Headlines

ஜெனீவாவில் இலங்கைக்கு ஆதரவாக ரஷ்யா, கியூபா, வெனிசூலா நாடுகள் களத்தில் குதிப்பு

இலங்கையின் மனித உரிமை மீறல் குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் மேற்கொள்ளப்படும் ஐ.நா விசாரணைகளை சில நாடுகள் ஆதரித்துடன் ஏனைய நாடுகள் எதிர்த்துள்ளன. இதனால், ஐ.நா மனித உரிமை பேரவையில் இன்று பிளவு ஏற்பட்டுள்ளது. ஐ.நா மனித உரிமை ஆணையாளரின் அலுவலகம் நடத்தும் விசாரணைகளுக்கு தமது ஆதரவை நீடிப்பதாகவும் விசாரணைகளுக்கு இலங்கை அரசாங்கம் ஆதரவு வழங்க வேண்டும் எனவும் ஐரோப்பிய ஒன்றியம் வலியுறுத்தியுள்ளது. அதேவேளை விசாரணைகள் மூலமாக இலங்கைக்கு அழுத்தங்களை கொடுக்கும் முயற்சிகளை எதிர்ப்பதாகவும் இந்த விசாரணைக்கு ஐ.நா மனித…

Read More

தேர்தல் தொடர்பான கருத்தரங்கு நிகழ்வில் மேல்மாகாணசபை உறுப்பினர் மொஹமட் பாயிஸ்

எதிர்வரும் மாகாணசபை தேர்தலுக்காக புதிய தீர்மானங்கள் எடுப்பதற்காக முன் மொழிகள் பற்றிய ஒரு பட்டறை கொழும்பில் நடத்தப்பட்டது இந்த கருத்தரங்கில் கொழும்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் மற்றும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் அமைப்பாளரும் மேல்மாகாணசபை உறுப்பினருமான மொஹமட் பாயிஸ் மற்றும் மேல்மாகாணசபை உறுப்பினர் அர்ஷாட் நிஷாம்தீன் ஆகியோரும் கலந்துகொண்டனர்.

Read More

செலான் வங்கியின் புதுவருட நிகழ்வுகளில் இஷாக் எம்.பி பங்கேற்பு!

-ஊடகப்பிரிவு- செலான் வங்கியின் கெக்கிராவ கிளையில் சிங்கள, தமிழ் புதுவருடத்தை முன்னிட்டு இன்று (16) இடம்பெற்ற புதுவருட கொண்டாட்ட நிகழ்வுகளில், அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் பாராளுமன்ற உறுப்பினர் இஷாக் ரஹ்மான் பிரதம அதிதியாகக் கலந்துசிறப்பித்தார். இதேவேளை, செலான் வங்கியின் ஒவ்வொரு பணவைப்புக்கும் பரிசில்கள் வழங்கிவைக்கப்பட்டது.

Read More

வாழ்வாதார உபகரணங்களை கொண்டு வாழ்வினை முன்னேற்றுங்கள் – பிரதி அமைச்சர் அமீர் அலி

ஏழை மக்களின் வாழ்வாதாரத்தை உயர்த்துவதற்காகவே இந்த உபகரணங்கள் வழங்கப்படுகின்றன. இதனை கொண்டு அவர்கள் சுயதொழில் ஒன்றை ஆரம்பித்து அதன் மூலம் வருமானங்களை ஈட்டி வறுமையின்றி வாழ வேண்டும் என்பதே முக்கிய நோக்கமாகும். மட்டக்களப்பு மாவடத்தின் செங்கலடி பிரதேச செயலக நடைபெற்ற வாழ்வாதாரண உபகரணம் வழங்கும் நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்து கொண்டு உரையாற்றும் போதே பிரதி அமைச்சர் அமீர் அலி மேற் கண்டவாறு கூறினார். அவர் அங்கு தொடர்ந்து உரையாற்றுகையில், வாழ்வாதார உபகரணத்தை பெற்று செல்லும் ஒவ்வொரு…

Read More

‘மு.காவின் ஜம்பம் இனியும் பலிக்காது’ வரிப்பத்தான்சேனையில் அமைச்சர் ரிஷாட்!

    -ஊடகப்பிரிவு- 17 வருட காலமாக முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் தலைமைப் பொறுப்பேற்றுள்ள ஹக்கீம், முஸ்லிம் சமூகத்தின் அரசியல் அபிலாஷைகளையோ உரிமைகள் பற்றியோ எவ்வித அக்கறையும் செலுத்தாமல், காலத்துக்கு காலம் வாக்களித்து வந்த கிழக்கு முஸ்லிம்களை அரசியல் அநாதைகளாக்கியுள்ளார். எனவே, முதுகெலும்பில்லாதவர்களுக்கு வாக்களித்து, முஸ்லிம் சமூகத்தை தொடர்ந்தும் அநாதைகளாக்க வேண்டாம் என அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவர், அமைச்சர் ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார். இறக்காமம் பிரதேச சபையில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் சார்பாக…

Read More

ரொஜர்விற்கு பிடியாணை

மேல் மாகாண சபை உறுப்பினர் ரொஜர் செனவிரத்னவிற்கு கொழும்பு பிரதான நீதவான் கிஹான் பிலபிடியவால் இன்று பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் இளவரசர் ஸைத் அல்ஹுசைன் கடந்த பெப்ரவரி 6 ஆம் திகதி நாட்டிற்கு வருகை தந்திருந்தபோது, அவருக்கு எதிராக ஆர்பாட்டம் ஒன்றினை மேற்கொண்டதன் காரணமாக, பொலிஸாரினால் குறித்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டிருந்தது. குறித்த மனு இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது, ரொஜர் செனவிரட்ன சமுகமளிக்காத காரணத்தாலேயே அவருக்கு குறித்த பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. மேலும்,…

Read More

வெள்ளிக்கிழமை 2 இலட்சம் கையெழுத்து வேட்டை

 – வடக்கு முஸ்லீம்களுக்கான முன்னணி – வடக்கிலிருந்து வெளியேற்றப்பட்ட  முஸ்லிம்களின் மீள்குடியேற்றத்தை துரிதப்படுத்த கோரி இலங்கையில் உள்ள அனைத்து பள்ளிவாசல்களிலும் நாளை மறுதினம் வெள்ளிக்கிழமை ஜும்மா தொழுகையினை தொடர்ந்து இரண்டு இலட்சம் கையெழுத்துக்களை பெறுகின்ற வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்படவுள்ளது . வெள்ளிக்கிழமை ஆரம்பமாகும் இந்த கையெழுத்து வேட்டை சனி மற்றும் ஞாயிறு ஆகிய தினங்களிளும் அந்தந்த பிரதேச மஹல்லாக்களை மையப்படுத்தியும் இடம்பெறவுள்ளது. வடமாகான உலமா சபை, அல்ஜாசீம் ஆராய்ச்சி நிறுவனம், உடனடி தீர்வுக்கான குழு, (RRT),  அனைத்து பல்கலைக்கழக மாணவர்கள்…

Read More

பலாங்கொடை பாடசாலையில் முஸ்லிம் மாணவிகளுக்கு வந்த திடீர் சோதனை

பலாங்கொடை நகரில் அமையப் பெற்ற சிங்கள மொழி மூலப் பாடசாலையில் முஸ்லிம் மாணவிகள் அணியும் நீண்ட காற்சட்டைக்கு பாடசாலை நிர்வாகம் திடீரென தடை விதித்தமையால் மாணவிகள் அசெளகரியத்திற்கு உள்ளாகி இருப்பதாக பெற்றார் கவலை தெரிவிக்கின்றனர். பலாங்கொடை பிரதேசத்தில் சிங்கள மொழி மூலத்தில் கல்வி கற்கும் முஸ்லிம் மாணவ மாணவிகளை இப் பாடசாலையிலேயே   பெற்றோர் சேர்க்கின்றனர். இப் பாடசாலையின் ஆரம்ப காலம் தொட்டு முஸ்லிம் மாணவியர் தமது கலாசாரத்திற்கு உகந்த ஆடையை அணிய பாடசாலை நிர்வாகம் அனுமதி…

Read More

பேஸ்புக் பொடியன் கைது

வவுனியா பொடியன் என்ற பெயரில் பேஸ்புக் கணக்கொன்றை வைத்திருந்த 16 வயதுச் சிறுவன் ஒருவனை வவுனியா பொலிஸார் நேற்று இரவு கைதுசெய்துள்ளனர்.  குறித்த சிறுவன் ‘வவுனியா பொடியன்’ என்ற பெயருடன் பேஸ்புக்கில் வவுனியாவைச் சேர்ந்த பல அரசியல்வாதிகள் சமூக விரோதச் செயற்பாடுகளில் ஈடுபடுபவர்கள் ஆகியோரின் புகைப்படங்களை பிரசுரித்து கீழ்த்தரமான வார்த்தைகளை பிரயோகப்படுத்தி விமர்சித்து வந்திருந்ததாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.    இதனைத் தொடர்ந்த, மேற்படி சிறுவனை வவுனியா பொலிஸார் கைதுசெய்துள்ளதுடன் விசாரணைகளையும்   மேற்கொண்டு வருகின்றனர்.

Read More

VIDEO- மியன்மார் அகதிகள் விடயத்தில் சர்வதேச சட்டங்களை மதித்து நடவுங்கள்’

– மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிஷாட் சபையில் கோரிக்கை! சர்வதேச சட்டங்களுக்கு மதிப்பளித்து, மியன்மார் ரோஹிங்கிய அகதிகள் விவகாரத்தில், மனிதாபிமான ரீதியில் செயற்படுமாறு அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியுதீன் உயர் சபையில் வேண்டுகோள் விடுத்துள்ளார். நாடாளுமன்றில் இன்றையதினம் (09) உரையாற்றிய அவர் மேலும் கூறியதாவது, “நாட்டு மக்கள் பாரிய எதிர்பார்ப்புடன் இந்த அரசாங்கத்தை கொண்டுவந்தனர். அவர்களின் எதிர்பார்ப்பை நிறைவேற்ற வேண்டியது அரசின் பொறுப்பாகும். 75 வருடங்களாக, பாரம்பரிய கட்சிகள் செய்த…

Read More

வடக்கு மாகாண சபையின் புதிய உறுப்பினரான அலிக்கான் ஷரீப் பதவியேற்றார்

அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் சார்பாக வடக்கு மாகாண சபையில் அங்கம் வகித்த உறுப்பினர் றிப்கான் பதியுதீன் அண்மையில் பதவி விலகியநிலையில் இன்று அந்தக் கட்சிசார்பில் புதிய உறுப்பினரான அலிக்கான் ஷரீப் பதவியேற்றார். வடக்கு மாகாண சபையின் 109வது அமர்வு யாழ் கைதடியிலுள்ள பேரவைச்செயலகத்தில் இன்று(7) அவைத்தலைவர் சி.வி.கே.சிவஞானம் தலைமையில் இடம்பெற்றது. இதன்போது அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் சார்பில் தேர்தல் ஆணையகத்தால் நியமிக்கப்பட்டுள்ள புதிய உறுப்பினரான அலிக்கான் ஷரீப் அவைக்கு அழைக்கப்பட்டதுடன் அவர் தனது பதவிக்…

Read More

ஐரோப்பிய ஒன்றியத்தின் அறிக்கை தொடர்பில் இலங்கை ஆச்சரியம்

இலங்கையின் வெளியுறவு அமைச்சு வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றில். முழுமையாக உள்நாட்டு விடயத்தில் ஐரோப்பிய ஒன்றியம் தலையிட முனைவதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. 1931ஆம் ஆண்டு முதல் இலங்கை, ஜனநாயக வரம்புகளை பின்பற்றி வருகிறது. இதன் அடிப்படையிலேயே தேர்தல்களும் ஜனநாயக ரீதியில் நடத்தப்பட்டு வருகின்றன. இந்தநிலையில் உள்நாட்டு தேர்தல் ஒன்றில் வெளிநாட்டு பிரதிநிதிகளின் தலையீடு தேவையற்றது என்று வெளியுறவு அமைச்சு குறிப்பிட்டுள்ளது. எனவே ஐரோப்பிய ஒன்றியத்தின் இலங்கை கிளை வெளியிட்டுள்ள அறிக்கை தமக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளதாக அமைச்சு தெரிவித்துள்ளது. ஐரோப்பிய…

Read More