“கிராமத்தின் வளர்ச்சியும் பொருளாதார எழுச்சியும் கல்வியின் முன்னேற்றத்திலேயே தங்கியுள்ளது”. எருக்கலம்பிட்டி முஸ்லிம் மத்திய கல்லூரி நிகழ்வில் அமைச்சர் றிஷாட்.
ஒரு கிராமத்தின் வளர்ச்சியும்,பொருளாதார எழுச்சியும், செழுமையும் அந்த கிராமத்தின் கல்வி முன்னேற்றத்திலே தான் தங்கியுள்ளதாக அகில இலங்கை மக்கள் காங்கிரசின் தலைவரும் அமைச்சருமான ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார். மன்னார் எருக்கலம்பிட்டி முஸ்லிம் மத்திய மகாவித்தியாலயத்தின் 75வது வருட பவளவிழாவும் நூர்தீன் மஷூர் பார்வையாளர் அரங்கு அங்குரார்ப்பணமும் இன்று காலை (12) இடம்பெற்றபோது விசேட அதிதியாக அமைச்சர் கலந்துகொண்டார். பாடசாலை அதிபர் முஹமட் ஷாபி தலைமையிலான இந்த நிகழ்வில் பிரதம அதிதியாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க பங்கேற்றார். அமைச்சர்…
