Headlines

மது போதையில் வாகனம் செலுத்திய 254 சாரதிகள் கைது

கடந்த 24 மணித்தியாலங்களில் மது போதையில் வாகனம் செலுத்திய 254 சாரதிகள் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். நாடாளாவிய ரீதியாக பொலிஸாரால் முன்னெடுக்கபட்டு வரும் சோதனை நடவடிக்கைகளின் அடிப்படையில் இந்த கைதுகள் இடம்பெற்றுள்ளன. கடந்த 10 ஆம் திகதி முதல் இதுவரையில் மதுபோதையில் வாகனம் செலுத்திய 473 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இதில் மோட்டார் சைக்கிளில் பயணித்தவர்களே அதிகமாக கைதுச்செய்யப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. பொலிஸாரால் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Read More

அமைச்சர் சஜித் அமைச்சினை பொறுப்பெடுத்த ஒருமாதத்தில் 600 மில்லியன் சேமிப்பு

அஸ்ரப் ஏ சமத் கடந்த ஆண்டு ஜனவரி- பெப்ரவரி – 20014 ஆம் ஆண்டில் 2 மாதத்திற்குள் முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்ச இலங்கை பொறியியற் கூட்டுத்தாபனத்தில் 600 மில்லயன் ருபாவை தேவையற்ற முறையில் அரச நிதியை செலவு செய்திருந்தார். அதே போன்று தேசிய வீடமைப்பு அபவிருத்தி அதிகார சபையிலும் 170 மில்லியன் ருபாவையையும் தேவையற்ற வீனான செலவுகளை செய்திருந்தார். ஆனால் நான் இந்த அமைச்சினை பாரமெடுத்து 2015 ஜனவரி பெப்;ரவரி மாதத்தில் மட்டும் அரச பொறியற்…

Read More

இறுதிக் கட்ட மனித உரிமை மீறல்கள் குறித்த விசாரணை அறிக்கை தயார்!

யுத்த காலத்தில் இடம்பெற்றதாகக் கூறப்படும் மனித உரிமை மீறல் சம்பவங்கள் குறித்து அறிக்கை ஒன்று தயாரிக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஆணைக்குழு அறிவித்துள்ளது. குறித்த அறிக்கை எதிர்வரும் நாட்களில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் கையளிக்கப்படும் என காணாமல் போனோர் தொடர்பான முறைப்பாடுகள் குறித்து விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் தலைவர் மெக்ஸ்வல் பரணகம தெரிவித்துள்ளார். அதற்கு திகதி ஒன்றை வழங்குமாறு மைத்திரிபால சிறிசேன ஜனாதிபதிக்கு எழுத்து மூலம் கோரிக்கை முன்வைத்துள்ளதாகவும்.இந்தச் சந்திப்பில் ஆணைக்குழுவின் எதிர்கால நடவடிக்கைகள் குறித்தும் இந்த சந்திப்பில்…

Read More

சர்வதேச நாணய நிதியத்தின் எதிர்வு கூறல் பிழையானது: நிதி அமைச்சர்

சர்வதேச நாணய நிதியத்தின் எதிர்வு கூறல் பிழையானது என நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்க தெரிவித்துள்ளார். முதலீட்டு மேம்பாட்டு நிகழ்வு ஒன்றிற்காக லண்டனுக்கு விஜயம் செய்துள்ள ரவி கருணாநாயக்க சர்வதேச ஊடகமொன்றுக்கு இதனைத் தெரிவித்துள்ளார். இந்த ஆண்டில் இலங்கையின் பொருளாதார வளர்ச்சி குறித்து சர்வதேச நாணய நிதியம் எதிர்வு கூறல் வெளியிட்டுள்ளது. அதன்படி, இந்த ஆண்டில் இலங்கை 5 முதல் 5.5 வீத பொருளாதார வளர்ச்சியை எட்டும் என சர்வதேச நாணய நிதியம் எதிர்வு கூறியுள்ளது. எனினும்…

Read More

அக்றானை ஆதிவாசி தலைவர், பிரதி அமைச்சர் அமீர் அலி சந்திப்பு

அண்மையில் அக்றானை ஆதிவாசி தலைவர் பிரதி அமைச்சர் அமீர் அலியின் இல்லத்திற்கு வருகைதந்து பிரதேசத்தில் நிலவும் குறைபாடுகள் பற்றி குறிப்பிட்டார். 01. அக்றானை தமிழ் வித்தியாலயத்தில் நிலவும் ஆசிரியர் பற்றாக்குறை நிவர்த்தி செய்து தருமாறு கோரிக்கை விடுத்தார். 02. அப்பிரதேச பிள்ளைகளின் நலன் கருதி தரம் 10 வரை உயர்த்தி தருமாறும் பிரதி அமைச்சரிடம் கோரிக்கை முன்வைத்தார். 03. பாலம் , பாதை என்பவற்றை அமைத்து தருமாறும் கோரினார். இவ் கோரிக்கைகளை தான் நிவர்த்தி செய்ய நடவடிக்கை…

Read More

மஸ்ஜிதுல் அக்ஸா பள்ளிவாயலில் புனித குர்ஆனை வீசி எறிந்து இஸ்ரேலிய இராணுவம் அட்டகாசம் (photo)

முஸ்லிம்களின் புனித இடமாக கருதப்படும் மஸ்ஜிதுல் அக்ஸா பள்ளிவாயலில் இஸ்ரேலிய இராணுவம் இன்று அட்டகாசம் செய்துள்ளது. 1967 இல் இருந்து மஸ்ஜிதுல் அக்ஸா பள்ளிவாயலை ஆக்கிரமித்து பல்வேறு ஆட்டூளியங்க்களை புரிந்து வரும் இஸ்ரேலிய இராணுவம் முஸ்லிம்கள் அங்கு சென்று தொழுவதையும் தற்போது தடை செய்துள்ளது. அதனை தொடர்ந்து பாலஸ்தீன பொதுமக்கள் இஸ்ரேலிய இராணுவம் மீது கல் கொண்டு தாக்குதல் நடத்தியுள்ளனர். இதனால் இஸ்ரேல் போலீசார் மற்றும் இராணுவத்தினர் சப்பாத்துக் காலுடன் பள்ளிவாயளுக்குள் நுழைந்து தளபாடம், கட்டிடத்தை உடைத்ததுடன்,…

Read More

அமைச்சர் றிஷாத்  பதியுதீனின் எண்ணக்கருவுக்கு அமைய 3000 யுவதிகளுக்கு இலவச தையல் பயிற்சி

இர்ஷாத் றஹ்மத்துல்லா தேசியத்தில் ஒரு மாற்றத்தை செய்து காட்டியவர்கள் முஸ்லிம்கள்.மஹிந்த ராஜபக்ஷ என்கின்றவர் இந்த நாட்டில் நீ்ண்ட நாட்களாக ஆட்சி செய்ய வேண்டும் என்று நினைத்த போது இந்த நாட்டு மக்கள் அந்த மனிதரை மாற்ற வேண்டும் என்று நினைத்த போது அதற்கு முதன் முதலில் முஸ்லிம்கள் ரீதியில் அரசியல் தலைமைத்துவத்தை வழங்கியவர் எமது கட்சியின் தேசிய தலைவர் அமைச்சர் றிசாத் பதியுதீன் என்பது தான் உண்மை என்கின்றார் சமூர்த்தி,வீடமைப்பு பிரதி அமைச்சர் எம்.எஸ்.எஸ்.அமீர் அலி. குருநாகலயில்…

Read More

மலையக தமிழ் மொழி மூல முஸ்லிம் பாடசாலைகளுக்கான ஆசிரிய நியமனங்கள்

அப்துல் வாஹித் குத்தூஸ்  கடந்த அரசாங்கத்தின் கல்வியமைச்சின் 2014/08/08 ந் திகதி இலங்கை அரச வர்த்தமானி அறிவித்தலில் மலையகத்தின் பதினொரு மாவட்டங்களின் அனைத்து கல்வி வலயங்களிளுமுள்ள தமிழ் பாடசாலைகளில் கற்பிப்பதற்காக 3௦14 ஆசிரிய வெற்றிடங்களுக்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டிருந்தன . இதற்கமைய மலையக தமிழ் மொழி மூல ஆசிரிய நியமனங்களில் முஸ்லிம் பாடசாலைகள் முற்றாகப் புறக்கணிக்கப் பட்டுள்ளமை தொடர்பாக மலையக முஸ்லிம் கவுன்சில் மூலம் கடந்த 2015/03/25 ந் திகதி அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவர் அமைச்சர்…

Read More

சிறுநீரிலிருந்து பிறப்பிக்கப்பட்ட மின்சக்தி

சிறுநீரிலிருந்து பெறப்பட்டமின்சக்தியை கொண்ட எரிபொருள் கலமொன்றை பிரித்தானியாவைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் விருத்தி செய்துள்ளனர். மேற்படி சிறுநீரால் செயற்படும் மைக்ரோபியல் எரிபொருள் கலமொன்று ஒரு டொலர் அளவான குறைந்த விலையைக் கொண்டதாகும். எடுத்துச்செல்லக்கூடிய, மீளப் புதுப்பிக்கக்கூடிய இந்தக் கலம் பின்தங்கிய பிராந்தியங்களுக்கு சுற்றுச்சூழல் நட்புறவுடைய சக்தி வளத்தைப் பெற்றுத் தருவதாக உள்ளதாக ஆய்வாளர்கள் கூறுகின்றனர்

Read More

இலங்கையின் கடல் வலயம் 2020 அதிகரிக்கும்!

இலங்கைக்கு சொந்தமான கடல் வலயம் 2020ம் ஆண்டளவில் மேலும் அதிகரிக்கப்படும் என கடற்றொழில் அமைச்சு நம்பிக்கை வெளியிட்டுள்ளது. சர்வதேச கடற்பரப்பிற்கு சொந்தமான கடல் பகுதி இலங்கைக்கு சொந்தமாகவுள்ளதாக அமைச்சு குறிப்பிட்டுள்ளது. இலங்கையை போன்று 60 மடங்கு வரையான கடற்பரப்பு தற்போது இலங்கைக்குச் சொந்தமாக உள்ளது எனவும், எதிர்காலத்தில் மேலும் இலங்கையைப் போன்று 23 மடங்கு கடற்பரப்பு சொந்தமாகும் எனவும் அமைச்சு கூறியுள்ளது. இந்த விடயம் குறித்து அரசாங்கம், ஐக்கிய நாடுகள் சபையின் அதிகாரிகளுடன் கலந்துரையாடல்களை நடாத்தி வருவதாகவும்,…

Read More

“இருப்பு, ஒற்றுமை பற்றி வாய்கிழியப் பேசுவோர், சமூகப் பிரதிநிதித்துவங்களை ஒழிக்க முயற்சி” – ஓட்டமாவடியில் மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிஷாட்!

இருப்பு, ஒற்றுமை தொடர்பில் வாய்கிழியப் பேசிக்கொண்டிருப்போர், கல்குடாவின் சமூகப் பிரதிநிதித்துவத்தை எப்படியாவது இல்லாமலாக்கிவிட வேண்டுமென்ற திட்டத்துடன் செயற்படுவதாக மக்கள் காங்கிரஸ் தலைவரும் முன்னாள் அமைச்சருமான ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார். மக்கள் காங்கிரஸ் தவிசாளரும் ஐக்கிய மக்கள் சக்தியின், மட்டக்களப்பு மாவட்ட முதன்மை வேட்பாளருமான அமீர் அலியை ஆதரித்து, நேற்று மாலை (29) ஓட்டமாவடியில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் உரையாற்றிய அவர் மேலும் கூறியதாவது, “கல்குடாவின் பிரதிநிதித்துவத்தை எந்த வகையிலாவது இல்லாமல் செய்ய வேண்டுமென்று கடந்த காலங்களிலும் சூழ்ச்சிகள் இடம்பெற்றிருக்கின்றன….

Read More

சுதந்திரத்தை உறுதிப்படுத்த அனைவரும் ஒன்றிணைந்து செயற்பட வேண்டும்

சுதந்திரத்தை உறுதிப்படுத்த அனைவரும் ஒன்றிணைந்து செயற்பட வேண்டும் என பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். நாடாளுமன்ற கட்டடத் தொகுதியில் நேற்று (21) இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனை குறிப்பிட்டார். சமூகத்தினரிடையே பல்வேறுப்பட்ட கருத்துக்களை முன்வைக்கப்படலாம்.எனினும், சுதந்திரத்தை உறுதிப்படுத்தும் விடயத்தில் அனைவரும் ஒரே மனபாங்குடன் செயலாற்ற வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார். மேலும், பல வருடங்களாக நாட்டில் சுதந்திரம் இருக்கவில்லை. யுத்தம் நிறைவு பெற்றவுடன் பாரிய ஒடுக்குமுறை ஆட்சி இடம்பெற்றது. அதனை அடுத்து…

Read More