Headlines

தாராபுரம் அல் ரூஹானியா பெண்கள் அரபுக் கல்லூரிக்கான குடிநீர் இணைப்பு வழங்கிவைப்பு

அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தேசியத்தலைவரும்  கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சருமான ரிஷாட் பதியுதீன் அவர்களின் வழிகாட்டலில் வடமாகாண சபை உறுப்பினரும் பிரதம எதிர்க்கட்சி கொறடாவுமான  றிப்கான் பதியுதீனால் வழங்கப்பட்ட மன்னார் தாராபுரத்தில் நடாத்தப்படும் அல் ரூஹானியா பெண்கள் அரபுக் கல்லூரிக்கான குடிநீர் இணைப்பினை  மாணவர்களின் பாவனைக்காக இன்றையதினம் திறந்து வைத்தார்.   மாணவர்களின் குடிநீர் பிரச்சனையினை தீர்க்கும்  நோக்குடன் 1000 லீட்டர் கொள்வனவு கொண்ட குடிநீர் இணைப்பு  அமைத்து வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Read More

கிழக்கு முதலமைச்சருக்கு சிரேஷ்ட அமைச்சர்கள், பாராளுமன்ற உறுப்பினர்களின் நல்ல செயற்பாடுகளை கற்றுக் கொடுத்திருக்கின்றார்கள் பிரதியமைச்சர் எம்.எஸ்.எஸ்.அமீர் அலி

அரசியல் தலைவர்களுக்கிடையில் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும் என்று தெரியாமல் இருக்கின்ற கிழக்கு முதலமைச்சருக்கு சிரேஷ்ட அமைச்சர்கள், பாராளுமன்ற உறுப்பினர்களின் நல்ல செயற்பாடுகளை கற்றுக் கொடுத்திருக்கின்றார்கள் என கிராமிய பொருளாதார அலுவல்கள் பிரதியமைச்சர் எம்.எஸ்.எஸ்.அமீர் அலி தெரிவித்தார். கிரான் பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட புணாணை மேற்கு கிடச்சிமடு விசரோடை பாலத்திற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு செவ்வாய்கிழமை விவசாய அமைப்பின் தலைவர் எம்.வி.அஹமட் லெப்பை தலைமையில் நடைபெற்ற போது கலந்து கொண்டு உரையாற்றும் போதே மேற்சொன்னவாறு தெரிவித்தார். அங்கு…

Read More

கெக்கிராவ – மகவெவ பிரதேச மக்களின் குடிநீர் பிரச்சினைக்கு இஷாக் ரஹுமான் எம்.பியினால் தீர்வு!

-ஊடகப்பிரிவு- சுமார் 150 இற்கும் அதிகமான சிங்கள குடும்பங்கள் வசிக்கின்ற, பொருளாதாரத்தில் மிகவும் பின் தங்கிய கிராமமே, கெக்கிராவ பிரதேச சபைக்குட்பட்ட மகவெவ கிராமம். இந்த கிராமவாசிகள் பல வருடங்களாக குடிநீர்ப் பிரச்சினையை எதிர்நோக்கி வந்துள்ளனர். இவர்களது பிரச்சினையை அறிந்து அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் அனுராதபுர மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இஷாக் ரஹுமான், இப்பிரதேச மக்களுக்கு கிணறுகளை அமைத்துக்கொடுத்து அவர்களது குடி நீர் பிரச்சினைக்குத் தீர்வினை பெற்றுக்கொடுத்துள்ளார்.  அந்தவகையில் இந்த குடிநீர்க் கிணறுகளை மக்கள் பாவனைக்கு…

Read More

தாக்குதல் மேற்கொள்ளுபவர்களைப் பொலிசார் பாதுகாக்கின்றனர் ; கபே

ஐக்கிய தேசிய கட்சி தலைமையகம் மீது தாக்குதல் மேற்கொள்ளப்படுவதை தடுப்பதற்கு பொலிஸார் நடவடிக்கை எதனையும் எடுக்கவில்லை என தேர்தல் கண்காணிப்பு அமைப்பான கபே தெரிவித்துள்ளது. ஐக்கிய தேசிய கட்சி அலுவலகம் மீது மேற்கொள்ளப்பட்ட திட்டமிடப்பட்ட தாக்குதலை கண்டிப்பதாக தெரிவித்துள்ளது. சம்பவம் தொடர்பாக கபே வெளியிட்டுள்ள அறிக்கையில், தேர்தல் குறித்த அறிவிப்பிற்கு பின்னர் முக்கிய எதிர்கட்சிகளும், அவற்றின் செயற்பாடுகளும் மிரட்டல், அச்சுறுத்தல், வன்முறை தாக்குதல்களுக்கு உள்ளாகியுள்ளன, அதன் உச்சக்கட்டமே சிறிகோத்தா மீதான தாக்குதல். குறிப்பிட்ட தாக்குதல் ஐக்கிய தேசிய…

Read More

கோத்தபாய மாலைதீவுக்குத் தப்பியோட்டம்!!

நேற்று முன்தினம் நடந்த அதிபர் தேர்தலின் முடிவுகள் வெளிவரத் தொடங்கியதும், தனது மனைவி அயோமாவுடன், விமானப்படை விமானம் ஒன்றில் கோத்தபாய ராஜபக்ச மாலைதீவுக்குத் தப்பிச் சென்று விட்டார். மாலைதீவுக்குச் செல்வதற்கு முன்கூட்டியே வீசா பெறத் தேவையில்லை. வீசா இல்லாமல் செல்லக் கூடிய மற்றொரு நாடாக சிங்கப்பூர் இருந்தாலும், அங்கு இராணுவ விமானத்தில் செல்வதற்கு அனுமதி வழங்கப்படாது. அதேவேளை, ராஜபக்சவின் புதல்வர்களும் சீனாவுக்குச் சென்றுவிட்டனர். இதற்கிடையே, நேற்று முன்தினம் இடம்பெற்ற தேர்தலில் தாம் தோல்வியடைவதை உணர்ந்து கொண்டு மகிந்த…

Read More

சிறுபான்மை சமூகத்தை சேர்ந்த கட்சிகள் ஒன்றினைந்து பொதுத் தேர்தலின் பின் பலமிக்க நாடாளுமன்றத்தை அமைப்பார்கள்

எதிர்வரும் பாராளுமன்ற பொதுத் தேர்தலின் பின் சிறுபான்மை சமூகத்தை உள்ளடக்கிய கட்சிகள் ஒன்றினைந்து பலமிக்க நாடாளுமன்றத்தை சஜீத் பிரேமதாசவின் தலைமையில் உருவாக்குவார்கள் என்ற நம்பிக்கை இப்போது எமக்கு ஏற்பட்டிருக்கிறது என தம்பலகாம பிரதேச சபையின் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் உறுப்பினர் எச்.தாலிப் அலி ஹாஜியார் தெரிவித்தார். தம்பலகாமத்தில்  (23) இடம் பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே இவ்வாறு தெரிவித்த அவர் தொடரந்தும் அங்கு உரையாற்றுகையில் மக்களே அதிகாரங்களை தெரிவு செய்கிறார்கள் மக்களுடைய…

Read More

கல்முனை வீடமைப்பு கிளைக் காரியாலயம் இடம்மாறாது. அமைச்சர் றிஷாட்டிடம் அமைச்சர் சஜித் நேரில் உறுதி

ஊடகப்பிரிவு தேசிய வீடமைப்பு அதிகாரசபையின் கல்முனைக் கிளைக் காரியாலயத்தை ஒரு போதும் இடமாற்றப்போதில்லை என்று அமைச்சர் சஜித் பிரேமதாச, அமைச்சர் றிஷாட் பதியுதீனிடம் இன்று (2017.05.09) காலை உறுதியளித்தார். அமைச்சரைவக் கூட்டம் முடிவடைந்த பின்னர் அமைச்சர் சஜித் பிரேமதாசவை சந்தித்த அவர்  இந்தக் கிளைக்காரியாலயத்தை இடமாற்ற மேற்கொள்ளப்பட்டுவரும் முயற்சிகள் குறித்து அம்பாறை முஸ்லிம் பிரதேச மக்கள் கவலைகொண்டுள்ளதாகவும் இவ்வாறான நிலை ஏற்பட்டால் அந்தப் பிரதேச மக்களுக்கு காரியங்களை நிறைவேற்றுவதில் பல்வேறு அசௌகரியங்கள் ஏற்படுவதற்கான சூல்நிலை உருவாகுமென்றும் அவர்…

Read More

ரவூப் ஹக்கீம் முஸ்லிம் சமூகத்தின் விடயத்தில் பொடு போக்குடன் நடந்து கொண்டார்

முன்னாள் ஜனாதிபதிகளான ஆர்.பிரேமதாச மற்றும் சந்திரிக்கா குமாரணதுங்க ஆகியோர் ஜனாபதியில் அமர்வதற்கு ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் ஸ்தாபகத் தலைவர் மர்ஹூம் அஷ்ரப் அவர்கள் செயற்பட்டதாக தெரிவித்துள்ள அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தேசிய தலைவர்,அமைச்சர் றிசாத் பதியுதீன் அவரது மறைவிற்கு பின்னர் தலைவராக வந்த ரவூப் ஹக்கீம் முஸ்லிம் சமூகத்தின் விடயத்தில் பொடு போக்குடன் நடந்து கொண்டார் என்றும் கூறினார். திகாமடுல்ல மாவட்டத்தில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் மயில் சின்னத்தில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதிரத்து வரிப்பொத்தாஞ்சேனையில்…

Read More

பாகிஸ்தான் – இலங்கை நட்புறவு நிகழ்வு!

இலங்கை பாகிஸ்தான் நாடுகளுக்கிடையிலான நட்புறவு கொண்டாட்ட நிகழ்வு எதிர்வரும் 21 ஆம் திகதி கொழும்பு கிராண்ட் ஒரியன்ட் ஹோட்டலில் நடைபெறவுள்ளது. இலங்கை – பாகிஸ்தான் நட்புறவு (SLPAFA) கழகம் இலங்கைக்கான பாகிஸ்தான் உயர் ஸ்தானிகராலயத்துடன் இணைந்து இந்நிகழ்வினை ஏற்பாடு செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது. இடம்பெறவுள்ள இந்நிகழ்வில் இலங்கை பாகிஸ்தான் சமூகத்தினைச்சார்ந்த பல மக்கள் கலந்து கொள்ளவுள்ளதாக எதிர்பார்க்கப்பட்டுள்ளதாக நிகழ்வின் ஒருங்கிணைப்பாளர்கள் தெரிவித்துள்ளனர். பங்குபற்றுனர்கள் குழுக்களாக பிரிக்கப்பட்டு அவர்களுக்கிடையில் கேள்விகள் தொடுக்கப்பட்டு போட்டி நிகழ்வும் இடம்பெறவுள்ளது. கேட்கப்படும் கேள்விகள் இலங்கை…

Read More

தெஹிவளை பள்ளியை பாதுகாக்க 176 பள்ளிவாசல்கள் களத்தில்!

பிக்குகளினால் அடக்குமுறைக்கு உள்ளாக்கப்பட்டுள்ள தெஹிவளை பாத்தியா பள்ளிவாசாலை பாதுகாக்க கொழும்பு பள்ளிவாசல்கள் சம்மேளனம் களத்தில் குதித்துள்ளதாக நம்பகரமாக தெரியவருகின்றது. கொழும்பு பள்ளிவாசல்கள் சம்மேளணத்தில் அங்கம் வகிக்கும் 176 பள்ளிவாசல்கள் ஒன்றிணைந்து பாத்திய பள்ளிவாசலை பாதுகாக்க முன்வந்துள்ளது. கடந்த ஒரு மாத காலமாக பௌத்த பிக்குகளினாலும் பொலிசாரினாலும் தெஹிவளை பாத்தியா பள்ளிவாசலக்கு இடைஞ்சல் கொடுக்கப்பட்ட நிலையிலேயே கொழும்பு பள்ளிவாசல்கள் சம்மேளனம் இம்முடிவை எடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Read More

மீள்குடியேற்ற செயலணி ஊடாக இடம்பெயர்ந்தோர்,பாதிக்கப்பட்டோர் தகவல் திரட்டல்

மீள்குடியேற்ற செயலணி ஊடாக நீண்டகால உள்ளக இடம்பெயர்ந்தவர்களை மீண்டும் வடமாகாணத்தில் மீள்குடியேற்றுவதற்கான நடவடிக்கையினை மேற்கொள்ளும் முகமாக தகவல் திரட்டும் விண்ணப்ப படிவத்தை மீள்குடியேற்ற செயலணி வெளியீட்டு உள்ளது. குறிப்பாக மோதல் காரணமாக 1990ஆம் ஆண்டு டிசெம்பர் மாதம் 31ஆம் திகதிக்கு முன்னர் வடமாகாணத்தில் இருந்து வெளியேற்றப்பட்டு நிண்டகாலமாக உள்ளக இடப்பெயர்வால் பாதிக்கப்பட்டவர்கள் தொடர்பான மக்கள் தொகை கணிப்பில் பங்குபற்றுவோர் தொடர்பாக பதிவு செய்யப்பட உள்ளது. எனவே நிங்களும் இடம்பெயர்ந்தோர் என்றால் கீழ் உள்ள விண்ணப்படிவங்களை பூர்த்தி உரிய…

Read More

உமா ஓயா திட்டத்துக்கு எதிராக ஆர்ப்பாட்டம்

எல்லப் பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட மக்கள், உமா ஓயாத் திட்டத்தின் விளைவாகத் தமக்கான நீரைத் தாம் இழப்பதாகத் தெரிவித்து, எதிர்ப்பு ஆர்ப்பாட்டமொன்றில், இன்று புதன்கிழமை (21) காலை முதல் ஈடுபட்டுள்ளனர்.

Read More