Headlines

ஐக்கிய தேசிய முன்னணி பங்காளி கட்சிகளிடையே இன்று உடன்படிக்கை கைச்சாத்து.

ஐக்கிய தேசிய முன்னணியின் பங்காளிக் கட்சிகளுக்கு இடையிலான புரிந்துணர்வு உடன்படிக்கை இன்று (01) தாஜ் சமுத்ரா ஹோட்டலில் கைச்சாத்திடப்பட்டது. புதிய ஜனநாயக முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாச மற்றும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க ஆகியோர் தலைமையிலேயே கூட்டணிக்கான உடன்படிக்கை கைச்சாத்திடப்பட்டுள்ளது. உடன்படிக்கையில் ஐக்கிய தேசியக் கட்சி,தமிழ் முற்போக்கு கூட்டணி,முஸ்லிம் காங்கிரஸ்,அகில இலங்கை மக்கள் காங்கிரஸ்,ஜாதிக ஹெல உருமய உட்பட 10ற்கும் அதிகமான கட்சிகள் கைச்சாத்திட்டுள்ளன. இந்த நிகழ்வின்போது முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்கவும் கலந்து…

Read More

முன்னாள் எம்.பி நஜீப் அப்துல் மஜீத் அவர்களின் மறைவுக்கு மக்கள் காங்கிரஸ் தவிசாளர் அமீர் அலி அனுதாபம்!

முன்னாள் எம்.பி நஜீப் அப்துல் மஜீத் அவர்களின் மறைவுக்கு மக்கள் காங்கிரஸ் தவிசாளர் அமீர் அலி அனுதாபம் தெரிவித்துள்ளார். அவரது அனுதாபச் செய்தியில் குறிப்பிட்டுள்ளதாவது, “கௌரவ முன்னாள் திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் அமைச்சரும் கிழக்கு மாகாணசபை முதலமைச்சருமான எனது உறவினரும் நெருங்கிய நண்பருமான நஜீப் அப்துல் மஜீத் அவர்கள் இன்று இறையழைப்பை ஏற்றுக் கொண்ட செய்தி என்னை மிகவும் கவலையில் ஆழ்த்தியது. திருமலை மாவட்டத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தி தனது தந்தை வழியில் அரசியல் பயணத்தை மேற்கொண்ட நண்பர்…

Read More

தோல்விக்கு பொறுப்பேற்று பதவியை துறந்தார் பஸில்

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி யின் தேசிய அமைப்பாளர் பதவியில் இருந்து முன் னாள் பொரு ளாதார அபி விருத்தி அமைச்சர் பஸில் ராஜபக்­ஷ விலகியுள்ளார். ஜனா திபதித் தேர்தலில் மஹிந்த ராஜபக்­ வின் தோல்விக்கு முழு பொறுப்பை ஏற்று அவர் இவ்வாறு பதவி விலகியுள்ளார். ஜனவரி 15ஆம் திகதியுடன் (நேற்றுடன்) ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி தேசிய அமைப்பாளர் பதவியில் இருந்து விலகுவதாக பஸில் ராஜபக்ஷ­ அறிவித்துள்ளார் என அவரது ஊடகப் பிரிவு விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது…

Read More

ஹிஜாப் அணியும் முஸ்லிம் பெண்ணுக்கு பணி வழங்க மறுத்த அமெரிக்க நிறுவனம்

சாமன்தா, இவர் அமெரிக்காவை சார்ந்த ஒரு இஸ்லாமிய சகோதிரி. இவர் தனது 17 ஆவது வயதில் அமெரிக்க நிறுவனம் ஒன்றிடம் வேலைக்காக விண்ணப்பத்தார். அவர் விண்ணபித்த வேலைக்கு உரிய அனைத்து தகுதியும் அவரிம் இருந்தும், அவர் ஹிஜாப் அணியும் இஸ்லாமிய பெண்ணாக இருந்தார் என்பதற்காக அவருக்கு அந்த வேலை வாய்ப்பை அந்த நிறுவனம் நிராகரித்தது. இதனை எதிர்த்து சாமன்தாவின் சார்பில் அமெரிக்காவில் உள்ள இஸ்லாமிய அமைப்பு ஒன்று நீதிமன்றத்தின் வாசலை தட்டியது. பல கட்ட விசாரணைகளுக்கு பிறகு வழக்கின்…

Read More

அபாயா விவகாரம்: ஜனாதிபதி, பிரதமருக்கு ரிஷாத் பதியுதீன் கடிதம்

உள்நாட்டலுவல்கள் அமைச்சு கடந்த மே மாதம் 29ஆம் திகதி வெளியிட்ட அரசாங்க ஊழியர்களின் ஆடை தொடர்பான சுற்று நிருபத்தை,  மீண்டும்திருத்தி வௌியிடுவதில் காலம் தாழ்த்தப்படுவதால் முஸ்லிம் பெண்கள் அலுவலகங்களுக்குச் செல்வதில் பெரும் சிரமங்களை எதிர்கொள்வது தொடர்பில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் முன்னாள் அமைச்சருமான ரிஷாத் பதியுதீன் அவர்கள் ஜனாதிபதி மைதிரிபால சிரிசேன, பிரதமர் ரணில் விகரமசிங்க மற்றும் அமைச்சர் ரஞ்சித் மத்தும பண்டாரவின் கவனத்திற்கு கொண்டு வந்துள்ளளார். இச்சிக்கலைத் தீர்த்து வைக்க முகத்தை திறந்து…

Read More

“அவதூறுகளினாலும், அபாண்டங்களினாலும் மக்கள் காங்கிரஸின் எழுச்சியை மட்டுப்படுத்திவிட முடியாது” களுத்துறையில் அமைச்சர் ரிஷாட் தெரிவிப்பு!

-ஊடகப்பிரிவு- அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் மக்கள் செல்வாக்கை குறைக்க அரசியல் எதிரிகள் எத்தனை சதித் திட்டங்கள் தீட்டினாலும், தேர்தல் முடிவுகள் சரியான பாடத்தை அவர்களுக்கு புகட்டுமென்று அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவர், அமைச்சர் ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார். களுத்துறை நகரசபைத் தேர்தலில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் சார்பாக மயில் சின்னத்தில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து, களுத்துறை நகரசபை முதன்மை வேட்பாளர் ஹிஷாம் சுஹைல் தலைமையில், களுத்துறை தெற்கு பள்ளிவீதியில் (12) இடம்பெற்ற தேர்தல்…

Read More

மட்டக்குளி வாழ் மக்களுக்கு வாழ்வாதாரம் வழங்கும் நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்துகொண்ட அமைச்சர் றிஷாட் பதியுதீன்..

அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் மேல் மாகாண சபை உறுப்பினர் மொஹம்மட் பாயிஸின் நிதியொதுக்கீட்டில், வாழ்வாதாரம் வழங்கும் நிகழ்வு மட்டக்குளியில் இடம்பெற்ற போது பிரதம அதிதியாக கட்சியின் தலைவரும், கைத்தொழில் மற்றும் வர்த்தகம், நீண்டகால இடம்பெயர்ந்தோர் மீள்குடியேற்றம், கூட்டுறவு அபிவிருத்தி அமைச்சருமான ரிஷாட் பதியுதீன் கலந்து கொண்டார். இந்நிகழ்வில் இராஜாங்க அமைச்சர் அமீர் அலி, பிரதியமைச்சர் அப்துல்லாஹ் மஹ்ரூப், பாராளுமன்ற உறுப்பினர்களான முஜிபுர் ரஹ்மான், இஸ்மாயில் மற்றும் கட்சியின் செயலாளர் நாயகம் எஸ் சுபைர்டீன், இலங்கை சீமெந்து…

Read More

“100 நாள் 200 வேலைத் திட்டம்”

திருகோணமலை மாவட்ட அபிவிருத்திக்குழு இணைத்தலைவரும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தேசிய அமைப்பாளருமான பாராளுமன்ற உறுப்பினர் அப்துல்லா மஹ்ரூப் அவர்களின் திருகோணமலை மாவட்டத்தின் அபிவிருத்தி நோக்கில். திருகோணமலை நகர சபை உறுப்பினர் முக்தார் , நகரசபை வேட்பாளர்களான பைசல் , பண்டுசேன ஆகியோர்களின் வேண்டுகோளுக்கிணங்க 4 வது வேலைத்திட்டம் – நெல்சன்புற வடிகான் புனரமைப்பு 2 மில்லியன் ரூபாவிலும் 5 வது வேலைத்திட்டம் – ஜின்னா நகர் 1 வது ஒழுங்கை கொங்ரீட் வீதி 1 மில்லியன்…

Read More

பெரும்பான்மைக்கு கிடைக்காத அதிஷ்டம் அமைச்சர் றிசாட் மூலம் சிறுபான்மையினருக்கு….. 

ஜப்பான் நாட்டு அரசாங்கத்தின் நிதி உதவியுடன் UN HABITED நிறுவனத்தின் அனுசரணையில் அமைச்சரின் வேண்டுகோளின் பேரில் முசலி மண்ணிற்கு அதி சிறந்த பாடசாலைகள் திறந்து வைக்கும் நிகழ்வு இன்று நடைபெற்றது.. இலங்கை நாட்டிற்கான ஜப்பான் தூதுவராக பான்கிமூன் அவர்கள் பணியாற்றும் பொழுது அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தேசியத்தலைவர் ரிஷாட் பதியுதீன் அவர்களின் நீண்ட நாள் முயட்சியில் அனைத்து வசதிகளையும் கொண்ட பாடசாலை எமது மக்களுக்கு வழங்கப்பட்டுள்ளது பல மில்லியன் பெறுமதியான இப்பாடசாலை கட்டிடங்கள் கொண்டச்சி மற்றும்…

Read More

ஞானசாரரின் தேரர் அந்தஸ்து பறிக்கப்பட வேண்டும்! தம்பர அமில தேரர்

பிக்குகளுக்கான காவியுடை அணிந்து கொண்டு அடாவடியாக செயற்படும் ஒரு சிலரின் நடவடிக்கை காரணமாக பௌத்தமதம் அவமதிக்கப்படுவதாக தம்பர அமில தேரர் விமர்சித்துள்ளார். பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரரின் நீதிமன்ற அவமதிப்பு விவகாரம் மற்றும் ஹோமாகமை நீதிமன்றத்தில் பிக்குகள் மேற்கொண்ட அடாவடிகள் குறித்து ஊடகங்களுக்கு கருத்து வெளியிடும்போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார். ஜயவர்த்தனபுர பல்கலைக்கழகத்தின் சிரேஷ்ட விரிவுரையாளரான தம்பர அமில தேரர் தொடர்ந்தும் தெரிவிக்கையில், காவியுடை தரித்துக் கொண்டு பௌத்தள பிக்குகளாக…

Read More

பாராளுமன்ற கட்டிட தொகுதியில் அமைச்சர் றிஷாட் பதியுதீனை சந்தித்த மக்கள் காங்கிரசின் தம்பலகாம மத்திய குழுவினர்!!!

திருகோணமலை மாவட்ட தம்டலகாமம் பிரதேசத்தின் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் மத்திய குழுவினர் துறை முகங்கள் மற்றும் கப்பற் துறை  பிரதியமைச்சரும் கட்சியின் தேசிய அமைப்பாளருமான  அப்துல்லா மஹரூப் அவர்களின் ஏற்பாட்டில் அகில இலங்கை மக்கள் காங்கிரசின் தலைவரும் அமைச்சருமான ரிஷாட் பதியுதீனை சந்தித்துள்ளனர். குறித்த சந்திப்பானது  பாராளுமன்ற கட்டிடத் தொகுதியில்    இடம் பெற்றது. மத்திய குழுவினர் அமைச்சரை சந்தித்து கலந்துரையாடலில் ஈடுபட்டதுடன் பிரதேச அபிவிருத்தி தொடர்பாகவும் தங்களது கருத்துக்களையும் முன்வைத்தார்கள். விவசாய நன்னீர் மீன்பிடி…

Read More

தீயணைப்பு படையினரின் நிரந்தர நியமனத்திற்கு ஆளுநரிடம் அனுமதி

கல்முனை மாநகரசபை தீயணைப்பு படையினரின் நிரந்தர நியமனத்திற்கு கிழக்கு மாகாண ஆளுநரின் அனுமதி கோரப்பட்டிருப்பதாக மாநகர ஆணையாளர் ஜெ.லியாகத் அலி தெரிவித்தார். தீயணைப்பு படையினருடனான கலந்துரையாடல் நேற்று கல்முனை மாநகரசபையில் நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே இவ்வாறு கூறினார், முன்னாள் முதல்வர் சட்டத்தரணி நிஸாம் காரியப்பரின் பெரும் முயற்சியினால் 2014ஆம் ஆண்டு கல்முனை மாநகரசபைக்கு தீயணைப்பு படைப்பிரிவு ஒன்று உருவாக்கப்பட்டது. அதன்போது அந்த பிரிவில் கடமையாற்றுவற்கு மாநகரசபையினால் 11 பேருக்கு தற்காலிக நியமனம்…

Read More