Headlines

758 கோடி மதிப்பிலான பில்கேட்ஸின் பிரமாண்டமான மாளிகை

உலகின் மிகப் பெரும் பணக்காரர்கள் வரிசையில் 2வது இடத்தில்  இருப்பவரும் அமெரிக்காவில் முதல் இடத்தில் இருக்கும் மைக்ரோசாப்ட்  நிறுவனத் தலைவர் பில் கேட்ஸின் சொத்து மதிப்பு ரூ.4.74 லட்சம்  கோடி. இவருக்கு ஏற்கெனவே உள்ள சொத்துக்கள் மூலம் தினசரி  கிடைக்கும் வட்டி ரூ.25 கோடி. இவர் தினமும் ரூ.6 கோடி  செலவழித்தாலும், தனது சொத்தை முழுமையாக செலவழிக்க 218  ஆண்டுகள் ஆகும் என்பது ஏற்கனவே வெளியான தகவல். இவ்வளவு  பெரிய பணக்காரின் வீடு நிச்சயமாக நவீன வசதிகளுடன்…

Read More

தொடர்ந்து விஷமாகும் உணவு – 12பேர் வைத்தியசாலையில்

உணவு விஷமானதால் 12 பேர் நீர்கொழும்பு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். கட்டுநாயக்கவிலுள்ள ஆடைத்தொழிற்சாலை ஒன்றில் கடமையாற்றும் ஊழியர்களுக்கு இன்று வழங்கப்பட்ட உணவே  விஷமானதாக காணப்பட்டது தொடர்ந்து உணவு விஷமாகும் சம்பவம் தொடர்பில், அந்த தொழிற்சாலையின் ஊழியர்கள் இன்று போராட்டம் நடத்துவதற்கு தயாராகிகொண்டிருந்த போது காலவரையரையின்றி தொழிற்சாலை மூடப்பட்டுவிட்டதாக ஊழியர்கள் தெரிவித்துள்ளனர். கடந்த வெள்ளிக்கிழமை உணவு விஷமானதில் இந்த தொழிற்சாலையில் கடமையாற்றிய தங்காலையை சேர்ந்த பெண்ணொருவர் மரணமடைந்தார். அவருக்கு நட்டஈடு வழங்குமாறும் பாதிக்கப்பட்ட ஊழியர்களுக்கு சம்பளத்துடன் கூடிய விடுமுறையை வழங்குமாறும்…

Read More

முசலி வீட்டுத்திட்டம், கமத்தொழில் காப்புறுதி விவகாரங்களுக்கு இவ்வாரம் இறுதி முடிவு! அமைச்சர் ரிஷாட் முசலியில் அறிவிப்பு!

மன்னார் மாவட்டத்தின் முசலி பிரதேசத்துக்கான வீட்டுத்திட்டம், கமத்தொழில் காப்புறுதி நிதி போன்ற விவகாரங்களுக்கு இவ்வாரம் இறுதி முடிவைப் பெற்றுத் தருவதாக கைத்தொழில், வர்த்தக அமைச்சர் ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார். நேற்று காலை (02) முசலிக்கு விஜயம் செய்த அமைச்சர் ரிஷாட் பதியுதீன், சிலாவத்துறை நகர அபிவிருத்தி தொடர்பாக, நகர அபிவிருத்தி அதிகார சபையின் (UDA) அதிகாரிகளுடன் அல்லிராணிக் கோட்டையில் கலந்துரையாடிய பின்னர், முசலி பிரதேச செயலகத்தில் பொதுமக்களுடனான கூட்டமொன்றை நடாத்தினார். அக்கூட்டத்தில் தற்போது முசலியில் சர்ச்சைக்குள்ளாகியிருக்கின்ற வீட்டுத்திட்டம்…

Read More

ஓட்டமாவடி மணிகூட்டு கோபுரம் அமைச்சர் ரிஷாட் பதியுதீனால் திறந்து வைக்கப்பட்டது.

இராஜாங்க அமைச்சர் அமீர் அலியின் நிதி ஒதுக்கீட்டில்  ஓட்டமாவடியில் அமைக்கப்பட்ட மணிகூட்டு கோபுரம்  நேற்று (29) மாலை அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான ரிஷாட பதியுதீனால் திறந்து வைக்கப்பட்டது. இந்த நிகழ்வில் ராஜாங்க அமைச்சர் அமீர் அலி பிரதி அமைச்சர் அப்துல்லா மஹ்ரூப்  உட்பட அரசியல் பிரமுகர்கள் கலந்து கொண்டனர்

Read More

‘ஷரிஆ’ சட்­டத்தை எதிர்த்­த­வர்கள், மரண தண்­ட­னையை வலியுறுத்துவது விரோத அர­சி­யலாகும் – டிலான்

“ஷரிஆ” சட்­டத்தை இச் சபையில் எதிர்த்­த­வர்கள் இன்று மரண தண்­ட­னை எமது நாட்டில் அமுல்­ப­டுத்­தப்­பட வேண்­டு­மென இச் சபையின் பிரே­ர­ணையை முன்­வைப்­பதன் மூலம் பரஸ்­பர விரோத அர­சி­யலை வெளிப்­ப­டுத்­தி­யுள்­ளனர் என பிர­தி­ய­மைச்சர் டிலான் பெரேரா நேற்று சபையில் தெரி­வித்தார். பாரா­ளு­மன்­றத்தில் நேற்று வியா­ழக்­கி­ழமை இடம்­பெற்ற குற்­ற­வியல் கரு­மங்­களில் சீனா­வுடன் பரஸ்­பர உத­வி­ய­ளித்தல் தொடர்­பான கட்­ட­ளைகள் மீதான விவா­தத்தில் உரை­யாற்­றும்­போதே பிர­தி­ய­மைச்சர் டிலான் பெரேரா இவ்­வாறு தெரி­வித்தார். பிர­தி­ய­மைச்சர் சபையில் தொடர்ந்தும் உரை­யாற்­று­கையில், சம்­பந்தன் எதிர்க்­கட்சித் தலை­வ­ரா­வா­வாரா? அனுர…

Read More

இது தான் இஸ்லாம்..!நேபாளுக்கு விரைந்து உணவு வழங்கியது பாகிஸ்தான் விமானம்….!!

உலக ஊடகங்களால் தீவிரவாத நாடாகவே காட்டப்பட்ட பாகிஸ்தானின் உண்மை முகத்தை உலகின் எந்த நாட்டு ஊடகங்களும் காட்டியதில்லை. இந்துக்களை 81 சதவீதம் கொண்ட நாடான நேபாளிலும், இந்துக்களை பெரும்பான்மையாக கொண்ட இந்தியாவிலும் நிலநடுக்கம் ஏற்பட்டவுடன் 95 சதவீதம் முஸ்லிம்களை கொண்ட நாடான பாகிஸ்தான், இந்தியாவின் துயரத்திலும், நேபாளின் துயரத்திலும் பங்கெடுத்துக்கொண்டு உதவுவதாக பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரிப் நேற்று அறிவித்திருந்தார். அதனைத்தொடர்ந்து அதிக பாதிப்புக்குள்ளாகிய நேபாள் நாட்டிற்கு உணவு பொருட்களை விமானம் மூலம் ஏற்றி அனுப்பப்பட்டு விநியோகிக்கப்பட்டது….

Read More

மௌலவி ஏ.சி.எம் புகாரி (கபூரி) எழுதிய “வரலாற்றிலோர் ஏடு” நூல் வெளியீடு!

அஸ்ரப் ஏ. சமத் சம்மாந்துறை கலாபூஷணம் மௌலவி ஏ.சி.எம் புகாரி (கபூரி) எழுதிய ‘வரலாற்றிலோர் ஏடு’ நூல் வெளியீடு  ஆகஸ்ட் 25 திங்கட் கிழமை பி.பகல் 04.00 மணிக்கு  வெள்ளவத்தையில் உள்ள கொழும்பு தமிழ்ச்  சங்கத்தில் நடைபெறவுள்ளது. முஸ்லீம் சமய கலாசார திணைக்களத்தின் முன்னாள் ஆய்வு உத்தியோகத்தர், மௌலவி ஏ.சி.எம். புகாரி இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபண முஸ்லீம் சேவையில் ஒலிபரப்பான ‘வரலாற்றிலோர் ஏடு’ எனும் நிகழ்சியின் நூல் வெளியீடு  முன்னாள் முஸ்லீம் சமய கலாச்சார அமைச்சின் செயலாளர் எஸ்.எச்.எம் ஜெமீல்…

Read More

முஸ்லிம்களின் பிரச்சினைகள் ஐ.நா. அறிக்கையாளரிடம் கையளிப்பு

இலங்கைக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள ஐக்கிய நாடுகள் சபையின் சிறுபான்மை இன விவகாரங்களுக்கான விசேட அறிக்கையாளர் ஐசக் றீட்டாவை முஸ்லிம் சிவில் சமூக அமைப்புக்களின் பிரதிநிதிகள் (10.10.2016) கொழும்பிலுள்ள ஐ.நா அலுவலகத்தில் சந்தித்தனர். இதன்போது இலங்கை முஸ்லிம்கள் முகங்கொடுக்கும் பிரச்சினைகள் தொடர்பாக கலந்துரையாடப்பட்டதுடன் RRT சட்டத்தரணிகள் அமைப்பின் மூலம் முஸ்லிம்கள் எதிர் நோக்கும் பிரச்சினைகள் அடங்கிய மகஜர் ஒன்றும் கையளிக்கப்பட்டது. அரசியலமைப்பு சீர்திருத்தம், தனியார் சட்டம், தம்புள்ள பள்ளிவாசல் விவகாரம், மும்மண்ண முஸ்லிம் பாடலை மைதான விவகாரம், அழுத்தகம…

Read More

வெளிவிவகார அமைச்சின் 13 அதிகாரிகள் பதவி நீக்கப்படவுள்ளனர்?

அர­சாங்­கத்தின் இர­க­சி­யங்­களை வெளி­யிட்­டமை உட்­பட சில குற்­றச்­சாட்­டுக்கள் தொடர்பில் வெளி­வி­வ­கார அமைச்சில் பணி­பு­ரியும் 13 அதி­கா­ரிகள் அடுத்த வாரம் பத­வி­களில் இருந்து நீக்­கப்­ப­ட­வுள்­ளனர். இவ்­வாறு பதவி நீக்­கப்­பட உள்ள அதி­கா­ரி­களில் 8 பேர் உயர் அதி­கா­ரிகள் எனக் கூறப்­ப­டு­கி­றது. மேலும் இந்த அதி­கா­ரிகள் தன்­னிச்­சை­யாக செயற்­பட்டு கொண்டு வாகனம், எரி­பொருள் உட்­பட அனைத்து வச­தி­க­ளையும் பெற்­றுக்­கொண்டு வெறு­மனே காலத்தைக் கடத்தி வரு­வ­தாக தெரி­ய­வந்­துள்­ளது. ஜனா­தி­பதி, பிர­தமர் மற்றும் வெளி­வி­வ­கார அமைச்சர் ஆகியோரிடையில் நடை­பெற்ற பேச்­சு­வார்த்­தையின் பின்னர் இந்த…

Read More

லங்கா அசோக் லேலேன்ட் நிறுவனத்தின் பணிப்பாளராக ஜஸ்ரி ஜவாப்தீன் நியமனம்

கைத்தொழில் மற்றும் வணிக அமைச்சின் கீழ் இயங்கும் லங்கா அசோக் லேலேன்ட் நிறுவனத்தின் பணிப்பாளராக மூதூர் பிரதேச சபை உறுப்பினரும், சமூக சேவையாளருமான அஷ்-ஷெய்ஹ் ஜஸ்ரி ஜவாப்தீன் நளீமி நியமிக்கப்பட்டுள்ளார். இந்நியமனக்கடிதம் அமைச்சர் றிஷாத் பதியுதீனினால் அமைச்சின் கேட்போர் கூடத்தில் வைத்து நியமனக் கடிதம் வழங்கி வைக்கப்பட்டது. இங்கு கருத்து தெரிவித்த பிரதேச சபை உறுப்பினர் பதவி,பட்டங்கள் ஒன்றும் எமக்கு சொந்தமானவை அல்ல. இவை அமானிதமாகும். இவற்றைக் கொண்டு எமது சமூகத்திற்கு என்னென்ன உதவிகள் புரிய முடியுமோ…

Read More

தீவுப் பாடசாலை மாணவர்களுக்கு உதைபந்தாட்ட பயிற்சி!

இலங்கை கடற்படையின் வடக்கு கடற்படை கட்டளையகத்தினால் யாழ் குடா தீவுப் பகுதி பாடசாலை மாணவர்களுக்கு காங்கேசன்துறை பிரதேசத்தில் இரண்டாம் கட்டமாக உதைபந்தாட்ட பயிற்சியொன்று அண்மையில் (25) நடாத்தப்பட்டது. இச்செயற்றிட்டம் கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் ரவிந்தர விஜேகுணவர்தனவின் வழிகாட்டலின் கீழ் ஆரம்பிக்கப்பட்டது. மேற்படி உதைபந்தாட்ட பயிற்சியின் ஒரு கட்டமாக அண்மையில் (27) மண்டை தீவில் அமைந்துள்ள வெலுசுமன கடற்படை முகாமில் நயினாதீவு மற்றும் மண்டை தீவு அணிகளுக்கிடையிலான உதைப்பந்தாட்டபோட்டி நடைபெற்றது. மேற்படி போட்டிகளின் மூலம் தேசிய மட்டத்தில்…

Read More

சுசில் குழுவினர் வேட்பு மனு தாக்கல்

ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் செயலாளர் சுசில் பிரேமஜெயந்த கொழும்பு மாவட்ட செயலகத்தில் சற்று முன்னர் வேட்பு மனுவை தாக்கல் செய்தார். விமல் வீரவம்ச மற்றும் டினேஸ் குணவர்த்தன ஆகியோர் இவருடன் சென்றனர். நேற்றிரவு திடீர் சுகயீனமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட சுசில் பிரேமஜெயந்த இன்று காலை பூரண குணமடைந்து வைத்தியசாலையிலிருந்து திரும்பினார்.

Read More