Headlines

சந்திரிக்கா அதிரடி

தேசிய அரசாங்க கொள்கைகளுக்கு இணங்காத ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி உறுப்பினர்கள், கட்சியிலிருந்து நீக்கப்பட வேண்டுமென முன்னாள் ஜனாதிபதியும் சுதந்திரக் கட்சியின் மத்திய செயற்குழு உறுப்பினருமான சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க தெரிவித்துள்ளார். ஐக்கிய தேசியக் கட்சியுடன் இணைந்து தேசிய அரசாங்கமொன்றை அமைக்கும் திட்டத்திற்கு எதிர்ப்பை வெளியிடும், ஸ்ரீலங்கா சுதந்திக் கட்சியின் உறுப்பினர்களின் உறுப்புரிமை ரத்து செய்யப்பட வேண்டுமென அவர் வலியுறுத்தியுள்ளார். நேற்றைய தினம் நடைபெற்ற கட்சியின் மத்திய செயற்குழுக் கூட்டத்தில் அவர் இந்தக் கருத்தை முன்வைத்துள்ளார். தேசிய அரசாஙகம்…

Read More

அ.இ.ம.கா வின் எழுச்சியும் தேசிய தலைவர் மீள் பிரகடனமும்

– ஏ.எச்.எம்.பூமுதீன் – பொதுத் தேர்தல் முடிவு ரிசாத் பதியுதீன் தலைமையிலான அகில இலங்கை மக்கள் காங்கிரஸிற்கு எழுச்சியை ஏற்படுத்திக் கொடுத்துள்ளது. அத்துடன் ரிசாத் பதியுதீனை நாட்டின் தேசியத் தலைவராகவும் இந்த முடிவு மீளவும் பிரகடனப் படுத்தியுள்ளது. அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் நடந்து முடிந்த பொதுத் தேர்தலில் 07 மாவட்டங்களில் களமிறங்கியிருந்தது. வன்னி, புத்தளம் ,அநுராதபுரம், குருநாகல் திருகோணமலை, மட்டக்களப்பு ஆகிய மாவட்டங்களில் ஐதேகவின் யானைச் சின்னத்திலும் அம்பாறை மாவட்டத்தில் கட்சியின் சொந்தச் சின்னமான மயிலிலும்…

Read More

வெற்றிக்கு பிற்பாடு எனது ஆதரவாளர்கள் அமைதிகாக்க வேண்டும் – அமீர் அலி

நாம் இத்தேர்தலில் வெற்றி பெற்றுள்ளமையானது மிகவும் மகிழ்ச்சி தரக்கூடிய விடயமக இருக்கின்ற அதே நேரத்தில் தேர்தல் காலங்களில் இடம்பெற்ற வாய்த்தை பிரயோகங்கள், விடயங்கள், தனிபட்ட விடயங்களை மனதில் வைத்துக்கொண்டு எதிரணி ஆதரவாளர்களின் மனங்கள் புன்படும் வகையில் நடந்து கொள்ளவோ அல்லது அவர்களுக்கு எதிரான வார்த்தை பிரயோகங்களில் ஈடுபடுவதனையோ முற்றாக தவிர்த்துக் கொள்ளுமாறும், அவ்வாறு எவராவது செயற்படும் பட்சத்தில் அதற்கு தான் பொறுப்பில்லை என்பதாக முன்னாள் பிரதி அமைச்சரும் தற்பொழுது அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் சார்பாக மட்டக்களப்பு…

Read More

எனக்கு ஆதரவு வழங்கிய மக்களை ஒருபோதும் நான் கைவிடமாட்டேன் -இஸ்மாயில்

திகாமடுல்ல மாவட்டத்தில் எமது அகில இலங்கை மக்கள் காங்கிரஸில் போட்டியிட்ட தனக்கும், தனது கட்சிக்கும் வாக்களித்த மக்களுக்கு இதயபூர்வமான நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கின்றேன். என தென்கிழக்கு பல்கலைக்கழத்தின் முன்னாள் உபவேந்தர் கலாநிதி எஸ்.எம்.எம்.இஸ்மாயில் தெரிவித்தார். தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்டதன் பின்னர் நேற்றுமுன்தினம்(19) தனது அலுவலகத்தில ஆதரவாளர்கள் மத்தியில் உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் அங்கு தொடர்ந்தும் உரையாற்றுகையிலே- நடந்து முடிந்த பொதுத்தேர்தலில் திகாமடுல்ல மாவட்டத்தின் சம்மாந்துறைத் தொகுதியின் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் வேட்பாளராக களமிறங்கிய…

Read More

றிஷாத் பதியுதீனை தேசியத் தலைவராக முஸ்லிம் சமூகம் அங்கீகரித்தது

1990 ஆம் ஆண்டு வடக்கிலிருந்து பயங்கரவாத புலிகளினால் இனச்சுத்திகரிப்பு செய்யப்பட்ட ஒருவர், இன்று இலங்கை முஸ்லிம்களின் அதிகப்பட்ச ஆதரவை பெற்றத் தேசியத் தலைவராக பரிணமித்துள்ளார். ஆம், இலங்கை சமூகம் நடந்துமுடிந்த பாராளுமன்றத் தேர்தலில் றிசாத் பதியுதீனை தனது தேசியத் தலைவராக ஏற்றுக்கொண்டுள்ளது. றிசாத் பதியுதீன் முஸ்லிம்களின் தேசியத் தலைவர் என்பதற்கு அக்கட்சிக்கு நாடளாவிய ரீதியில் கிடைக்கப்பெற்ற வாக்குகளின் எண்ணிக்கை மற்றும் அக்கட்சிக்கு கிடைத்துள்ள பாராளுமன்ற பிரதிநிதித்துவம் என்பவற்றைக் கொண்டு இது தெட்டத்தெளிவாகியுள்ளது. நடந்துமுடிந்த பாராளுமன்றத் தேர்தலில் தனியாகவும்…

Read More

இனவாதம் சொல்லி அரசியல் செய்பவர்களுக்கு மக்கள் முற்றுப்புள்ளி வைத்துள்ளார்கள் : அமீர் அலி

இனவாதம் சொல்லி அரசியல் செய்பவர்களுக்கு மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள தழிழ், முஸ்லீம் மக்கள் ஐக்கிய தேசிய கட்சிக்கு வாக்களித்து இனவாத அரசியலுக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார்கள் என்று மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தவிசாளருமான எம்.எஸ்.எஸ்.அமீர் அலி தெரிவித்துள்ளார். நடைபெற்று முடிந்த பாராளுமன்ற பொதுத் தேர்தலில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் சார்பாக ஐக்கிய தேசிய கட்சியில் மட்டக்களப்பு மாவட்டத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ள எம்.எஸ்.எஸ்.அமீர் அலி தேர்தல் முடிவின் பின்னர் செவ்வாய்க்கிழமை…

Read More

ரணிலை வாழ்த்தினார் நரேந்திர மோடி

நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில் வெற்றிபெற்றுள்ள ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு இந்திய பிரதமர் நரேந்திர மோடி தொலைபேசியில் தொடர்புகொண்டு தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். அத்துடன் இந்த வெற்றி இருநாட்டு உறவுகளையும் மேலும் வலுப்படுத்தும் என்றும் இந்திய பிரதமர் தெரிவித்துள்ளார். இந்த தேர்தல் அமைதியான முறையில் நடைபெற்றதையிட்டு இலங்கை மக்களுக்கும் நரேந்திர மோடி தனது வாழ்த்துக்களை கூறியுள்ளார்.

Read More

புதிய அரசாங்கத்தை, வாழ்த்தும் கோத்தபாய

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவுக்கு ஆதரவு வழங்கிய அனைவருக்கும் தனது நன்றியை தெரிவித்துகொள்வதாகவும், புதிய அரசாங்கத்துக்கு தனது வாழ்த்தினை தெரிவித்து கொள்வதாகவும் முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ச தெரிவித்துள்ளார். இது தொடர்பில் கோத்தபாய தனது முகப்புத்தகத்தில் குறிப்பிட்டுள்ளார். மஹிந்த ராஜபக்சவுக்கு ஆதரவு வழங்கிய அனைவருக்கும் என மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறேன். வெற்றியை போன்றே தோல்வியையும் ஏற்று கொள்ளும் அவர், நாட்டை நேசிக்கின்ற தலைவராக பலர் மனங்களில் இருக்கின்றார். அத்துடன் புதிய அரசாங்கத்திற்கு வாழ்த்து தெரிவிப்பதோடு, நாட்டினுள்…

Read More

செப்டெம்பர் முதலாம் திகதி, கன்னி அமர்வு

புதிய பிரதமராக ரணில் விக்கிரமசிங்கஇன்று அல்லது நாளை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முன்னிலையில் சத்தியப்பிரமாணம் செய்துகொள்ளவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. நடைபெற்று முடிந்த நாடாளுமன்றத் தேர்தலின் போது தெரிவு செய்யப்பட்ட புதிய நாடாளுமன்ற உறுப்பினர்கள் அடங்கிய புதிய நாடாளுமன்றத்தின் கன்னி அமர்வு, எதிர்வரும் செப்டெம்பர் மாதம் முதலாம் திகதி நடைபெறவுள்ளது. புதிய நாடாளுமன்றத்துக்கு தெரிவு செய்யப்பட்ட உறுப்பினர்களுக்கு உதவுவதற்காக உதவிக் கரும பீடமொன்று எதிர்வரும் 23, 24, 25ஆம் திகதிகளில் நாடாளுமன்றத்தில் திறக்கப்படும் என்று நாடாளுமன்ற பொதுச் செயலாளர் அறிவித்துள்ளார்.

Read More

இலங்கைக்கு அமெரிக்காவும், ஐக்கிய நாடுகள் சபையும் பாராட்டு

இலங்கைத் தேர்தல் தொடர்பில் அமெரிக்கா வரவேற்பை வெளியிட்டுள்ளது.ஜனநாயகம் மற்றும் நல்லாட்சியை ஏற்படுத்துவதற்கு அரசாங்கமும் பொதுமக்களும் காட்டிய சிரத்தை வரவேற்கப்பட வேண்டியது என அமெரிக்க ராஜாங்கத் திணைக்களப் பேச்சாளர் ஜோன் கிர்பி தெரிவித்துள்ளார். தேர்தல் ஆணையாளர், வேட்பாளர்கள், சிவில் சமூகத்தினர் அனைவருக்கும் பாராட்டுக்களைத் தெரிவித்துக்கொள்வதாகத் தெரிவித்துள்ளார். ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையிலான அரசாங்கத்துடன் தொடர்ந்தும் இணைந்து செயற்பட விரும்புவதாகக் குறிப்பிட்டுள்ளார். 2 இலங்கையில் இடம்பெற்ற மிகவும் அமைதியான அனைவரும் பங்களிப்பு செய்த தேர்தலிற்காக தனது பாராட்டுகளை தெரிவித்துள்ள ஐக்கிய…

Read More

தேர்தலில் தோற்றாலும் புதிய பதவி கிடைத்து விட்டது

ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் புதிய பொருளாளராக எஸ்.பீ.திசாநாயக்க நியமிக்கப்பட்டுள்ளார். சு.க.வின் மத்திய செயற்குழு எடுத்த தீர்மானத்துக்கு அமையவே இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.பீ.திசாநாயக்க இந்த பொதுத்தேர்தலில் கண்டி மாவட்டத்தில் போட்டியிட்டு வெற்றி பெற முடியாமல் போனது குறிப்பிடத்தக்கது.

Read More

கண்டி தேர்தல் வரலாற்றில் லக்ஸ்மன் கிரியல்ல புதிய சாதனை….!

கண்டி மாவட்ட ஐக்கிய தேசிய கட்சி குழுத்தலைவர் லக்ஸ்மன் கிரயல்ல பெற்றுக்கொண்ட  விருப்பு வாக்குகள் கண்டி தேர்தல் வரலாற்றில் புதிய சாதனையாக கருதப்படுகிறது. இதுவரை இடம்பெற்ற தேர்தல்களில் தனியொருவர் பெற்றுக்கொண்ட அதிகூடிய விருப்பு வாக்குகளாக  முன்னாள் சிரேஷ்ட அரசியல் தலைவர் காமினி திசாநாயக்க அதிகப்படியாக ஒருலட்சத்து தொண்ணுற்று எட்டாயிரம் வாக்குகளை  பெற்றிருந்தார் . அதற்கு அடுத்தபடியாக மாகாண சபையில் எஸ் பி திசாநாயக்க ஒரு லட்சத்து எண்பத்து எட்டாயிரம் வாக்குகள் பெற்றிருந்தார். இந்த விருப்பு வாக்கு சாதனைகளை முறியடித்து…

Read More