Headlines

மஹிந்தவை நிரந்தரமாக வீட்டுக்கு அனுப்புவோம்

மஹிந்த ராஜ­ப­க் ஷவை ஆகஸ்ட் மாதம் 18 ஆம் திகதி நிரந்­த­ர­மாக அர­சி­ய­லி­லி­ருந்து விரட்­டுவோம். தோல்­வி­ய­டையும் போராட்­டங்­களில் நாங்கள் ஈடு­ப­ட­மாட்டோம். எனவே , ஒரு முறை மஹிந்­தவை வீட்­டுக்கு அனுப்­பினோம். ஆனால் அவர் அதனை ஏற்­றுக்­கொள்­ளாமல் இருக்­கின்றார். எனவே அவரை மீண்டும் நிரந்­த­ர­மாக வீட்­டுக்கு அனுப்­புவோம் என்­ப­தனை உறு­தி­யாக கூறு­கின்றோம் என்று ஜாதிக ஹெல உறு­ம­யவின் தலை­வரும் ஐக்­கிய தேசிய கட்­சியின் கொழும்பு மாவட்ட வேட்­பா­ள­ரு­மான சம்­பிக்க ரண­வக்க தெரி­வித்தார். கண்­டியில் நேற்று நடை­பெற்ற ஐக்­கிய தேசிய கட்­சியின் முத­லா­வது…

Read More

தாடி வைத்ததால் முஸ்லிம் இளைஞர்கள் பணி நீக்கம்

இந்திய ராணுவத்தில் பணிப்புரிந்த மக்தூம் ஹுசைன் தாடி வைத்திருந்த காரணத்தால் பணியிலிருந்து நீக்கப்பட்டுள்ளார். அவரது வழக்கு தொடர்பாக விசாரணை செய்த நீதிமன்றமும் அவரை பணியிலிருந்து நீக்கியது சரியே என்று தீர்ப்பு கூறியுள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்துகிறது. இந்தியா ஓர் மதச்சார்பற்ற நாடாக இருந்தும் 2 சதவீதம் உள்ள சீக்கியர்களால் தாடி வைத்து அனைத்து அரசு பதவிகளிலும் பணியாற்றும்போது 20 சதவீதம் உள்ள முஸ்லிம்களால் தாடி வைக்க முடியவில்லை என்றால் இந்திய சட்டம் அதிகாரிகளால் கேள்விக்கூத்தாக்கபடுகிறது என்பது ஒருபுறம்…

Read More

“வடபுலமே எங்கள் தாயகம்”

(முஸ்லிம்கள் வடக்கிலிருந்து வெளியேற்றப்பட்டு 26 ஆண்டுகள் கடந்த நிலையில், அவர்களின் மீள்குடியேற்றம் தொடர்பிலும், கடந்த கால கசப்பான அனுபவங்கள் குறித்தும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவர்,  அமைச்சர் றிசாத் பதியுதீன் விடுத்திருக்கும் செய்தி) வடமாகாணத்திலிருந்து புலிகளால் முஸ்லிம்கள் விரட்டப்பட்டு 26 ஆண்டுகள் கழிந்துவிட்டன. இந்த கால்நூற்றாண்டுக் காலப்பகுதிகளில் முஸ்லிம் அகதிகள் பட்ட துன்பங்களும், துயரங்களும் வார்த்தைகளால் வர்ணிக்க முடியாதவை. “அகதிகள்” என்றால் “கதியற்றவர்கள்” என்று பொருள்படுகின்றது. எல்லாவற்றையும் இழந்து, உடுத்த உடையுடன் நாம் தென்னிலங்கையில் நிர்க்கதியாகத்…

Read More

முசலி பிரதேச சபை வேட்பாளரை ஆதரித்து இடம்பெற்ற கூட்டம்!

-ஊடகப்பிரிவு- முசலி பிரதேச சபைத் தேர்தலில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் சார்பில் யானைச் சின்னத்தில்  போட்டியிடும் வேப்பங்குள வட்டார வேட்பாளரான முன்னாள் உப தவிசாளர் எஸ்.எம்.எம்.பைறூசின்  தேர்தல் பிரச்சார கூட்டம் ஒன்று இடம்பெற்றது. பிச்சைவாணிப நெடுங்குளம் அளக்கட்டில் நேற்று (09) இடம்பெற்ற இந்தக் கூட்டத்தில்  ஊர்ப்பிரமுகர்களும், பிரதேசவாசிகளும் பங்கேற்றிருந்தனர்.      

Read More

3 மாவட்டங்களின் ஒருங்கிணைப்பு குழு, இணைத்தலைவராக றிஷாத்

மன்னார், வவுனியா மற்றும் முல்லைத்தீவு மாவட்ட ஒருங்கிணைப்பு குழு இணைத்தலைவராக கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சர் றிஷாத் பதியுதீன் ஜனாதிபதி மைத்திரிபால சிரிசேன அவர்களினால் நேற்று மாலை (06/01/2016) நியமிக்கப்பட்டுள்ளார். மன்னார்,வவுனியா மற்றும் முல்லைத்தீவு மாவட்ட அபிவிருத்திக்குழு இணைத்தலைவராகவும் கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சர் றிஷாத் பதியுதீன் தொடர்ந்துசெயற்படுகின்றார்.

Read More

மத்திய வங்கி விவகாரம்! விசாரணை முடிவு!

மத்திய வங்கி முறிக்கொள்வனவில் முறைகேடு தொடர்பிலான நாடாளுமன்ற கோப் குழுவின்விசாரணைகள் நேற்று (8) முடிவடைந்தன. இந்தநிலையில் இது தொடர்பான அறிக்கை எதிர்வரும் ஒக்டோபர் 13ம் திகதியன்றுநாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் என்று கோப் குழுவின் தலைவர் சுனில்ஹந்துன்நெத்தி தெரிவித்துள்ளார்.

Read More

இஸ்லாமிய முறையில் உயிரினங்களை  அறுக்கும்போது அவற்றுக்கு எந்த வேதனையும் தெரியாது: சோதனை மூலம் நிரூபனம்!

உயிரினங்களை உணவாகக் கொள்ளும் முஸ்லிமல்லாதவர்கள் அவற்றைத் தண்ணீரில் மூழ்கடித்தோ, அல்லது கழுத்தை நெரித்தோ, தடியால் அடித்தோ, ஈட்டியால் குத்தியோ இன்னும் இது போன்ற வழிகளிலோ பிராணிகளின் உயிரைப் போக்குகின்றனர். ஆனால் இந்த வழிமுறைகளில் பிராணிகளைக் கொல்வதை இஸ்லாம் கண்டிக்கிறது. பிராணிகளின் குரல்வளையில் கூர்மையான கத்தி மூலம் அறுத்துத்தான் பிராணிகளைக் கொல்ல வேண்டும் என்று இஸ்லாம் கூறுகிறது. குரல்வளை மிக விரைவாக அறுக்கப்படுவதால் மூளையுடன் உள்ள தொடர்பு அறுந்து போகின்றது. இதனால் அப்பிராணிகளால் வலியை உணர முடியாது. இரத்தத்தை…

Read More

கல்முனைக்குடியில் YLS ஹமீட் ஆற்றிய உரை

கூனிக்குருகி வீடுகளுக்குள் முடங்குகின்ற பாராளுமன்ற பிரதிநிதித்துவமாக இல்லாமல் எமது கட்சி மூலம் கிடைக்கின்ற தேசியப்பட்டியல் கிடைக்கின்ற இந்த கல்முனை பிரதிநிதித்துவம் இன்ஷா அல்லாஹ் மறைந்த தலைவரின் பிறகு மீண்டும் முஸ்லிம்கள் சார்பில் பாராளுமன்றில் முழங்க இருக்கின்ற ஒரு பிரதிநிதித்துவமாக இருக்கும் என்ற வாக்குறுதியை வழங்குகின்றோம் என அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் செயலாளர் நாயகம் வை.எல்.எஸ். ஹமீட் தெரிவித்தார். கல்முனைக்குடி பிரதான வீதியில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் 7 ஆம் இலக்க வேட்பாளர்…

Read More

இலங்கை நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு; 5 இந்தியர்களுக்கு மரண தண்டனை!

5 மீனவர்களுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டதால் மீனவர்கள் பெரும் போராட்டத்தில் ஈடுபட்டதைத் தொடர்ந்து தங்கச்சிமடத்தில் இன்று அரசு மற்றும் தனியார் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இராமேஸ்வரம் அருகே உள்ள தங்கச்சிமடத்தைச் சேர்ந்த 5 மீனவர்கள் போதைப் பொருள் கடத்திய குற்றத்திற்காக கொழும்பு மேல் நீதிமண்றம் மரண தண்டனை விதித்து தீர்ப்பளித்தது. இதனைக் கண்டித்து இராமேஸ்வரம், தங்கச்சிமடம், அக்காமடம் உள்ளிட்ட பல இடங்களில் நேற்று பெரும் போராட்டம் வெடித்தது. வாகன, ரயில் போக்குவரத்து ஸ்தம்பித்தது. பின்னர் தமிழக அரசு…

Read More

தமயந்தி ஜயரத்னவுக்கு ஜனாதிபதி ஆணைக்குழுவினால் அழைப்பு

பாதுகாப்பு அமைச்சின் முன்னாள் மேலதிக செயலாளர் தமயந்தி ஜயரத்ன இன்று பாரிய ஊழல் மோசடி தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்ளும் ஜனாதிபதி ஆணைக்குழுவிற்கு அழைக்கப்பட்டுள்ளார். ரக்னா லங்கா பாதுகாப்பு நிறுவனத்திற்கு இராணுவத்தினரால் வழங்கப்பட்ட துப்பாக்கிகள் மற்றும் ரவைகளை எவன்கார்ட் நிறுவனத்திற்கு விற்பனை செய்த சம்பவம் தொடர்பில் வாக்குமூலம் பெற்று கொள்வதற்காகவே அழைப்பட்டுள்ளார்.இதற்கிடையில் எவன்கார்ட் தலைவர் நிஸ்ஸங்க சேனாதிபதி நாளைய தினம் லஞ்ச ஊழல் ஆணைக்குழுவில் ஆஜராகவுள்ளதாக ஆணைக்குவின் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

Read More

8 கர்ப்பிணிகள் உட்பட 24 பேர் உயிரிழப்பு

நாட்டில் காணப்படும் H1 N1 இன்புளுவென்ஸா வைரஸ் தொற்றுக் காரணமாக இதுவரை 24 பேர் உயிரிழந்துள்ளதுடன், உயிரிழந்தவர்களில் 8 கர்ப்பிணித் தாய்மார்களும் உள்ளடங்குவதாக சுகாதார அமைச்சின் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த வைரஸ் தொற்றுக் காரணமாக தென்மாகாணம் மோசமாகப் பாதிக்கப்பட்டிருப்பதாகவும், கராப்பிட்டிய மற்றும் பலப்பிட்டிய பகுதியிலேயே இரண்டு கர்ப்பிணித் தாய்மார்கள் உயிரிழந்திருப்பதாகவும் சுகாதார அமைச்சின் தொற்றுநோய்ப் பிரிவின் சிரேஷ்ட பதிவாளர் டொக்டர் அத்துல லியனபத்திரன தெரிவித்தார். ஹம்பாந் தோட்டை, காலி, தர்காடவுன், கேகாலை, மட்டக்களப்பு மற்றும் களுபோவில ஆகிய…

Read More

44 அமைச்சுக்களுக்கான செயலாளர்கள் ஜனாதிபதியால் நியமனம்

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையிலான புதிய அரசாங்கத்தினால் உருவாக்கப்பட்ட அமைச்சரவை அந்தஸ்துள்ள 44 அமைச்சுக்களுக்கான செயலாளர்கள், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் இன்று  நியமிக்கப்பட்டுள்ளனர். கடந்த வாரம் புதிய அமைச்சர்கள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முன்னிலையில் பதவியேற்றுக் கொண்டனர். இந்நிலையில் குறித்த அமைச்சர்களுக்கான செயலாளர்கள் ஜனாதிபதியினால் நியமிக்கப்பட்டுள்ளனர்.

Read More