Headlines

நீண்டகால தேவையாக இருந்த குடிநீர் பிரச்சினைக்கு தீர்வு!

சாளைம்பைக்கேணி 01ஆம், 05ஆம் கொலனி (அமீர் அலி மைதானம்) பிரதேச மக்கள், மிக நீண்டகாலமாக குடிநீர் பெறுவதில் பல அசௌகரியங்களை எதிர்கொண்டு வந்தனர். இந்தப் பிரச்சினைக்கு தீர்வாக குழாய் கிணறை புனரமைத்து பாவனைக்கு உதவும் வகையில், செயற்படுத்த அதிக பிரயத்தனம் மேற்கொண்டு வந்தனர். அந்த வகையில், அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் அம்பாறை மாவட்ட இளைஞர் அமைப்பாளரும், மயோன் சமூக சேவை அமைப்பின் தலைவருமான றிஸ்லி முஸ்தபாவின் கவனத்திற்கு இப்பிரச்சினை கிராமவாசிகளால் முன்வைக்கப்பட்டது. மக்களின் அத்தியாவாசிய தேவை…

Read More

வவுனியா, செட்டிக்குளம் பிரதேச செயலக அபிவிருத்திக் குழுக் கூட்டம்!

வவுனியா, செட்டிக்குளம் பிரதேச செயலக அபிவிருத்திக் குழுக் கூட்டம் பிரதி அமைச்சர் உபாலி சமரசிங்க தலைமையில் இன்று (26) இடம்பெற்றது. செட்டிகுளம் பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்ற இக் கூட்டத்தில், அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் பிரதித் தவிசாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான முத்து முஹம்மட், தேசிய மக்கள் சக்தியின் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்களான ம.ஜெகதீஸ்வரன், செ.திலகநாதன், பிரதேச செயலாளர் திருமதி சுலோஜனா மற்றும் அரச அதிகாரிகள், கிராம அலுவலர்கள், அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், கிராம மட்ட…

Read More

பேராசிரியர் இஸ்ஹாக் அவர்களின் மறைவுக்கு தாஹிர் எம்.பி அனுதாபம்!

பேராசிரியர் இஸ்ஹாக் அவர்களின் மறைவுக்கு அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தேசிய அமைப்பாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான அஷ்ரப் தாஹிர் அனுதாபம் தெரிவித்துள்ளார் அவர் தனது அனுதாப அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது, “இலங்கை தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் வேந்தர் பேராசிரியர் இஸ்ஹாக் (இஸ்ஹாக் ஹாஜியார்) அவர்கள், புனித மக்கா நகரில் வபாத்தானார் என்ற கவலை மிக்க செய்தியோடு இந்த நாள் நகர்கின்றது. தென்கிழக்கு பல்கலைக்கழகத்தின் வேந்தராக இருந்து, நிந்தவூருக்கும் தென்கிழக்கு அழகிற்கும் தனித்துவ அடையாளமாக மிளிர்ந்தவர். பல்வேறு உயர்பதவிகளை உலகின் பல்வேறு…

Read More

சுனாமி பேரலையின் 20ஆம் ஆண்டு நிகழ்வு!

சுனாமி பேரலையின் 20ஆம் ஆண்டு நிகழ்வு, இன்று (26) காலை வவுனியா, பூந்தோட்டம், சுனாமி நினைவுத் தூபி முற்றத்தில் நடைபெற்றது. இந்நிகழ்வில், வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் பிரதித் தவிசாளருமான முத்து முஹம்மட் மற்றும் பிரதி அமைச்சர் உபாலி சமரசிங்க, பாராளுமன்ற உறுப்பினர்களான திலகநாதன், ஜெகதீஸ்வரன் உட்பட சர்வமத பிரதிநிதிகள் எனப் பலரும் கலந்துகொண்டனர்.

Read More

முத்து முஹம்மட் எம்.பியின் நத்தார் தின வாழ்த்து செய்தி!

சமத்துவம், சகோதரத்துவம், ஈகை ஆகிய மனிதநேய பண்புகளின் விழாவாக, அன்பைப் பரிமாறி, ஏழை எளியோர்களுக்கு உதவும் திருநாள் தினமான இன்று அனைவருக்கும் இனிய கிறிஸ்துமஸ் நல்வாழ்த்துகள்.

Read More

தலைவர் ரிஷாட்டின் நத்தார் தின வாழ்த்து செய்தி!

சமாதானம், புரிந்துணர்வு என்பனவற்றைத் தோற்றுவிக்கும் தினமாக, இன்றைய கிறிஸ்மஸ் பண்டிகை அமைய வாழ்த்துவதாக அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியுதீன் தெரிவித்துள்ளார். இன்றைய தினம் கிறிஸ்மஸ் பண்டிகையைக் கொண்டாடும் மக்களுக்கு வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில், மானிட சமூகமானது ஒவ்வொருவர் மீதும் அன்புடனும் இரக்க குணத்துடனும் வாழ்தல் என்ற பிரதான கட்டமைப்பினைக்கொண்டதாகும். இதனை, அனைத்து மதங்களும் வலியுறுத்தி நிற்கும் வேளையில், கிறிஸ்தவ சகோதர சமூகமும் இந்த…

Read More

சம்மாந்துறை ஆதார வைத்தியசாலைக்கு தாஹிர் எம்.பி விஜயம்!

சம்மாந்துறை ஆதார வைத்தியசாலைக்கு விஜயம் மேற்கொண்ட (24) பாராளுமன்ற உறுப்பினர் அஷ்ரப் தாஹிர், வைத்திய அத்தியட்சகர் டொக்டர் டீ.பிரபாசங்கரை சந்தித்துக் கலந்துரையாடினார் இதன்போது, சம்மாந்துறை பிரதேசத்திற்கான அரச ஒசுசல ஒன்றின் தேவை குறித்து கலந்துரையாடியதுடன், வைத்தியசாலையின் தேவைகள் தொடர்பிலும் பாராளுமன்ற உறுப்பினர் கேட்டறிந்துகொண்டார். இந்நிகழ்வில், சம்மாந்துறை பிரதேச முன்னாள் தவிசாளரும் கட்சியின் அரசியல் அதிகாரபீட உறுப்பினருமான ஐ.எல்.எம்.மாஹிர் மற்றும் பாராளுமன்ற உறுப்பினரின் பிரத்தியக செயலாளர் எஸ்.முஹம்மட் அலி ஜின்னா உட்பட வைத்தியசாலையின் உத்தியோகத்தர்களும் கலந்துகொண்டிருந்தனர்.

Read More

சம்மாந்துறையில் ஒசுசல, பஸ் டிப்போ நிறுவுவதற்கு தாஹிர் MP நடவடிக்கை!

சம்மாந்துறை பிரதேச அபிவிருத்தி ஒருங்கிணைப்பு குழு கூட்டம் இன்று (24) ஒருங்கிணைப்புக் குழுவின் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான ஏ.ஆதம்பாவா தலைமையில், பிரதேச செயலகக் கேட்போர்கூடத்தில் நடைபெற்றது. இதன்போது சம்மாந்துறை பிரதேசத்திற்கான அரச ஒசுசல ஒன்றினை நிறுவுதல், கல்முனை பஸ் டிப்போவுடன் சம்மாந்துறை பஸ் டிப்போவினை மீண்டும் சம்மாந்துறையில் நிறுவுதல் போன்ற விடயங்கள் பாராளுமன்ற உறுப்பினர் அஷ்ரப் தாஹிரினால் முன்மொழியப்பட்டு கலந்துரையாடப்பட்டிருந்தது. இவ் அபிவிருத்தி ஒருங்கிணைப்பு குழுக் கூட்டத்தில் சம்மாந்துறை பிரதேச நீர்பாசன பிரச்சினைகள், சம்மாந்துறை வைத்தியசாலை காணி…

Read More

நாச்சியாதீவு அல்-ஹிகம் அரபுக் கல்லூரியின் பட்டமளிப்பு விழா!

பிரதம அதிதியாக தாரிக் ஹாஜியார் பங்கேற்பு! அனுராதபுரம், நாச்சியாதீவு அல் – ஹிகம் அரபுக் கல்லூரியின் 02வது (அல் ஹாபிழ், அல் ஆலிம்) பட்டமளிப்பு விழா, ஞாயிற்றுக்கிழமை (22) கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது. இந் நிகழ்வில், பிரதம அதிதியாக அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் பிரதிப் பொருளாளரும் அனுராதபுர மாவட்ட அமைப்பாளருமான A.R.M.தாரிக் கலந்துகொண்டு விழாவினை சிறப்பித்தார்.

Read More

தாஹிர் எம்.பி – அம்பாறை மாவட்ட அரசாங்க அதிபருக்கிடையிலான சந்திப்பு!

பாராளுமன்ற உறுப்பினர் அஷ்ரப் தாஹிர் மற்றும் அம்பாறை மாவட்ட அரசாங்க அதிபர் சிந்தக அபேவிக்ரம ஆகியோருக்கிடையிலான சினேகபூர்வ சந்திப்பொன்று, திங்கட்கிழமை (23) மாவட்ட செயலகத்தில் இடம்பெற்றது. இதன்போது, அம்பாறை மாவட்டத்தில், கடந்த வெள்ள அனர்த்தத்தினால் ஏற்பட்ட பாதிப்புக்களுக்கான நஷ்டஈடுகளை வழங்குவது தொடர்பில் தாஹிர் எம்.பி கேட்டறிந்துகொண்டார். இதேவேளை, அம்பாறை மாவட்டத்தில் ஏற்பட்ட வெள்ளப் பாதிப்புக்கள் தொடர்பில் மதிப்பீடு செய்யப்பட்டு, பாதிக்கப்பட்டவர்களுக்கு நஷ்டஈடுகளை பெற்றுக்கொடுப்பதற்கான நடவடிக்கைகளை தான் மேற்கொண்டுள்ளதாகவும், அதற்கான நிதியொதுக்கீடுகள் அரசாங்கத்திடமிருந்து கிடைக்கப்பெற்றதும், முறையாக பகிர்ந்தளிப்பதற்கு தயாராக…

Read More

புத்தளம் அஷ்ரப் பூங்காவுக்கு தலைவர் ரிஷாட்டின் நிதியுதவியில், உபகரணங்கள் வழங்கிவைப்பு!

அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியுதீனின் (முன்னைய அரசாங்கத்தின்) பன்முகப்படுத்தப்பட்ட நிதியிலிருந்து, புத்தளம், அஷ்ரப் ஞாபகார்த்த பூங்காவுக்கு, சுமார் 10 இலட்சம் ரூபா பெறுமதியில், விளையாட்டு உபகரணங்கள் வழங்கி வைக்கப்பட்டது. சிறுவர் பூங்காவின் விளையாட்டு செயற்பாடுகளுக்கான உபகரணங்கள் சேதமடைந்திருந்த நிலையில், அவற்றை சீர்செய்ய வேண்டியதன் அவசியம் தொடர்பில், கட்சியின் புத்தளம் மாவட்ட செயற்குழுவினால், தலைவர் ரிஷாட் பதியுதீனிடம் எத்திவைக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து, தலைவரின் விசேட பணிப்புரையின் கீழ், மேற்படி வேலைத்திட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது….

Read More

தலைவர் ரிஷாட்டின் நிதியுதவியில் புத்தளம் GAZZELES விளையாட்டுக் கழகத்திற்கு உபகரணங்கள் வழங்கி வைப்பு!

அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியுதீனின் (முன்னைய அரசாங்கத்தின்) பன்முகப்படுத்தப்பட்ட நிதியிலிருந்து, முன்னாள் நகரசபை பிரதித் தலைவரும் கட்சியின் உயர்பீட உறுப்பினருமான AO அலிகானின் வேண்டுகோளின் பேரில், புத்தளம் GAZZELES விளையாட்டுக் கழகத்திற்கு, விளையாட்டு உபகரணங்கள் (20) வழங்கி வைக்கப்பட்டது. கட்சியின் உயர்பீட உறுப்பினர்களான M.H.முஹம்மத் மற்றும் AO அலிகான் ஆகியோரினால், கழக உறுப்பினர்களிடம் இவ் உபகரணங்கள் கையளிக்கப்பட்டன.

Read More