Headlines

பொதுபல சேனாவிற்கும் ஐ.எஸ்.களுக்கும் தொடர்பு கிடையாது: புலனாய்வுப் பிரிவு

பொதுபல சேனா அமைப்பிற்கும் ஐ.எஸ் அமைப்பிற்கும் இடையில் எவ்வித தொடர்பும் கிடையாது என புலனாய்வு பிரிவு தெரிவித்துள்ளது. ஐ.எஸ் அமைப்பிற்கும் பொதுபல சேனாவிற்கும் தொடர்பு இருப்பதாக உலமா அமைப்பு அண்மையில் குற்றம் சுமத்தியிருந்தது. எனினும், இந்தக் குற்றச்சாட்டு பொய்யானது என விசாரணைகளின் மூலம் தெரியவந்துள்ளதாக புலனாய்வுப் பிரிவு உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார் என சிங்கள ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.

Read More

மைத்திரி – மஹிந்த – சந்திரிக்கா ஒரே மேடையில்

ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் 64 வது ஆண்டுவிழா வரலாற்றில் முதல் தடவை பொலன்றுவையில் இடம்பெறவுள்ளது. இந் நிகழ்வு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் தலைமைத்துவத்தில் எதிர்வரும் செப்டெம்பர் மாதம் 02ம் திகதி இடம்பெறவுள்ளதாக வட மத்திய முதலமைச்சர் பெஷல ஜயரத்ன தெரிவித்துள்ளார். அத்துடன் ஆண்டு விழா கொண்டாடுவதற்காக முன்னாள் ஜனாதிபதிகளான சந்திரிக்கா குமாரதுங்க மற்றும் மஹிந்த ராஜபக்சவும் இணைந்து கொள்ளவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். அதற்கமைய, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா குமாரதுங்க மற்றும் முன்னாள் ஜனாதிபதி…

Read More

ஐக்கிய அரபு எமிரேட்ஸை விட்டு 50% வெளிநாட்டவர்கள் வெளியேற விருப்பம் – ஆய்வில் தகவல்

ஐக்கிய அரபு எமிரேட்ஸில் வசிக்கும் வெளிநாட்டவர்களில் 50% பேர் அந்நாட்டைவிட்டு வெளியேறி வேறு நாடுகளில் குடியேற விரும்புவதாக சமூக ஆய்வு நிறுவனங்களின் தகவல்கள் தெரிவிக்கின்றன.வெளிநாட்டினருக்கு வேலை வாய்ப்புகளை வழங்குவதில் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் முன்னிலை வகிக்கிறது. ஐக்கிய அரபு எமிரேட்ஸின் மொத்த சனத்தொகையில் 20% பேர் வேலைவாய்ப்பிற்காக வெளிநாட்டிலிருந்து அங்கு சென்று குடியேறியவர்கள் தான்.ஆனால், தற்போது இந்த நிலைமையில் மாற்றம் ஏற்படத் தொடங்கியுள்ளது. எமிரேட்ஸில் பணிபுரியும் வெளிநாட்டவர்களில் 50% பேர் வேறு நாடுகளுக்கு இடம்பெயரும் ஆசையில் இருக்கின்றார்களாம்….

Read More

மஹிந்தவை புகழ்கின்றார் மைத்திரி

பத்து வருடங்களாக அரச அதிகாரத்தில் இருந்த முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷவே தற்போது எம்.பி. பதவியை ஏற்று சாதாரணமாக இருக்கிறார். அவ்வாறான நிலையில் அமைச்சர்களாக இருந்தவர்களுக்கு பிரதி மற்றும் இராஜாங்க அமைச்சுகளை ஏற்பதில் என்ன பிரச்சினை உள்ளது” என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கேள்வி எழுப்பினார். இராஜாங்க மற்றும் பிரதி அமைச்சர்களுக்கான பதவி நியமனக் கடிதங்கள் வழங்கும் நிகழ்வு நேற்று ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்றது. இதில் உரையாற்றியபோதே ஜனாதிபதி மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர்  மேலும் தெரிவிக்கையில், அமைச்சுப்…

Read More

இனக்கலவரத்தைத் தூண்ட – இனவாதிகளின்  தூபமிடும் சதி; அமைச்சர் றிஷாத் பதியுதீன் மீது வீண்பழி!

21.11.2016 இலங்கை முஸ்லீம்களின் உரிமைக்காக தொடர்ந்து போராடிக் குரல் கொடுத்து வரும் அமைச்சர் றிஷாத் பதியுதீன் மீது கற்பனைக்கே எட்டாத வீண் பழிகளைச் சுமத்தி, பேரினவாதிகளால் தீவிரவாதி எனப் பெயரிடப்பட்டு நாட்டில் இனக்கலவரம் ஒன்றைத் தூண்டுவதற்கு சதிகாரர்களின் வெளிப்பாடாக வெளிவந்துள்ள கையடக்கத் தொலைபேசியில் வட்ஸ்அப் இல் பதிவேற்றப்பட்டுள்ள பதிவையும் அதன் தமிழாக்கத்தையும் கீழே தருகின்றேம். இதேபோன்று சில நாட்களுக்கு முன்பு இணையத்தளத்தில் வெளிவந்த அபாண்டமான செய்தியில் கண்டியில் 19 ஆம் திகதி நடைபெறும் பொதுபல சேனாவின் ஊர்வலத்தில்…

Read More

ஐந்து மாவட்டங்களுக்கு மீண்டும் மண்சரிவு அபாய எச்சரிக்கை!

நாட்டில் தொடரும் சீரற்ற காலநிலை காரணமாக ஐந்து மாவட்டங்களுக்கு மீண்டும் மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. பதுளை, நுவரெலியா, கேகாலை, களுத்துறை மற்றும் கண்டி ஆகிய மாவட்டங்களுக்கே இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக தேசிய கட்டிட ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. எதிர்வரும் 24 மணித்தியாலங்களுக்கு தொடர்ந்து மழை பெய்யும் பட்சத்தில் குறித்த பிரதேசங்களில் மண்மேடு சரிந்து விழும் அபாயம் உள்ளதோடு, நிலச்சரிவு ஏற்படும் சாத்தியமும் உள்ளதாக ஆய்வு மையம் மேலும் தெரிவித்துள்ளது. இதேவேளை பதுளை மாவட்டத்தில் கடந்த சில…

Read More

சாலாவ இராணுவ முகாமிற்குள் புலனாய்வு பிரிவினர் செல்ல தடை

அண்மையில் பாதிப்பு உள்ளான சாலாவ இராணுவ முகாமிற்குள் புலனாய்வு பிரிவினர் பிரவேசிக்க இருவார காலம் தடை விதிக்கப்பட்டுள்ளது. இராணுவப் படையினர் இந்த தடையை விதித்துள்ளதாக சிங்கள ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது. இந்த முகாமின் ஆயுதக் களஞ்சியத்தில் ஏற்பட்ட தீ விபத்து குறித்த விசாரணைகள் புலனாய்வுப் பிரிவினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. எனினும் புலனாய்வுப் பிரிவினர் குறித்த இராணுவ முகாமிற்குள் பிரவேசித்து விசாரணைகளை நடத்தவும் கண்காணிக்கவும் இரண்டு வார காலத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

Read More

கொழும்பை (புதுக்கடை) சேர்ந்த தாய் மற்றும் மூன்று பிள்ளைகள் கடலில் முழ்கி பலி

கொழும்பு , புதுக்கடை பிரதேசத்தை சேர்ந்த குடும்பம் ஒன்று ஹம்பாந்தோட்டைக்கு திருமண நிகழ்வு ஒன்றுக்கு சென்றிருந்த வேளை,  ஹம்பாந்தோட்டை துறைமுகத்திற்கு அருகில் கடலில் குளிக்கும் போது முழ்கியுள்ளனர். இதன்போது தந்தை காப்பாற்றப்பட்டுள்ள நிலையில் தாயும் பிள்ளைகளும் நீரில் மூழ்கி பலியாகியுள்ளதாக தெரிவிக்கபடுகிறது. தாயாருக்கு 31 வயது எனவும், பிள்ளைகளுக்கு 10, 6, 2 வயது என தெரிய வருவதுடன் மூன்று பேரின் சடலங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாகவும் மேலும் தெரிய வருகிறது.

Read More

பலஸ்தீன விவகாரத்தில் ஆதரவளிப்பதற்காக துருக்கி தலைவர்களுக்கு நன்றி

அனைத்து முஸ்லிம் சக்திகளினதும் ஆதாரமாக துருக்கி இருப்பதாக பாராட்டி இருக்கும் ஹமாஸ் அரசியல் பிரிவு தலைவர் காலித் மிஷால் பலஸ்தீன விவகாரத்தில் ஆதரவளிப்பதற்காக துருக்கி தலைவர்களுக்கு நன்றி தெரிவித்துள்ளார். “ஸ்திரமான, ஜனநாயகமான மற்றும் அபிவிருத்தி அடைந்த ஒரு துருக்கி அனைத்து முஸ்லிம் சக்திக்கான ஆதாராமாக உள்ளது” என்று துருக்கியின் ஆளும் நீதிக்கும் அபிவிருத்திக்குமான கட்சி மாநாட்டில் பங்கேற்று மிஷால் குறிப்பிட்டார். “வலுவான துருக்கி என்பது வலுவான ஜரூசலம், வலுவான ஒரு பலஸ்தீனமாகும்” என்று குறிப்பிட்ட அவர் பலஸ்தீன,…

Read More

கரும்புத் தொழிலாளி சடலமாக மீட்பு

கரும்பு வெட்டும் தொழிலில் ஈடு­படச் சென்ற தொழி­லாளி , சேனை வாடி­யொன்­றி­லி­ருந்து, சட­ல­மாக புத்­தல பொலி­ஸா­ரினால் நேற்று மீட்­கப்­பட்­டுள்ளார். பசறைப் பகு­தியின் கமே­வலை தோட்­டத்­தி­லி­ருந்து, கரும்பு வெட்டும் தொழிலில் ஈடு­ப­டச்­சென்ற எஸ்.சண்­முகம் என்ற 46 வயது நிரம்­பிய தொழி­லா­ளியே இவ்­வாறு உயி­ரி­ழந்­துள்ளார். இவ­ரது சடலம், வைத்­திய பரி­சோ­த­னைக்­காக, புத்­தல அர­சினர் மருத்­து­வ­மனை பிரேத அறையில் வைக்­கப்­பட்­டுள்­ளது. இம் மரணம் இயற்கை மரணமா? அல்­லது கொலையா? என்­பது குறித்து, தீவிர விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

Read More

ஊவா; 6 ஆசனங்களை இழந்த ஜனாதிபதி தலைமையிலான ஐ.ம.சு.கூ

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு (ஐ.ம.சு.கூ) ஊவா மாகாண சபைத் தேர்தலில் வெற்றி பெற்று மீண்டும் ஆட்சியமைக்கின்றது. ஆனாலும், 2009ஆம் ஆண்டு தேர்தலோடு ஒப்பிடும் போது 6 ஆசனங்களை இழந்துள்ளதுடன், மக்களின் அபிமானத்தையும் பெருமளவில் இழந்துள்ளமை தேர்தல் முடிவுகளில் தெரிகின்றது. நேற்று சனிக்கிழமை இடம்பெற்ற ஊவா மாகாண சபைக்கான தேர்தல் முடிவுகள் நேற்று நள்ளிரவு முதல் வெளியாகி வந்தது. இறுதி முடிவு சற்று முன்னர் வெளியானது. அதன் பிரகாரம், ஐக்கிய மக்கள்…

Read More

தேர்தலை கண்காணிக்கும் ஐரோப்பிய ஒன்றியம்

ஐரோப்­பிய ஒன்­றி­யத்­தினால் எதிர்­வரும் ஆகஸ்ட் மாதம் 17ஆம் திகதி நடை­பெற இருக்கும் பாரா­ளு­மன்றத் தேர்­தலை கண்­கா­ணிப்­ப­தற்­கான நட­வ­டிக்­கைகள் மேற்­கொள்­ளப்­பட இருக்­கின்­றன. தேர்தலை கண்­கா­ணிப்­ப­தற்­காக ஆரம்­பிக்­கப்­பட்­டுள்ள தேர்தல் கண்­கா­ணிப்பு திட்­டத்தின் தலைமை அதி­கா­ரி­யாக ஐரோப்­பிய பாரா­ளு­மன்­றத்தின் உறுப்­பி­ன­ரான கிறிஸ்­டியன் ப்ரேடா நிய­மிக்­கப்­பட்­டுள்ளார். அவர் எதிர்­வரும் சில நாட்­களில் இலங்கை வரவுள்ளார்.இதேவேளை இலங்கையில் நடை­பெற இருக்கும் தேர்­தலை எந்­த­வித குறுக்­கீ­டு­களும் இல்­லாமல் நாட்டின் சட்ட திட்டங்களுக்கு அமைவாக கண்காணிப்பதே எமது நோக்கம் என்று கிறிஸ்டியன் ப்ரேடா தெரிவித்துள்ளார்.

Read More