Headlines

எதிர் வரும் தேர்தல் நிலையான இருப்பை உறுதிப்படுத்தும் , இதனை சிறுபான்மை சமூகமே தீர்மானிக்க வேண்டும்-பிரதியமைச்சர் அப்துல்லா மஃறூப்!!!

எதிர்வரும் தேர்தல்கள் சிறுபான்மை சமூகம் தீர்மானிக்கின்ற சக்தியாக இருக்க வேண்டும் . ஜனாதிபதித் தேர்தல்,பாராளுமன்ற தேர்தல் என்பவற்றை சிறுபான்மை வாக்குகள் மூலமே அரசாங்கத்துக்கு சரியான முடிவுகளை வழங்குகிறது என துறை முகங்கள் மற்றும் கப்பற் துறை பிரதியமைச்சர் அப்துல்லா மஃறூப் தெரிவித்தார். ஊடகங்களுக்கு இன்று (21) கருத்து வெளியிடும் போதே இவ்வாறு தெரிவித்த அவர் தொடர்ந்தும் தெரிவிக்கையில் வருகின்ற ஜனாதிபதி தேர்தலில் நாம் சிறுபான்மை சமூகத்தை பாதுகாத்து அரவனைக்ககக் கூடிய எமது இருப்பை உறுதிபடுத்தக்கூடியவர்களுக்கு பின்னால்தான் நிற்க…

Read More

“இயற்கையினால் ஏற்படும் பாதிப்புக்களைக் கூட எனது தலையில் கட்டுகின்றார்கள்” வவுனியாவில் அமைச்சர் ரிஷாட்!

பல்வேறு அபாண்டங்களையும் பழிகளையும் தன்மீது சுமத்தி வருபவர்கள், இப்போது இயற்கையால் ஏற்படுத்தப்படும் பாதிப்புக்களையும் துன்பங்களையும் கூட, தினமும் தனது தலையில் கட்டி வருவதாக அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவர், அமைச்சர் ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார். வவுனியா மாவட்ட பாடசாலைகளின் அதிபர்கள் மற்றும் ஆசிரியர்களுடனான கலந்துரையாடலொன்று, இன்று மாலை (21) வவுனியா முஸ்லிம் மகா வித்தியாலயத்தில் இடம்பெற்ற போது, அமைச்சர் கலந்துகொண்டு உரையாற்றினார்.   இந்த சந்திப்பில் வட மாகாண சபை உறுப்பினர் ஜயதிலக, வவுனியா நகர…

Read More

ஒரு மா நகர சபை உறுப்பினரை விட வலுவிழந்தவர்களா சம்மாந்துறை அரசியல் வாதிகள்..??

துறையூர் ஏ.கே மிஸ்பாஹுல் ஹக் சம்மாந்துறை பொருளாதாராத்தில் நெல் விவசாயச் செய்கையே பிரதானமாக  கொண்ட ஒரு ஊராகும்.அண்மையின் கிழக்கு மாகாணமே வெள்ளத்தில் மூழ்கி நிவாரணம் கொடுக்கும் அளவு மழையினால் பாதிக்கப்பட்டிருந்தது.இதன் காரணமாக விவசாயக் காணிகள் சிலவும் பாதிப்புக்குள்ளாகி இருந்தது.அன்று மழை நீரினால் பாதிக்கப்பட்ட காணிகள் வெள்ளம் வடிந்து இரண்டு கிழமைக்குள் தண்ணீர் இல்லாமல் கருகும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது.இது அதிகாரிகளின் அசமந்தப் போக்கில்லாமல் நீர்த் தட்டுப்பாடு போன்ற நொண்டிக் காரணங்களை கூற இயலாது. கல்முனை மா நகர சபை…

Read More

‘மொஹமட் ஷியாம் கொலை’ சாட்சியாளராக ஜனாதிபதி மைத்திரி

பம்பலப்பிட்டி கோடிஸ்வர வர்த்தகரான மொஹமட் ஷியாம் கொலை வழக்கின் சாட்சியாளராக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பெயரிடப்பட்டுள்ளார். முன்னாள் பிரதி பொலிஸ் அதிகாரி வாஸ் குணவர்தனவுடன் குற்றம் சுமத்தப்பட்டிருந்த பொலிஸ் கான்ஸ்டபிள் பிரியந்த சஞ்சீவவுக்கு சாட்சி வழங்குவதற்காக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பெயரிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. சாட்சிகாரர்களாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உட்பட ஏழு பேர் பெயரிடப்பட்டுள்ளனர். எப்படியிருப்பினும் வழக்கிற்கான சாட்சிகளை விசாரிப்பதற்காக ஜனாதிபதி உட்பட 07 பேரை அழைப்பதா இல்லையா என்பதனை நீதிபதியின் தீர்ப்புக்கு பின்னரே தீர்மானிக்கப்படும். சமீபத்தில்…

Read More

500 குடும்பங்களுக்கு உலா் உணவு வழங்கிவைப்பு

அஸ்ரப் ஏ சமத் மலே அசியோசியனின் கீழ் உள்ள ருபீ பண்ட் 30 வருடகாலமாக நோன்பு காலத்தில் 500 குடும்பங்களுக்கு உலா் உணவு பெருநாள் மற்றும் பணம் ஆகியவற்றை வழங்கி வருகின்றது.இம்முறையும் சிலேவ் ஜலண்டில் உள்ள மலே மைதாணத்தில் வைத்து 500க்கும் மேற்பட்ட கொழும்பு வாழ் வறிய முஸ்லீம்களுக்கு உதவின. இந் நிகழ்வில் அமைச்சா் ஏ.எச்.எம் பௌசி, புரவலா் ஹாசீம் உமா், திருமதி தஸ்னிம் முசாஸ், ரகிம் பல்லி, சம்கேம் டோல் ஆகியோா் இவ் உலா் உணவுகளை…

Read More

பாடசாலை சேவை வாகனங்களில் பிரேக்கில் குறைபாடுகள்

– திலக்கரத்ண திஸாநாயக்க – பாடசாலை மாணவர்களை ஏற்றிச்செல்லும் 32 வான்கள் மற்றும் பஸ்களின் வாகன நிறுத்தும் கருவியில் (பிரேக்) குறைப்பாடுகள் இருந்துள்ளமை கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக, பொலிஸ் மற்றும் மோட்டார் போக்குவரத்து திணைக்களம் தெரிவித்துள்ளது. கம்பஹா மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட திடீர் சுற்றிவளைப்பின் போது சுமார் 100 வாகனங்கள் இவ்வாறு வாகன நிறுத்தும் கருவிகளில் குறைபாடுகளுடன் இயங்கி வந்தமை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இவற்றுள் அநேகமான வாகனங்கள் பாடசாலை மாணவர்களுக்கான சேவையில் ஈடுபடும் வாகனங்கள் என்றும் இவையனைத்தும் கம்பஹா மாவட்டத்துக்குள் இயங்குபவை என்றும்…

Read More

ஊவா மாகாணசபை தேர்தல் ; 11,380 தபால் மூல விண்ணப்பங்கள் நிராகரிப்பு

ஊவா மாகாண சபைத் தேர்தலில் தபால் மூலம் வாக்களிக்கவென விண்ணப்பித்த 11 ஆயிரத்து 380 அரசாங்க உத்தியோகத்தர்களின் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டிருப்பதாக தேர்தல்கள் செயலகம் தெரிவித்தது. நாடு முழுவதுமுள்ள அரசாங்க காரியாலயங்களில் செப்டம்பர் 04 மற்றும் 05 ஆம் திகதிகளில் தபால் மூல வாக்களிப்பு நடத்தப்படவிருப்பதாக தேர்தல்கள் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரிய அறிவித்துள்ளார். இந்நிலையில் தபால் மூலம் வாக்களிப்பதற்காக ஊவா மாகாணத்திற்கென 42 ஆயிரத்து 37 விண்ணப்பங்கள் கிடைக்கப் பெற்றன. இவற்றுள் 30 ஆயிரத்து 657 விண்ணப்பதாரிகளே தபால்…

Read More

மக்களுக்கு சேவை செய்யவே இறைவன் நமக்கு அதிகாரத்தை வழங்கியுள்ளான் எனவே மக்கள் சேவையில் அலட்ச்சியம் செய்யும் எந்த அமைச்சரையும் நான் மன்னிக்க மாட்டேன் சவுதி மன்னர் சல்மான் ஆவேசம்!

சில தினங்களுக்கு சவுதி அரேபியாவின் அமைச்சரவையில் அதிரடி மாற்றங்களை செய்தார் சவுதி மன்னர் சல்மான் 40 ஆண்டுகளாக சவுதி அரேபியவின் வெளியுறவு துறை .அமைச்சராக இருந்த சவுத் அல் பைஸல் உட்பட பலர்கள் அமைச்சரவையில் இருந்து விடுவிக்க பட்டு தகுதி உள்ள பலர்கள் புதிய அமைச்சர்களாக நியமிக்க பட்டனர் அந்த புதிய அமைச்சர்கள் இன்று மன்னர் சல்மான் முன்னிலையில் உறுதி மொழி எடுக்கும் நிகழ்வு இன்று நடை பெற்றது அந்த நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றிய மன்னர்…

Read More

இன்று தேசிய அரசில் இணையும் அந்த ஆறுபேர்

ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களில் ஆறு பேர் (தற்போது தேசிய அரசில் அங்கம் வகிக்காதவார்கள்) தேசிய அரசாங்கத்தில் இன்று புதன்கிழமை இணைந்துகொள்ளவுள்ளனர் என்று நம்பகரமான வட்டாரங்களிலிருந்து தெரியவந்துள்ளது. இந்த அறுவரும், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஆகிய இருவரையும் நாடாளுமன்ற வளாகத்தில் சந்தித்து கலந்துரையாடவுள்ளனர். ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியைச் சேர்ந்த அந்த அறுவரும், இந்த வரவு- செலவுத் திட்டத்துக்கு ஆதரவாக வாக்களிப்பர் என்றும் தெரிவிக்கப்படுகின்றது. TM

Read More

நெசவுத் தொழிலாளர்களின் பிரச்சினைகளை ஆராய நிதியமைச்சரினால் உயர்மட்டக் குழு நியமனம்

-சுஐப் எம்.காசிம் – அம்பாறை மாவட்ட நெசவுத்தொழிலாளர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளை ஆராய்ந்து வெகுவிரைவில் அறிக்கை சமர்ப்பிக்கும் வகையில் உயர்மட்டக்குழு ஒன்றை நிதியமைச்சர் ரவி கருணாநாயக்க நேற்று மாலை (21) நியமித்தார். அமைச்சர்களான றிசாத் பதியுதீன், ரவூப் ஹக்கீம் ஆகியோர் அண்மையில் இடம்பெற்ற அமைச்சரவை உபகுழுக் கூட்டத்தில் அமபாறை நெசவுத் தொழிலாளர்கள் தமது தொழிலை மேற்கொள்வதில் சந்திக்கும் நெருக்கடிகள் குறித்து விளக்கியதன் பிரதிபலனாக நேற்று மாலை நிதியமைச்சர ரவி கருணாநாயக்க தனது அமைச்சுக் கட்டிடத்தொகுதியில் அமைச்சர்கள், அம்பாறை மாவட்ட…

Read More

முசலி அரசினர் கலவன் பாடசாலை இல்ல விளையாட்டு நிகழ்வு 2017

நேற்றையதினம் (02) மன்னார் முசலி அரசினர் கலவன் பாடசாலையில் இடம்பெற்ற 2017ம் ஆண்டுக்கான இல்ல விளையாட்டு போட்டி நிகழ்வில் பிரதம அதிதியாக வடமாகாண சபை உறுப்பினரும் பிரதம எதிர்க்கட்சி கொரடாவுமான அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் உயர்பீட உறுப்பினர் றிப்கான் பதியுதீன் அவர்கள் கலந்து சிறப்பித்தார். மேலும் அமைச்சரின் இணைப்புச்செயலாளர் முஜாஹிர் அகத்தி முறிப்பு அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் இளைஞர் அணி தலைவர் ஹனீப் மற்றும் அயல் பாடசாலை ஆசிரியர்கள் பெற்றோர்கள் விளையாட்டுக்கழகங்கள் கலந்து சிறப்பித்தமை…

Read More