Headlines

கைத்தொழில் மற்றும் வார்த்தக அமைச்சின் புதிய செயலாளராக ரஞ்சித் அசோக பதவியேற்பு

கைத்தொழில் மற்றும் வார்த்தக அமைச்சின் புதிய செயலாளராக நியமனம் பெற்ற திரு கே.டி.என்.ரஞ்சித் அசோக இன்றைய தினம் (04/ 10/ 2017) அமைச்சில் தனது பொறுப்புக்களை ஏற்றுக்கொண்டார். இந்தப் பதவியேற்பு நிகழ்வில் கைத்தொழில், வர்த்தக அமைச்சர் ரிஷாட் பதியுதீன் பங்கேற்றார். புதிய செயலாளராக பதவியேற்ற ரஞ்சித் அசோக நிர்வாக சேவையில் விஷேட தரத்தில் ஓர் உத்தியோகத்தர் ஆவார். 1990 ஆம் ஆண்டு நிர்வாக சேவையில் இணைந்த அவர் 27 வருடங்களுக்குள் நிர்வாக சேவையில் பல பதவிகளை வகித்துள்ளார்….

Read More

யார் இந்த முஹம்மது (ஸல்) ? ஒரு மாற்று மத சகோதரியின் பதிவு

இந்து மற்றும் பௌத்தத்திற்குப் பிறகு தற்போது இஸ்லாமை ஆழமாகப் படித்து வருகிறேன் . முஹம்மது நபி அடிப்படையில் ஒரு புரட்சியாளரே. மக்களுக்கிடையே நிலவி வரும் அநீதியான , சரிசமமற்ற வேறுபாடுகளுக்கு, சுரண்டல்களுக்கு (தனது சொந்த இனத்திற்கும் )எதிராக வெகுண்டெழுந்தவர் . பாலைவனப் பிரதேசத்தில் பல்வேறு இனக்குழுக்களுக்கு இடையில் தொடர்ந்த சச்சரவுகள் , வன்முறைகள் மற்றும் தாக்குதல்கள் நிலவிவந்த சூழலில் ஒரே கடவுள் என்ற சித்தாந்தத்தின் கீழ் அனைவரையும் ஒருங்கிணைத்து, அதை ஏற்றுக்கொண்டவர்கள் ஒருவருக்கு ஒருவர் ஆதரவாக இருக்கவேண்டும், தாக்குதலில் ஈடுபடக்கூடாது என்ற…

Read More

சாலாவ வெடிப்பை வீடியோ செய்த மஹிந்த

கொஸ்கம, சாலாவ இராணுவ முகாமின் ஆயுதக்களஞ்சியசாலையில் ஏற்பட்ட வெடிப்பு சம்பவத்தை முன்னாள் ஜனாதிபதியும் குருநாகல் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான மஹிந்த ராஜபக்ஷ, தன்னுடைய அலைபேசியில் வீடியோ செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, கொழும்பில் உள்ள தனியார் வைத்தியசாலையில், தல்தென ஞானசார தேரர் சிகிச்சைப் பெற்றுவருகின்றார். அவரை பார்ப்பதற்காக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ சென்றிருந்தார் அவருடன் நாடாளுமன்ற உறுப்பினர் பந்துல குணவர்தன, முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் உதித் லொக்குபண்டார ஆகியோரும் சென்றிருந்தனர்….

Read More

காடுகளின் பரப்பளவை மேலும் அதிகரிக்க நடவடிக்கை

இலங்கையில் காடுகளின் பரப்பளவை மேலும் (29 – 32 சதவிதமாக) அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று மகாவலி அபிவிருத்தி மற்றும் சுற்றாடல் பிரதி அமைச்சர் அனுராதா ஜயரத்ன கூறினார்.

Read More

P.J. க்கு போர்க்கொடி தூக்குவதிலுள்ள பயங்கர ஆபத்துக்கள்..!

-ஷெய்க் மஸிஹுத்தீன் இனாமுல்லாஹ்- தமிழ் நாடு தவ்ஹீது ஜமாத்தின் ஸ்தாபகர் மௌலவி ஜெய்னுலாப்தீன் அவர்களது இலங்கை வருகை குறித்து ஊடகங்களில் பூதாகரமாக வெளியிடப்படுகின்ற ஆதரவானதும் எதிரானதுமான வாதப் பிரதிவாதங்கள் கவலை தருகின்றது. தனிப்பட்ட முறையில் எனக்கு உடன்பாடுகள் இல்லாவிட்டாலும் சர்வதேச அளவில் அஹ்லுஸ்ஸுன்னா அறிஞர்கள் மத்தியில் நிலவுகின்ற கருத்து வேறுபாடுகள் போன்றே அவரது சில நிலைப்பாடுகளையும் நான் காண்கின்றேன், அவரது சில கருத்துக்கள் மிகைப்படுத்தப்பட்ட திரிபுகளுக்கும் உள்ளாகியுள்ளன. இலங்கையில் உள்ள பிரபலமான இஸ்லாமிய அமைப்பு ஒன்று தமது…

Read More

ஸ்ரீலங்கன் விமான சேவை நிறுவனம் டுபாய் வங்கியொன்றிடம் அடகு வைப்பு

ஸ்ரீலங்கன் விமான சேவை நிறுவனம் டுபாய் வங்கியொன்றிடம் அடகு வைக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. முன்னாள் ஸ்ரீலங்கன் விமான நிறுவனத்தின் முன்னாள் தலைவர் டுபாய் மஸ்ரேக் வங்கியில் 23079 மில்லியன் ரூபா பிணைக் கடன் பெற்றுக்கொள்ளப்பட்டுள்ளது. கடந்த 2014ம் ஆண்டு இவ்வாறு கடன் பெற்றுக்கொள்ளப்பட்டுள்ளது. திறைசேரி பிணையின் அடிப்படையில் பெற்றுக்கொள்ளப்படும் கடனானது அடகுக் கடனுக்கு நிகரானது என தெரிவிக்கப்படுகிறது. டுபாய் வங்கியிடமிருந்து பெற்றுக்கொள்ளப்பட்ட கடன் அடகுக் கடனுக்கு நிகரானது என பொருளியல் நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். 2014ம் ஆண்டு நிறைவில் செலுத்தப்படாத கடன்…

Read More

கட்சியின் செயற்குழு கூட்டம் இரத்து : ஜனாதிபதி அதிரடி

இன்று இரவு நடைபெறவிருந்த ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் செயற்குழு கூட்டத்தை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இரத்து செய்துள்ளார். ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் செயற்குழு கூட்டம் இன்று இரவு 8 மணியளவில் இலங்கை மன்ற கல்லூரியில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் நடைபெறவிருப்பதாக கட்சியின்  பொதுச் செயலாளர் அனுர பிரியதர்ஷன யாப்பா தெரிவித்திருந்தார். இந்நிலையில் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி மற்றும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு ஆகியவற்றின் செயலாளர்களிடம், கட்சி செயற்குழு கூட்டத்தை இரத்துச்…

Read More

போலி இணையத்தளங்கள் வாயிலாக அமைச்சர் றிஷாத்தை கேவலப்படுத்தியவர்கள் மாட்டிக்கொண்டனர்

IPL சூதாட்டத்தில் ஆயிரம் கோடி ரூபாய்களை அமைச்சர் றிசாத் இழந்தார் எனவும், பலகோடி கறுப்புப் பணத்தை, வெளிநாட்டவர் ஒருவர் மூலம், வெள்ளைப் பணமாக மாற்றி வருகின்றார் எனவும் போலி இணையத்தளங்கள் வாயிலாக செய்திகளை வெளியிட்ட சபான் சிராஜ், அபாம் சபீக் ஆகியோர் குற்றப்புலனாய்வில் வகையாக மாட்டிக்கொண்டனர். சவூதி அரேபியா, ரியாதில் பணிபுரியும் அக்கரைப்பற்று சபான் சிராஜ் என்பவரும், முஸ்லிம் காங்கிரசின் ஊடகப்பிரிவில் பணியாற்றும், பேருவளையைச் சேர்ந்த அபாம் சபீக் என்பவரும் அமைச்சர் றிசாத்தை வீழ்த்தும் நோக்கில் இவ்வாறான…

Read More

டிரம்பை வீழ்த்த ஹிலாரியுடன் கைகோர்க்கும் பெர்னீ சாண்டர்ஸ்

அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் ஜனநாயக கட்சி சார்பில் முன்னாள் வெளியுறவு மந்திரி ஹிலாரி கிளிண்டனும் (வயது 68), குடியரசு கட்சி தரப்பில் பெரும் கோடீசுவர தொழில் அதிபர் டொனால்டு டிரம்பும் (69) போட்டியிடுவது உறுதியாகி விட்டது. ஜனநாயக கட்சியின் வேட்பாளர் போட்டியில் ஹிலாரிக்கு கடும்போட்டியாக திகழ்ந்து வந்தவர், அந்த நாட்டின் பாராளுமன்ற உறுப்பினர் பெர்னீ சாண்டர்ஸ். இப்போது முதல் முறையாக அவர் ஹிலாரி கிளிண்டனுடன் இணைந்து பணியாற்ற முன்வந்துள்ளார். இது தொடர்பாக அவர் தனது ஆதரவாளர்களிடம் பேசினார்….

Read More

ஜேர்மன் விமான விபத்து: துணை விமானியின் கடைசி வார்த்தைகள்…மலையில் மோதும் வரை திக் திக் நிமிடங்கள்

ஜேர்மன் விமானம் விபத்துக்குள்ளாவதற்கு சில நிமிடங்களுக்கு முன் துணை விமானி பேசிய கடைசி வார்த்தைகள் தற்போது வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.கடந்த 24ம் திகதி பிரான்ஸ் ஆல்ப்ஸ் மலையில் மோதி விபத்துக்குள்ளான விமானத்தில் முதன்மை விமானியும், துணை விமானியும் பேசிக்கொண்ட உரையாடல்களை கருப்பு பெட்டியிலிருந்து அதிகாரிகள் சேகரித்துள்ளனர். அதில், முதன்மை விமானியான Patrick Sondenheimer(34) என்பவர் பயணிகளை நோக்கி பார்சிலோனாவிலிருந்து விமானம் 26 நிமிடங்கள் தாமதமாக கிளம்புவதற்கு தான் மன்னிப்பு கோருவதாகவும், ஆனால், டஸல்டார்ஃப் (Dusseldorf) விமான நிலையத்திற்கு…

Read More

புனித இடங்களில் 18,680 மெகாவட்ஸ் மின்சாரம்!

புனித ஹஜ்ஜை முன்னிட்டு புனித ஆலயமான மஸ்ஜிதுல் ஹரம் மற்றும் ஹஜ்ஜிற்குரிய புனித இடங்களில் 18,680 MW (மெகாவட்ஸ்) சக்தி கொண்ட மின்சாரம் தற்பொழுது வழங்கப்பட்டுள்ளதாக சவுதி மின்சார நிறுவனத்தின் சிரேஷ்ட அலுவலர் சியாட் பின் அல் செய்ஹா தெரிவத்துள்ளார். இப்பாரிய திட்டத்தின் ஒரு பகுதி தந்பொழுது நிறைவடைந்திருப்பதாகவும், மற்றுமொரு பகுதி தொடர்வதாகவும் அல் செய்ஹா தெரிவிக்கிறார். இதன்படி, ஹரம், ஜபல் ஒமர், மக்கா நகர், புனித இடங்களின் பாதுகாப்பு தலைமைக்காரியாலயங்கள் மற்றும் மினா உட்பட இதர…

Read More