Headlines

மஹிந்தவிற்கு உச்ச நீதிமன்றம் அழைப்பாணை!

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவிற்கு உச்ச நீதிமன்றம் அழைப்பாணை பிறப்பித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. அழைப்பாணை உத்தரவினை பிறப்பிக்க நீதிமன்ற பதிவாளருக்கு அனுமதி வழங்கியுள்ளது. எதிர்வரும் மார்ச் மாதம் 31ம் திகதி நீதிமன்றில் ஆஜராகுமாறு கோரி அழைப்பாணை உத்தரவுகளை பிறப்பிக்க பதிவாளருக்கு, உச்ச நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. பொதுமக்கள் பாதுகாப்புச் சட்டத்தின் ஊடாக நாட்டு பொதுமக்களின் அடிப்படை உரிமைகளை மீறிச் செயற்பட்டதாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த உள்ளிட்டவர்களுக்கு எதிராக முன்னனி சோசலிச கட்சி உச்ச நீதிமன்றில் மனுவொன்றை தாக்கல் செய்திருந்தது….

Read More

முழக்கம் ஏ.எல்.அப்துல் மஜீத்தின் மறைவுக்கு மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிஷாட் அனுதாபம்!

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தவிசாளர் முழக்கம் ஏ.எல்.அப்துல் மஜீத்தின் மறைவு, அம்பாறை மாவட்ட முஸ்லிம் மக்களுக்கு பேரிழப்பாகும் என்று அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியுதீன் தெரிவித்துள்ளார். அவர் விடுத்துள்ள அனுதாபச் செய்தியில் கூறப்பட்டுள்ளதாவது, “சிறந்த மேடைப் பேச்சாளரும் சமூகப்பற்றுள்ளவருமான அப்துல் மஜீத், மக்களுடன் அன்பாகக் பழகக்கூடிய மனிதநேயம் கொண்டவர். இணைந்த வடகிழக்கு மாகாண சபையில், எதிர்க்கட்சி உறுப்பினராக இருந்த அவர், மக்களின் தேவையறிந்து துணிச்சலுடன் கருமமாற்றியவர். கட்சி, பிரதேச, அரசியல் வேறுபாடுகளுக்கு அப்பால் அனைவரையும் மதித்து, மக்கள் பணியாற்றியவர். அன்னாரின் மறைவினால் துயறுற்றிருக்கும் அவரது…

Read More

வவுனியா சின்ன சிப்பிக்குளம் தையற் பயிற்சி நிலையத் திறப்பு நிகழ்வில் பிரதம அதிதியாக அமைச்சர் றிஷாட் பதியுதீன் 

பெண்களுக்கான சுயதொழிலை மேம்படுத்தும் நோக்கோடு கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சினால் வவுனியா சின்ன சிப்பிக்குளம் நிர்மாணிக்கப்பட்டுள்ள தையற் பயிற்சி நிலையத் திறப்பு நிகழ்வில் பிரதம அதிதியாக அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும் அமைச்சருமான ரிஷாட் பதியுதீன்  கலந்து கொண்டார். இந்நிகழ்வில் வட மாகாணசபை உறுப்பினர் ஜயதிலக, அலிகான் ஷரீப் மற்றும் அமைச்சரின் இணைப்பாளர்களான முத்து முகம்மது, அப்துல் பாரி, ஜிப்ரியா உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Read More

அபிவிருத்திகளை ஆராய புதிய குழு – ரணில் தலைமை

மஹிந்த அரசாங்கத்தின் ஆட்சி காலத்தில் நடைமுறைப்படுத்தப்பட்ட பாரிய அபிவிருத்தித் திட்டங்கள் குறித்து ஆராய குழு ஒன்று நியமனமிக்கப்பட்டுள்ளது. அதற்கமைய துறைமுக, நகர அபிவிருத்தித்திட்டம் , வடக்கு அதிவேகப்பாதை போன்றன பொது வசதிகள் திட்டங்கள் தொடர்பாக இலங்கையின் சட்டதிட்டங்களுக்கு அமைவாக இவை நடைமுறைப்படுத்தப்படுகின்றவா? என்பது குறித்து ஆராய்வதற்காகவே இந்த குழு ஒன்று நியமிக்கப்பட்டுள்ளது. இந்தக் குழு பிரதமர் ரணில் விக்கிமசிங்கவை தலைவராக கொண்டு இயங்கும் என்றும் அவருடன் எரிசக்தி மின் சக்தி அமைச்சர் சம்பிக்க ரணவக்க, சுகாதார மற்றும்…

Read More

இலங்கைக்கு சர்வதேச நாணய நிதியத்தினால் கடனுதவி

இலங்கைக்கு 1.5 பில்லியன் அமெரிக்க டொலர்களை கடனுதவியாக வழங்குவதற்கு சர்வதேச நாணய நிதியம் அங்கீகாரமளித்துள்ளது. இது தொடர்பில் சர்வதேச ஊடகங்கள் இன்று செய்தி வெளியிட்டுள்ளன. நாட்டின் ஓர் நிலையான நிதி நிலைமையை உறுதிப்படுத்த சர்வதேச நாணய நிதியத்தினால் கடனுதவியை பெற்றுக் கொள்வதற்கு ஒருமித்த கருத்துணர்வு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் இரு தரப்பினருக்கும் இடையில் கடந்த காலத்தில் கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றதுடன்,  நாணய நிதியம் தொடர்பில் அறிக்கை ஒன்றும் வெளியிடப்பட்டது.

Read More

கடலில் நீராடச் சென்ற இருவர் பலி

நாரமில பகுதியை சேர்ந்த இரு பெண்கள் கடல் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். நேற்று மாலை கடலில் நீராடச் சென்ற வேளை இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. குறித்த சம்பவத்தில் உயிரிழந்தவர்கள் நாரம்மல, தம்பகிரிகம பிரதேசத்தைச் சேர்ந்த 14 வயதுடைய சிறுமியும், 26 வயதுடைய தாயொருவரும் என்று தெரிய வந்துள்ளது. சிலாபம் முன்னேஷ்வரம் கோயிலிற்கு தமது குடும்பத்தினருடன் வந்திருந்த நிலையில் கடலில் நீராடச் சென்ற வேளையே இச்சம்பவம் நிகழ்ந்துள்ளது. அவர்கள் இருவருடைய உடல்களும் பிரதேசவாசிகளால் மீட்கப்பட்டு,சடலம் தற்போது…

Read More

எஹட்டுமுல்ல இளைஞர்கள் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ்ஸில் இணைவு.

அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் அறிமுகம் மற்றும் வட்டார கிளை அமைக்கும் நிகழ்வும் குருநாகல் மாவட்டம் முழுவதும் உள்ள அனைத்து கிராமங்களிலும் சிறப்பாக இடம்பெற்று வருகின்றது. அந்த வகையில் பண்டுவஸ்நுவர தேர்தல் தொகுதி எஹட்டுமுல்ல கிராம மக்கள் மற்றும் இளைஞர்களை அகில இலங்கை மக்கள் காங்கிரஸ்ஸில் இணைத்துக் கொள்ளும் நிகழ்வு நேற்று (17-02-2019) அ.இ.ம.கா குருநாகல் மாவட்டத்தலைவரும் சதொச பிரதி தலைவரும் முன்னால் மாகாணசபை உறுப்பினருமான எம்.என்.நஸீர் (MA) தலைமையில் சிறப்பாக நடைபெற்றது. அகில இலங்கை மக்கள்…

Read More

வாழ்வாதார உதவி வழங்கல்! அப்துல்லாஹ் மஹ்ரூப் எம்.பி பங்கேற்பு!

-ஊடகப்பிரிவு- அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவர், அமைச்சர் ரிஷாட் பதியுதீனின் ஏற்பாட்டில், மக்கள் காங்கிரஸின் பாராளுமன்ற உறுப்பினர் அப்துல்லாஹ் மஹ்ரூபின் முயற்சியில் குச்சவெளி பிரதேச செயலக பிரிவில் சுயதொழில், மீன்பிடி , தையல் தொழில் , சிறுகடை  போன்ற 243 தொழில் முயற்சியாளர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் வேலைத்திட்டத்தில், பல்துறை சார்ந்த கைத்தொழில் உபகரணங்கள் நேற்று (26) தெரிவுசெய்யப்பட்ட பயனாளிகளுக்கு வழங்கப்பட்டது.   இந்நிகழ்வு பிரதேச செயலாளர் திரு. தனீஸ்வரன் தலைமையில், பாராளுமன்ற உறுப்பினர் அப்துல்லாஹ் மஹ்ரூபின் பங்கேற்புடன்…

Read More

உள்ளூராட்சி தேர்தல் 2025; அம்பாறையில் தேர்தல் பிரச்சாரத்தை முன்னெடுத்த தலைவர் ரிஷாட்!

கடந்த ஞாயிற்றுக்கிழமை (13) அம்பாறைக்கு விஜயம் மேற்கொண்ட அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியுதீன், தொடர்ந்து இரு தினங்களாக (13,14) மாவட்டத்தின் பல பகுதிகளில், உள்ளூராட்சி தேர்தல் பிரச்சார நடவடிக்கைகளை முன்னெடுத்திருந்தார். அந்தவகையில், அக்கரைப்பற்று மாநகர சபை, அக்கரைப்பற்று பிரதேச சபை, சம்மாந்துறை பிரதேச சபை, இறக்காமம் பிரதேச சபை, அட்டாளைச்சேனை பிரதேச சபை, பொத்துவில் பிரதேச சபை, காரைதீவு பிரதேச சபை, நாவிதன்வெளி பிரதேச சபை மற்றும் நிந்தவூர் பிரதேச…

Read More

பதப்படுத்தப்பட்ட உணவு தொழில்துறையின் 14-வது வர்த்தக சந்தையின் அங்குரார்ப்பண வைபத்தில் அமைச்சர் றிஷாத்

ஊடகப் பிரிவு கொழும்பு சினமன் லேக் சைட் ஹோட்டலில் இடம்பெற்ற பதப்படுத்தப்பட்ட உணவு தொழில்துறையின் 14-வது வர்த்தக சந்தையின் அங்குரார்ப்பண வைபத்தில் கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சர் றிஷாத் கலந்துக்கொண்டுபோது

Read More

லசந்தவின் கொலை: பொதுமக்களின் உதவியை நாடும் பொலிஸார்

ஊடகவியலாளர் லசந்த விக்கிரமசிங்க கொலையுடன் தொடர்புடையதாக சந்தேகிக்கப்படும் இரு நபர்களின் தகவல்களை பொலிஸ் குற்றத்தடுப்பு பிரிவு வெளியிட்டுள்ளது. அதனடிப்படையில் குறித்த புகைப்படத்தில் உள்ள நபர் 35 வயதானவர் என்றும் 5 அடி 8 அங்குலம் உயரமான நபர் என்றும் சாம்பல் நிற கண்களும், வெள்ளை நிற மேனியுமான நபர் என்றும் பொலிஸார் தெரிவித்துள்ளனர். இதேவேளை மற்றுமொரு நபர் தொடர்பிலும் பொலிஸார் ஓவியமாக வரையப்பட்ட படங்களை வெளியிட்டுள்ளனர். 40 வயதான மேற்குறிப்பிட்ட நபர் 5 அடியும்,10 அங்குலமும் உடைய…

Read More

மஹிநதவினால் நியமிக்கப்பட்ட 62 தூதுவர் உடனடியாக மீண்டும் நாட்டுக்கு அழைப்பு -வெளிநாட்டு அமைச்சர் அதிரடி

அஸ்ரப் ஏ சமத் முன்னைய ராஜபக்ச அரசில் வெளிநாட்டு தூதுரகங்களில் அரசியல் ரீதியில் நியமிக்கப்பட்ட 62 தூதுவர்கள் 32 தூதுவராலயங்களில் கடமையாற்றும் சகலரையும் இந்த வாரத்திற்குள் நியமனங்கள் ரத்துச் செய்யப்பட்டு நாட்டுக்கு வரவழைக்கப்பட நடவடிக்கை எடுத்துள்ளார் வெளிநாட்டு அமைச்சர் மங்கள சமரவீர. இவற்றில் 1 மாதத்திற்கு முன் நியமிக்கப்பட்ட ஹுசைன் முஹம்மத் ஜித்தாவில் உள்ள டொக்டர் உதுமாலெப்பையும் அடங்குகின்றனர். இதில் அனேகமான தூதுவர்கள் கடந்த மாதம் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவுக்காக இலங்கை வந்து தேர்தலில் ஈடுபட்டு விட்டு…

Read More