Headlines

தமிழ் மொழி புறக்கணிக்கப்படுகின்றது: அஸ்வர் கடும் கவலையாம்!

இலங்கை ரூபவாஹினி கூட்டுத்தாபனத்தில் நேரடியாக ஒளிப்பரப்பபட்டு வரும் உலக கிண்ண கிரிக்கெட் போட்டி நிகழ்ச்சியின் போது விளம்பர அனுசரனையாளர்கள் தமிழ் மொழியை புறக்கணிப்பதாக முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஏ.எச்.எம் அஸ்வர்; ஊடக துறை அமைச்சர் கயந்த கருணாதிலகவிடம் முறையிட்டுள்ளார். மேற்படி “ஹதவத்தின் சிறிலாங்கியோ” என்ற விளம்பர நாமம் சிங்களத்தில் மாத்திரமே குறிப்பிடப்பட்டுள்ளது தமிழில் எழுதப்படவில்லை. எனவே இது குறித்த உரிய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்று அமைச்சரிடம் அவர் எடுத்துரைத்துள்ளார். உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி நேரடியாக…

Read More

“சுதந்திர வர்த்தக உடன்பாடு, சீன – இலங்கை வர்த்தகத்தில் மற்றொரு படிக்கல்லாக அமையும்” அமைச்சர் ரிஷாட் பதியுதீன் தெரிவிப்பு!

-ஊடகப்பிரிவு- இலங்கை – சீன சுதந்திர வர்த்தக ஒப்பந்தம் இரு நாடுகளுக்கிடையிலான பிரதான படிக்கல்லாக அமையுமெனவும், இலங்கையுடன் யுன்னான் மாநிலமும் அதேபோன்று சீனாவும் சாதகமான நவீன வர்த்தகத்துக்கு வழி திறக்குமெனவும், யுன்னான் மாகாண அரச ஆலோசகர் காவோ ஷக்ஸ்ன் ( Gao Shuxun ) தெரிவித்தார். யுன்னான் மாநில அரசாங்கத்தின் கம்யுனிஸ்ட் கட்சியின் அங்கத்தவர்களில் ஒருவரும், யுன்னான் அரசின் ஆலோசகர்களில் ஒருவருமான அவர், கைத்தொழில் வர்த்தக அமைச்சர் ரிஷாட் பதியுதீனை, அவரது அமைச்சில் நேற்று (23) சந்தித்துப்…

Read More

தமிழ் அரசியல் கைதிகளை விடுவிப்பதில் தவறில்லை : மங்கள ​

முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்த ராஜ­ப­க் ஷவின் ஆட்­சியின் போது 116 அர­சியல் கைதி­களை விடு­தலை செய்ய முடி­யு­மாயின் ஏன் மீத­முள்­ள­வர்­களை விடு­தலை செய்­ய­மு­டி­யாது. அர­சியல் கைதி­களை விடு­விப்­பதில் தவறில்லை. அவர்­களை சமூ­க­ம­யப்­ப­டுத்த வேண்டும் என வெளிவி­வ­கார அமைச்சர் மங்­கள சம­ர­வீர தெரி­வித்தார். அத்­துடன் பயங்­க­ர­வாத தடை சட்­டத்தை இன்னும் வைத்­தி­ருப்­பதில் அர்த்தம் கிடை­யாது. குறித்த தடைச்­சட்­டத்தை நீக்­கி­விட்டு சர்­வ­தேச பயங்­க­ர­வா­தி­க­ளுக்கு ஏற்றால் போல் புதிய சட்டம் உரு­வாக்­கப்­பட வேண்டும் என்றும் அவர் குறிப்­பிட்டார். ஐக்­கிய தேசிய கட்­சியின்…

Read More

இயற்கை அனர்த்தங்கள் ஏற்பட்டு மக்கள் துன்பப்படும்போது ஒழியும் இனவாதிகள்

– ஏ.எஸ்.எம்.ஜாவித் – இயற்கை அனர்த்தங்கள் ஏற்பட்டு மக்கள் துன்பப்படும்போது ஒழியும் இனவாதிகள். அனர்த்தங்கள் என்பது யாருக்கும் சொல்லிக் கொண்டு வருவதில்லை இதன் காரணமாகவே மனிதன் உற்பட உயிரினங்கள் அனைத்தும் அதன் அகோரத்தினை அனுபவிக்க வேண்டிய துர்ப்பாக்கிய நிலைமைகள் ஏற்படுகின்றன. இயற்கை அனர்த்தங்கள் ஏற்பட்டு மக்கள் துன்பப்படும்போது ஒழியும் இனவாதிகள். அனர்த்தம் என்பது பூகம்பமாகவோ, தீயாகவோ, வெள்ளம் மழை காரணமாகவோ அல்லது கடுங் குளிர் அல்லது பனிமூட்டம் காரணமாகவோ ஏற்படலாம். இவை காரணமாக பூமியில் வாழும் உயிரினங்களின் இயல்பு…

Read More

செம்மண்னோடை RDS வீதி வடிகால் திறப்பு விழா

செம்மண்னோடை RDS வீதி வடிகால் திறப்பு விழா நிகழ்வு கடந்த  30.01.2017 ஆம் திகதி அபிவிருத்தி குழு தலைவர் சம்மூன் தலைமையில் இடம்பெற்றது. இந்நிகழ்வில் பிரதம அதிதியாக கிராமிய பொருளாதார அலுவல்கள் பிரதி அமைச்சர் அமீர் அலி கலந்து கொண்டார். இந்நிகழ்வில் அல் ஹம்றா வித்தியாலய அதிபர் சுபைதீன், பிரதி அமைச்சரின் இணைப்பாளர்களான ஜனாப் தெளபீக் , முன்னாள் பிரதேச சபை உறுப்பினர் அல்பதா, பிறைந்துரைச்சேனை அபிவிருத்தி குழு தலைவர் மன்சூர் ஆதம்பாவா , மற்றும் ஊர்பிரமுகர்களும்…

Read More

முஸ்லிம்கள் அடிப்பட்ட போது அமைதியாக இருந்த மஹிந்தவுக்கு திடீர் ஞானம்: முஜிபூர்

முஸ்லிம்களுக்கு எதிராக அராஜகங்கள் கட்டவிழ்த்துவிடப்பட்டிருந்த தருணத்தில் முஸ்லிம்களின் பிரச்சினையை கண்டுக்கொள்ளாத முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தற்போது முஸ்லிம் தலைமைகளை சந்திக்க தீடீரென ஞானம் பிறந்தமைக்கான காரணம் என்ன?  என்று மேல் மாகாண சபை உறுப்பினரும் ஐ.தே.க மத்திய கொழும்பு அமைப்பாளருமான முஜிபூர் ரஹ்மான் கேள்வி எழுப்பினார். முஸ்லிம் சமூகத்திற்கு அநியாயமிழைக்கப்பட்டபோது சட்டத்தை அமுல்படுத்தாது வேடிக்கை பார்த்த முன்னாள் ஜனாதிபதி இன்று முஸ்லிம்களுடன் சந்திப்புகளை ஏற்பாடுசெய்வது நகைப்புகுரியதாக மாறியுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார். மத்திய கொழும்பு ஐக்கிய தேசிய…

Read More

புதிய அரசியலமைப்பு :பாராளுமன்றில் விவாதம் ;09 திருத்தங்கள்

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனாவின் ஆலோசனையின் கீழ் பிரதமா் பாராளுமன்றத்தில் சமா்ப்பித்த புதிய அரசியலமைப்புக்கு ஸ்ரீ.ல.சு.கட்சியின் அரசியல் குழு அமைச்சா் மகிந்த மற்றும் பைசா் முஸ்தபா ஆகியோா்கள் கொண்ட குழு 9 திருத்தங்களை மேற்கொண்டு பிரதமரிடம் சமா்ப்பித்துள்ளது. அதனை அவா் ஏற்றுள்ளாா். பாராளுமன்றத்தின் இவை விவாதிக்கப்படும். அரசியலமைப்பு திருத்தம் கொண்டுவரவோ தமது ஆலோசனையை சமா்ப்பிப்பதற்கு கடசிகள் தேவை இல்லை பாராளுமன்றத்தில் உள்ள 225 உறுப்பினர்களும் தனித்தனியாக சமா்ப்பிக்க முடியும். இங்கு உரையாற்றிய அமைச்சா் பைசா் முஸ்தபா தெரிவித்தாா். நேற்று…

Read More

அமைச்சர் ரிசாத் பதியுதீன் தலைமையிலான இலங்கைக் குழு உத்தியோபூர்வ விஜயமாக இன்று கட்டார் நாட்டுக்கு பயணம்

மூன்று நாள் விஜயம் செய்துள்ள இக்குழுவினர் இரு நாடுகளுக்கிடையிலான பொருளாதார மேம்படுத்தலுக்கும் ,முதலீடுகளை அதிகரிப்பதற்குமான உடன்படிக்கையை மேற்கொள்ளவுள்ளனர். கட்டார் நாட்டின் பொருளாதார வியாபார அமைச்சர் ஷேக் அகமட் பின் யாசின் பின் முகம்மட் அல்தானி மற்றும் கைத்தொழில் வர்த்தகத்துறை அமைச்சர் ரிசாத் பதியுதீன் ஆகியோர் முக்கியத்துவமிக்க இவ்வுடன்படிக்கையை கைச்சாத்திடவுள்ளனர். கைத்தொழில் மற்றும் வர்த்தகம் ,நிதி, நீதி,வெளிநாட்டு விவகாரம், மீன்பிடி மற்றும் நீரியல் வளம் , கலாச்சார மற்றும் கலை அலுவல்கள் ஆகிய அமைச்சுக்களின் உயர் அதிகாரிகள் இலங்கை…

Read More

இரண்டு நாட்களில் 10 பேர் இரட்டைக்குடியுரிமைக்கு விண்ணப்பம்!

இரட்டை குடியுரிமைக்கான விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளல், 2011 ஆம் ஆண்டுக்கு பின்னர் கடந்த திங்கட்கிழமை முதல் ஆரம்பமானது என்பது குறிப்பிடத்தக்கது. பிரஜாவுரிமை சட்டம் 1948ஆம் 18 ஆம் இலக்கத்தின் கீழ் இலங்கையுடன் இரட்டைக்குடியுரிமை உடன்படிக்கையை கொண்டுள்ள 7 நாடுகளின் பிரஜைகள் இரட்டைக்குடியுரிமைக்கு விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி அமெரிக்கா, கனடா, அவுஸ்திரேலியா, நியூஸிலாந்து, பிரித்தானியா, பிரான்ஸ், சுவீடன், சுவிட்ஸலாந்து, இத்தாலி ஆகிய நாடுகளின் பிரஜைகள் இலங்கையில் இரட்டைக்குடியுரிமைக்காக விண்ணப்பிக்க முடியும். இதற்கான விண்ணப்பங்களையும் விபரங்களையும் www.immigration.gov.lk என்ற இணைத்தளத்தின்…

Read More

கெகுணகொல்லையில் மக்கள் காங்கிரஸின் தேர்தல் பிரசாரக் கூட்டம்.. அமைச்சர் ரிஷாட் பங்கேற்பு!

-ஊடகப்பிரிவு- குருநாகல் மாவட்டத்தின் குளியாப்பிட்டிய பிரதேச சபைக்கு அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் மயில் சின்னத்தில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து, இன்று மாலை (07) கெகுணகொல்லையில் இடம்பெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தில், மக்கள் காங்கிரஸின் தலைவரும், அமைச்சருமான ரிஷாட் பதியுதீன் கலந்துகொண்டு உரையாற்றினார். முன்னாள் மாகாணசபை உறுப்பினர் எம்.என்.நஸீர் தலைமையில் இடம்பெற்ற இந்தக் கூட்டத்தில், மக்கள் காங்கிரஸின் முக்கியஸ்தர்கள் உட்பட பெருந்திரளான பொதுமக்கள் பங்கேற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.    

Read More

ஈபிள் கோபுரத்தில் போராட்டத்தில் ஈடுபட்ட ஆடுகள்

பிரான்ஸ் நாட்டில் விவசாயப் பண்ணைகளில் வளர்ந்து வரும் செம்மறியாடுகளை ஓநாய்கள் தாக்கி வருகின்றன. அவற்றை காப்பதற்கு பிரான்ஸ் அரசு எவ்வித நடவடிக்கையும் எடுக்காததைக் கண்டித்து நேற்று பாரீஸ் நகரில் ஈபிள் கோபுரத்தின் முன் விவசாயிகள் ஆடுகளுடன் போராட்டம் நடத்தினார்கள்.பிரான்ஸ் நாட்டின் மத்திய பகுதியான அவுவர்ஜின் மாநிலத்தில் ஏராளமான விவசாய பண்ணைகள் உள்ளன. இங்குள்ள விவசாயிகள் விவசாயத்துடன் ஏராளமான செம்மறியாடுகளையும் வளர்த்து வருகின்றனர்.இங்கு வளரும் செம்மறியாடுகளை, அப்பகுதி காடுகளில் பெரும் எண்ணிக்கையில் உலவி வரும் ஓநாய்கள் கொன்று வருகின்றன….

Read More

யாழ்.பல்கலையில் மலர் வளையம்

யாழ்.பல்கலைக்கழகத்தில் நேற்று முதலாவது பேரவைக் கூட்டம் ஆரம்பமான நிலையில் பதிவாளர் அலுவலகத்தின் முன்பாக இனந்தெரியாதவர்களால் மலர் வளையம் வைக்கப்பட்டுள்ளது. பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவர் மற்றும் ஆணைக்குழுவின் உறுப்பினர்களுக்கு என்று எழுதப்பட்ட வாசகமும் அதில் பொறிக்கப்பட்டுள்ளது. அதனை யார் வைத்தார்கள் என்பது அங்கள்ள எவருக்கும் தெரியாதுள்ளது. பல்கலைக்கழக பேரவை உறுப்பினர்கள் புதிதாக தெரிவு செய்யப்பட்ட பின்னர் முதல் கூட்டம் நேற்று இடம்பெற்றது. இதன் போதே பதிவாளர் அலுவலகத்தின் முன்பாக குறித்த மலர் வலையம் வைக்கப்பட்டுள்ளது.

Read More