாமைத்துவத்தை கடைப்பிடிப்பவர்களாக இருக்க வேண்டும் பிரதியமைச்சர் அமீர் அலி

அப்துல்லாஹ் அரச அதிகாரிகள் நேர முகாமைத்துவத்தை கடைப்பிடிப்பவர்களாக இருக்கும்போதுதான் தங்களது கடமைகளைச் சரியாகச் செய்ய முடியுமென்று வீடமைப்பு மற்றும் சமூர்த்தி பிரதியமைச்சர் எம்.எஸ்.எம்.அமீர் அலி தெரிவித்தார். கல்குடா தொகுதியின் ஐந்து பிரதேச செயலகப் பிரிவிலுள்ள திவிநெகும முகாமைத்துவப் பணிப்பாளர்கள் மற்றும் அபிவிருத்தி உத்தியோகத்தர்களுடன் ‘திவிநெகும திட்டத்தினூடாக பிரதேசத்தின் அபிவிருத்தி’ என்ற தலைப்பிலான மாநாட்டில் அவர் இந்தக் கருத்தை வெளியிட்டார். ஓட்டமாவடி பிரதேச சபை கேட்போர் கூடத்தில் இம் மாநாட்டில்  தொடர்ந்து உரையாற்றிய அவர், அரசாங்க அதிகாரிகளில் ஒரு…

Read More