Headlines

ஏலியன் மீன்வகை கண்டு பிடிப்பு

மெக்ஸிகோ கரையோரம் பகுதியில் விகாரமாக காணப்படும் ஏலியன் மீன்வகை உயிரினம் ஒன்று கைப்பற்றப்பட்டது. இந்த மீன் அரிதான வெளிறிப் சுறா என்று நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். இந்த சுறா இளஞ் சிவப்பு மற்றும் வெள்ளை நிறங்கள் கலந்த வண்ணம் காணப்படுகிறது.

Read More

எயிட்ஸ் நோயைத் தடுக்கும் மருந்து – இலங்கை மாணவன் சாதனை

மரணத்தை ஏற்படுத்தும் எயிட்ஸ் நோயைத் தடுப்பதற்கான மருந்தொன்றை உற்பத்தி செய்து சர்வதேசத்தின் பாராட்டைப் பெற்ற கொழும்பு நாலந்தா கல்லூரியின் ரகித்த தில்ஷான் மாலேவன மாணவன் இன்று (18) முற்பகல் ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ இல்லத்தில் கௌரவ ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன அவர்களை சந்தித்தார். தனது திறமையின் மூலம் இலங்கைக்கு மாபெரும் புகழை ஈட்டித் தந்துள்ள ரகித்த தில்ஷான் மாலேவன மாணவனின் திறமைகளை பாராட்டிய ஜனாதிபதி அம்மாணவனுக்கு தனது நல்வாழ்த்துக்களைத் தெரிவித்தார். அவருடைய எதிர்கால நடவடிக்கைகளுக்கு ஆசிக்கூறிய ஜனாதிபதி அவர்கள்…

Read More

மீண்டும் தேர்தலில் போட்டியிடமாட்டேன்- நிமால் ஸ்ரீபால

எதிர்வரும் காலங்களில் நடைபெறும் எந்தவொரு தேர்தலிலும் போட்டியிடப் போவதில்லை என சிவில் போக்குவரத்து மற்றும் விமானசேவைகள் அமைச்சர் நிமால் ஸ்ரீபால டிசில்வா தெரிவித்துள்ளார். அத்துடன், அரசியல் வாழ்க்கைக்கு முற்றுப்புள்ளி வைத்து விட்டு தனது சட்டதரணி தொழிலையே செய்வதற்கு முடிவு எடுத்துள்ளதாகவும் அமைச்சர் தரப்பு வட்டாரங்கள் தெரிவித்திருப்பதாக சிங்கள இணையம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. மேலும், இந்த விடயம் தொடர்பில் தனக்கு மிகவும் நெருக்கமானவர்களிடம் அமைச்சர் தெரிவித்திருப்பதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

Read More

“செய்கின்றார்களும் இல்லை , செய்ய விடுகின்றார்களும் இல்லை” மாந்தை மேற்கு பிரதேச சபை உறுப்பினர்கள் விசனம்!

“எங்களை செய்ய விடுகின்றார்களும் இல்லை , தாமும் செய்கின்றார்கள் இல்லை” இவ்வாறு  மாந்தை மேற்கு பிரதேச சபை உறுப்பினர்களான நந்தன் மற்றும் பிரசித்தா ஆகியோரே இவ்வாறு தமது  ஆதங்கங்களை  வெளிப்படுத்தினர். அகில இலங்கை மக்கள் காங்கிரசின் தலைவர் அமைச்சர் ரிஷாட் பதியுதீன் வெள்ளாங்குளம் ,தேவன்பிட்டி கிராமத்திற்கு சென்று அந்த பிரதேசத்தில் வாழும் மக்களின் தேவைகளை கேட்டறிந்த போது,  அங்கு  உரையாற்றிய இந்த பிரதேச சபை உறுப்பினர்கள் கிராம மக்களின் பல்வேறு பிரச்சினைகளை எடுத்து கூறியதோடு அமைச்சர் மேற்கொண்டு வரும் சேவைகளுக்கும் தமது நன்றிகளை…

Read More

இலங்கையில் நடைபெறும் இறுதி ஜனாதிபதி தேர்தல் இதுவாகவே இருக்க வேண்டும் – சோபித தேரர்

இலங்கையில் நடைபெறும் இறுதி ஜனாதிபதி தேர்தல் இதுவாகவே இருக்க வேண்டும் என சமூக நீதிக்கான தேசிய இயக்கத்தின் தலைவரும் கோட்டை நாக விகாரையின் விகாராதிபதியுமான மாதுலுவாவே சோபித தேரர் தெரிவித்து்ளளார். ஜனாதிபதி தேர்தலில் பொது வேட்பாளர் போட்டி நிலவுகின்ற சந்தர்ப்பத்தில் ஐக்கிய தேசியக் கட்சியின் சார்பில் ரணில் விக்கிரமசிங்கவை களமிறக்குவது தொடர்பில் செய்திகள் கசிந்துள்ளன. இந்தநிலையில் அது தொடர்பில் கருத்து வெளியிடும்போதே மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் மேலும் குறிப்பிடுகையில், நாட்டில் ஜனநாயகத்துக்கு முரணான வகையில் இடம்பெறும் ஆட்சியினை…

Read More

கலிமாச்சொன்னது தவறா? கண்ணீர் சிந்தினார் இஷாக் எம்.பி

அனுராதபுர மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இஷாக் ரஹுமானின் நிதியொதுக்கீட்டில் இப்பொலோகம பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட கல்லஞ்சியாகம அ/கல்லஞ்சியாகம அரபா முஸ்லிம் வித்தியாலயத்தில் புதிய வகுப்பறைக்கட்டிடம் ஒன்றை அமைப்பதற்கான அடிக்கல் இன்று பாராளுமன்ற உறுப்பினர் இஷாக் ரஹுமான் அவர்களினால் நடப்பட்டது. பாடசாலை அதிபர் எஸ்.எ.நுவைஸ் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் இப்பொலோகம பிரதேச சபை உறுப்பினர் நளீம், பாடசாலை அபிவிருத்தி சங்க உறுப்பினர்கள், பழைய மாணவர்கள் மற்றும் ஊர்மக்கள் பலரும் கலந்துகொண்டனர். குறித்த நிகழ்வில் உரையாற்றிய பாராளுமன்ற உறுப்பினர் இஷாக்…

Read More

அல்லாஹ்தான் பெரியவன் என முழங்கி, உலகின் நீண்டபாலத்தை திறந்த எர்துகான்

அல்லாஹு அக்பர் அல்லாஹு அக்பர் அல்லாஹ்தான் பெரியவன் என்ற வார்த்தையை முழங்கி கொண்டு துருக்கிய குடியரசு அதிபர் ரெசிப் தயிப் எர்டோகன் அவர்கள் இஸ்தான்புல்லில் உள்ள உலகின் மிக நீண்ட பாலத்தை இன்று -26- திறந்து வைத்தார்.

Read More

எக்­னெ­லி­கொட விவ­காரம்: நான்கு இராணுவ அதிகாரிகள் கைது

ஊட­க­வி­ய­லாளர் பிரகீத் எக்­னெ­லி­கொட காணாமல்போன சம்­பவம் தொடர்பில் நான்கு இரா­ணு­வத்­தினர் குற்றப் புல­னாய்வுப் பிரி­வி­னரால் நேற்று கைது செய்­யப்­பட்­டனர். இரண்டு புனர்­வாழ்­வ­ளிக்­கப்­பட்ட புலிகள் இயக்க உறுப்­பி­னர்கள், சார்ஜன்ட் மேஜர் தர அதி­காரி ஆகியோர் கைதுசெய்­யப்­பட்டு தடுத்து வைத்து விசா­ர­ணைக்கு உட்­ப­டுத்­தப்­பட்­டுள்ள நிலை­யி­லேயே இந்த நால்­வரும் கைதுச் செய்­யப்­பட்­ட­தாக பொலிஸ் ஊடகப் பேச்­சாளர் உதவி பொலிஸ் அத்­தி­யட்சர் சட்­டத்­த­ரணி ருவன் குன­சே­கர தெரி­வித்தார். பொலிஸ் மா அதிபர் என்.கே.இலங்­க­கோனின் உத்­த­ர­வுக்கு அமைய குற்றப் புல­னாய்வுப் பிரி­வுக்கு பொறுப்­பான சிரேஷ்ட பிரதிப்…

Read More

என்னை இனவாதியாக காண்பிக்கின்றவர்களே ! அது உண்மை என்றால் …3500 வீடுகளை தமிழ் மக்கள் எவ்வாறு பெற்றிருப்பார்கள் …

வவுனியாவிலிருந்து இர்ஷாத் றஹ்மத்துல்லா – வன்னி மாவட்டத்தில் வாழும் மக்களுக்கென கடந்த காலங்களில் 15 ஆயிரம் வீடுகள் வரை பல்வேறு நிறுவனங்கள் நிர்மாணித்துக்கொடுத்துள்ளதாக தெரிவித்துள்ள கைத்தொழில்,வணிகத் துறை அமைச்சரான றிசாத் பதியுதீன் இதில் அதிகமான வீடுகள் தமிழ் மக்களுக்கே வழங்கப்பட்டுள்ளதாகவும் கூறினார். வவுனியா அல்-அரபா பாடசாலையில் நிர்மாணிக்கப்பட்ட வகுப்பறைக்கட்டிடத் திறப்புவிழாவிலும்,வருடாந்த இல்ல விளையாட்டுப் போட்டியின் இறுதி நிகழ்விலும் அதிதியாக கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு கூறினார். பாடசாலை அதிபர் எம்.புஹாரி தலைமையில் இடம் பெற்ற…

Read More

எச்சரிக்கை‬! ‪குழந்தையின் உயிரை பறித்த செல்போன் சார்ஜர்: உண்மையில் நடந்த மனம் வலிக்கும் செய்தி

குழந்தைகளின் உயிருக்கு எமனாகும் செல்போன் சார்ஜர்‬ உண்மையில் நடந்த மனம் வலிக்கும் செய்தி குழந்தைகளின் நலனில் அக்கறை கொண்டு அனைவரும் அதிகமாக பகிருங்கள் குழந்தைகள் உள்ள வீடுகளில் செல்போன் சார்ஜ் செய்யும் பொழுது, சார்ஜர் பின் அல்லது ஒயர் போன்றவைகளை குழந்தைகள் கைகளுக்கு எட்டாதவாரு கவனமாக பார்த்துக் கொள்ளுங்கள். படத்தில் உள்ள பச்சிளம் குழந்தையின் வீட்டார், போன் சார்ஜ் ஆன பிறகு போனை மட்டும் கழட்டி விட்டு சார்ஜரை அப்படியே தொங்கவிட்டு விட்டதால் இந்த குழந்தை விளையாட்டாக சார்ஜர்…

Read More

தேர்தல் திருத்திற்கு இணங்க முடியாது -கபீர் ஹசீம்

அமைச்சரவையில் இறுதி அனுமதி கிடைக்க பெற்ற 237 நாடாளுமன்ற உறுப்பினர்கள் அடங்கிய தேர்தல் திருத்திற்கு இணங்க முடியாது என ஐக்கிய தேசிய கட்சி தெரிவித்துள்ளது. கண்டியில் இன்று இடம் பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றிய அந்த கட்சியின் பொதுச் செயலாளர் கபீர் ஹசீம் இதனை தெரிவித்துள்ளார். நாடாளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை 225 ஐ விட அதிகரிக்க கூடாது என்பதே தமது கட்சியின் நிலைப்பாடு என அவர் குறிப்பிட்டுள்ளார். எனினும், விகிதாசார முறையில் கீழ் தயாரிக்கப்படும்…

Read More

அஷ்ஷேக் யாகூப் அவர்களின் மறைவுக்கு அமைச்சர் றிஷாட் பதியுதீன் அனுதாபம்!!!

புத்தளம் கல்விமான் அஷ்ஷேக் யாகூப் அவர்களின் மறைவு தனக்கு ஆழ்ந்த கவலை தருவதாக அகில இலங்கை மக்கள் காங்கிரசின் தலைவரும் அமைச்சருமான றிஷாட் பதியுதீன் தெரிவித்துள்ளார்.. பன்முக ஆளுமைகொண்ட அவரின் மனிதநேய செயற்பாடுகளை நான் பல சந்தர்ப்பங்களில் அறிந்திருக்கின்றேன்.கற்றோருக்குரித்தான எளிமையும் சிறந்த பண்பும் கொண்ட அன்னார் வடபுல அகதி மக்களின் விடிவுக்காக உழைத்தவர். 1990ம் ஆண்டு புத்தளத்தில் தஞ்சம் அடைந்த வடபுல அகதிகளின் நலன்களுக்காக களத்தில் நின்று உதவிஇருக்கின்றார். பல்லாயிரக்கணக்கன மக்கள் ஒரே இரவில் புத்தளத்தில் அடைக்களம் தேடியபோது…

Read More